ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

யூசர்களின் விருப்பப்படி கட்டணம் செலுத்த அனுமதிக்கும் வசதியை அறிமுகப்படுத்தும் கூகுள்.!

யூசர்களின் விருப்பப்படி கட்டணம் செலுத்த அனுமதிக்கும் வசதியை அறிமுகப்படுத்தும் கூகுள்.!

கூகுள்

கூகுள்

Google third-party payments | ஸ்பாட்டிஃபை போன்ற செயலிகளில் சந்தா செலுத்த விரும்புவோர் கூகுள் போர்ட்டல் வழியாக சென்று மட்டுமே கட்டணம் செலுத்த முடியும். தற்போது இந்த புதிய வசதியின் மூலம், அந்தந்த செயல்களில் இருந்து கொண்டே கட்டணத்தை செலுத்த முடியும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஸ்பாட்டிஃபை, பம்பில் போன்ற செயல்களில் யூசர்கள் விரும்பியபடி எந்த முறையில் வேண்டுமானாலும் கட்டணம் செலுத்த அனுமதிக்கும் புதிய வசதியை வரும் வாரத்தில் கூகுள் அறிமுகப்படுத்த இருப்பதாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே இந்தியாவில் கேமிங் செயலிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வசதியானது, தற்போது நான்-கேமிங் செயலிகளான ஸ்பாட்டிஃபை மற்றும் பல செயலிகளுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த வசதியானது விரைவிலேயே ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, ஜப்பான், அமெரிக்கா, பிரேசில், தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் முக்கிய இடங்களில் விரிவுபடுத்தப்படும்.

“ஸ்பாட்டிஃபை அணியுடன் மிக நெருக்கமாக வேலை செய்து வருகிறோம். மேலும் இந்த வாரம் முதல் சோதனை அடிப்படையில் யூசர் விருப்ப பில்லிங் முறையை, தேர்வு செய்யப்பட்ட சில நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட உள்ளோம்” என்று கூகுள் தன்னுடைய ப்ளாகில் தெரிவித்துள்ளது.

இதன்பிறகு ஸ்பாட்டிஃபை போன்ற செயலிகளில் சந்தா செலுத்த விரும்புவோர் கூகுள் போர்ட்டல் வழியாக சென்று மட்டுமே கட்டணம் செலுத்த முடியும். தற்போது இந்த புதிய வசதியின் மூலம், அந்தந்த செயல்களில் இருந்து கொண்டே கட்டணத்தை செலுத்த முடியும். இந்தியாவில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வசதியில் எந்த மாற்றமும் இருக்காது. யூபிஐ முறையிலோ அல்லது கிரெடிட் கார்டு/டெபிட் கார்டு முறையிலும் கட்டணங்களை செலுத்த முடியும்.

எதற்காக இந்த வசதி?

இதற்கு முன்னர் ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தில் ஏதேனும் செயலிக்கோ அல்லது ஏதேனும் வசதிக்கோ கட்டணம் செலுத்த வேண்டியிருந்தால் கூகுளின் போர்ட்டல் வழியாக சென்று மட்டுமே உங்களால் கட்டணத்தை செலுத்த முடியும். இதன் டெவலப்பர்களுக்கு கிடைக்கும் வருவாயில் கூகுளுக்கு ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்த கட்டாயப்படுத்துவதாக இருந்தது. இதனால் நீண்ட காலமாகவே பல செயலிகள் கூகுளின் இந்த அணுகுமுறையை மாற்ற சொல்லி முணுமுணுத்து வந்தன.

Also Read : ஆண்ட்ராய்டு யூசர்களே எச்சரிக்கை! இந்த 4 ஆப்ஸை உங்கள் மொபைலில் இருந்து உடனே நீக்கி விடுங்கள்!

இதன் காரணமாகவே நெட்பிளிக்ஸ் தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தின் லிங்கை கட்டணம் செலுத்தும் பக்கத்தில் காண்பித்து, அதன் மூலம் நேரடியாக தனது வலைதளத்திலேயே யூசர்களை கட்டணம் செலுத்த அனுமதிக்கிறது. ஆனால் கூகுளின் ஒப்பந்தத்தின்படி இப்படி செய்வது தவறான அணுகுமுறை மற்றும் விதிமுறைகளை மீறுவது ஆகும். மேலும் இந்தியாவின் சி சி ஐயும் கூகுளின் இந்த கட்டாயப்படுத்தி கட்டணம் செலுத்த வைக்கும் முறையை எதிர்த்து வந்தது.

Also Read : உஷார்..! கூகுளில் இந்த விஷயங்களைத் தேடினால் கண்டிப்பாக சிறைதான்!

பலகாலமாக இந்த பிரச்சனையை கண்டுகொள்ளாமல் இருந்த கூகுள் நிறுவனம், தற்போது பல இடங்களில் இருந்து எதிர்ப்பு அதிகமாக கிளம்புவதாலும், தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளாலும் இந்த மாற்றத்தை செய்தே ஆக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே பல மாதங்கள் வேலை செய்து கூகுள் அல்லாமல் கட்டணம் செலுத்தும் புதிய வசதியை பலவித செயலிகளுக்கும் வீடியோ கேம்களுக்கும் அறிமுகப்படுத்தி உள்ளது.

Published by:Selvi M
First published:

Tags: Google, Spotify, Tamil News, Technology