• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • கூகுள் தேடல் புதிய அம்சம் – செட்டிங்க்ஸ் பொத்தானில் டார்க் மோடு மாற்றும் வசதி!

கூகுள் தேடல் புதிய அம்சம் – செட்டிங்க்ஸ் பொத்தானில் டார்க் மோடு மாற்றும் வசதி!

கூகுள் நிறுவனம்

கூகுள் நிறுவனம்

கூகுள் தேடல் உலகின் முதல் சர்ச் இன்ஜின் ஆகும். என்ன தகவல் வேண்டுமானாலும் கூகுள் தேடலில் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

  • Share this:
கூகுள் தேடலின் இந்த டார்க் மோடு டாகிள் அம்சம் யூசர்களுக்கு ஏற்கனவே அறிமுகமாகி இருந்தாலும், இப்போது எளிதாகக் கண்டுபிடிக்கப்படும் வகையில், ஒரே இடத்திலிருந்து அனைத்தும் அக்சஸ் செய்யப்படும் வகையில் இப்போது மாற்றப்பட்டுள்ளது. இணைய உலகில் தேடல் சாம்ராஜ்த்தை நடத்தி வரும் கூகுள், தன்னுடைய பிரதானத் தேடல் பக்கத்தில் வலது மேற்புறத்தில் புதிய செட்டிங்க்ஸ் பொத்தானை அப்டேட் செய்துள்ளது. தேடல் அமைப்புகள், மொழிகள், வெளிப்படையான முடிவு, அட்வான்ஸ்டு தேடல், வரலாறு, தரவு மற்றும் உதவி ஆகியவற்றை யூசர்கள் சுலபமாக அணுகலாம்.

கூகுள் தேடல் உலகின் முதல் சேர்ச் இன்ஜின் ஆகும். என்ன தகவல் வேண்டுமானாலும் கூகுள் தேடலில் மூலம் பெற்றுக் கொள்ளலாம். யூசர் அனுபவத்தை மேம்படுத்தி வரும் கூகுள் நிறுவனம், அவ்வபோது புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியும், ஏற்கனவே இருக்கும் அம்சங்களை மேம்படுத்தியும் வருகிறது. இதில் புதிதாக அப்டேட் செய்யப்பட்ட அம்சம், டார்க் மோடு டாகிள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த விருப்பத்தேர்வுகள் புதியவை அல்ல என்றாலும், அவை மேலும் கண்டறியக்கூடியதாகவும், மக்கள் ஒரே இடத்திலிருந்து அனைத்தையும் எளிதாக அணுகுவதற்காகவும் இந்த அமைப்பு புதுப்பிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இது இடைமுகத்தை கூடுதலாக மேம்படுத்துகிறது. இந்த அம்சம் பரவலாக தெரிந்தாலும், இன்னும் அனைவருக்கும் அப்டேட் செய்யப்படவில்லை. எனவே, புதிய அமைப்புகள் மெனுவை நீங்கள் காணவில்லையெனில், கவலைப்பட வேண்டாம். அது விரைவில் உங்களுக்கு அப்டேட் ஆகும்.

கூடார்க்ள் சோதனை செய்து கொண்டிருப்பதாகத் தோன்றும் மற்றொரு அம்சம் மொபைலில் தனிப்பயனாக்கப்பட்ட பின்னணி படங்கள். இந்த அம்சம் பெரும்பாலான தேடல் முடிவுகளுடன் பரவலாகக் கிடைக்கவில்லை, ஆனால் ஒரு சிலவற்றோடு சரியாக வேலை செய்வதாகத் தெரிகிறது. உங்கள் தேடலின் அடிப்படையில் பின்னணி போல செயல்படும் தனிப்பயனாக்கப்பட்ட படத்தை Google காண்பிக்கிறது.

Also read... Passes API: ஆண்ட்ராய்டு போன்களில் கோவிட் -19 தடுப்பூசி அட்டைகளை சேமிக்க அனுமதிக்கும் கூகுள் பாசஸ் ஏபிஐ!

கூகுள் 'டார்க் மோட்' எனப்படும் இரவு பயன்முறைக்காக பிரத்யேக மாற்றீட்டை தற்போது சோதிக்கிறது. இது, எளிதாக அணுக புதிய 'அமைப்புகள்' பொத்தானுக்கு அடுத்ததாக வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த அப்டேட் தற்போது எல்லா பயனர்களுக்கும் கிடைக்கவில்லை. சோதனையில் இருப்பதால், ஒரு சில குறிப்பிட தேடல்களுக்கு / இடங்களில் மட்டுமே இது காணப்படுகிறது. இந்த அம்சம் எப்போது பொது வெளியீடு செய்யப்பட்டு அனைத்து யூசர்களுக்கும் கிடைக்கும் என்பது பற்றிய எந்த விவரங்களும் இல்லை. அல்லது அனைவருக்குமான, வெளியீட்டை எப்போது எதிர்பார்க்கலாம் என்பதற்கான எந்த உறுதிப்படுத்தலும் இல்லை.

சோதனை நிலையிலேயே பல அம்சங்கள் தற்போதை சூழ்நிலையில் இருந்தாலும், விரைவிலேயே அனைவருக்கும் அப்டேட் ஆகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அப்டேட் கிடைத்தவுடன் நீங்களும் எளிமையாக பயன்படுத்தலாம்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: