அமேசானுக்குப் போட்டியாக அறிமுகமானது கூகுள் ஷாப்பிங்..!

சில பொருட்களுக்கு ‘கூகுள் கியாரண்டி’ என்னும் ஆப்ஷனும் உள்ளது.

அமேசானுக்குப் போட்டியாக அறிமுகமானது கூகுள் ஷாப்பிங்..!
கூகுள் ஷாப்பிங்
  • News18
  • Last Updated: July 24, 2019, 7:18 PM IST
  • Share this:
அமெரிக்காவில் அமேசான் ஆன்லைன் விற்பனைத் தளத்துக்குப் போட்டியாக கூகுள் ஷாப்பிங் தளத்தை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

கூகுள் ஷாப்பிங் தளம் இதர நாடுகளில் உள்ளோரும் பார்க்க முடியும். ஆனால், விற்பனை தற்போதைய சூழலில் அமெரிக்காவில் மட்டுமே உள்ளது. அமெரிக்காவில் கூகுள் ஷாப்பிங் தளத்தை அறிமுகம் செய்யும் முன்னர் இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் பரிசோதித்துப் பார்த்தது கூகுள்.

இந்திய கூகுள் ஷாப்பிங் தளம் ஹிந்தி மொழியிலும் இருந்தது. இதேபோல், மொபைல், டெஸ்க்டாப் ஆகிய இரண்டு தளங்களிலும் இத்தளத்தைப் பார்வையிட முடியும். இந்தியாவில் இத்தளம் இன்னும் சோதனைக் கட்டத்தில்தான் உள்ளது.


கூகுள் அக்கவுண்ட் அல்லது ஜிமெயில் மூலம் இத்தளத்தில் கணக்கு வைக்கலாம். அமெரிக்காவில் இத்தளத்துக்கு என்று தனியாக சேமிப்புக் கிடங்கு ஏதும் இல்லை. ஆனால், விற்பனையாளர் நேரடியாக வாடிக்கையாளர் இருப்பிடத்தில் பொருட்களை டெலிவரி செய்யும் வகையில் விற்பனை சேவை இருக்கும் எனக் கூறப்படுகிறது.

சில பொருட்களுக்கு ‘கூகுள் கியாரண்டி’ என்னும் ஆப்ஷனும் உள்ளது. சரியான நேரத்தில் பொருட்கள் டெலிவரி செய்யப்படவில்லை எனில் இந்த ஆப்ஷன் மூலம் பணம் திரும்ப வழங்கப்படும் என்றும் கூகுள் அமெரிக்காவில் அறிவித்துள்ளது.

மேலும் பார்க்க: 199 ரூபாய்க்கு நெட்ஃப்ளிக்ஸ்... இந்திய ரசிகர்களைக் கவர சிறப்பு ஆஃபர்..!
First published: July 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்