இனி கூகுள் தேடலிலேயே ரீசார்ஜ் செய்யலாம்

இனி கூகுள் தேடலிலேயே ரீசார்ஜ் செய்யலாம்
Google Recharge
  • Share this:
மொபைல்ஃபோன் நெட்வொர்க்கில் Google search-இல் தேவையான ப்ரீபெய்டு திட்டத்தை தேர்ந்தெடுத்து, ரீசார்ஜ் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம்.

மொபைல்ஃபோன் நெட்வொர்க்கில் தேவையான ப்ரீபெய்டு திட்டத்தை, Google search-இல் கண்டறிந்து பிற கட்டணங்களை ஒப்பிட்டு ரீசார்ஜ் செய்யும் வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா, ஜியோ மற்றும் பி.எஸ்.என். எல் சிம் கார்டுகளை பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு மொபைல்ஃபோன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதி தற்போது கிடைக்கிறது.

கூகுள் செர்ச் பக்கத்தில் ப்ரீபெய்டு மொபைல் ரீசார்ஜ் என்று டைப் செய்தால் நாம் பயன்படுத்தும் எண் அல்லது நமக்குத் தேவைப்படும் எண்ணுக்குரிய திட்டங்களை காட்டும். அதில் நாம் தேர்ந்தெடுக்கும் திட்டங்களுக்கு பே_டிஎம்,கூகுள் பே, ஃப்ரீசார்ஜ், மொபிக்விக் போன்ற வாலெட்டுகளில் வழங்கப்படும் சலுகைகள் பற்றியும் தெரியப்படுத்தும். பின்னர் நமக்கு தேவையான வாலெட்டைத் தேர்ந்தெடுத்து ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.


Also See...

 
First published: February 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்