கேமரா இனி வழியும் காட்டும் - கூகுள் கொண்டுவரும் VPS மேப்

"வி.பி.எஸ்" (visual positioning system) ஆப்பை கேமிரா மூலமாக பயன்பாட்டாளர்கள் பார்பதற்கு ஏற்ப 8k eyepieces-ஐ இணைக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Web Desk | news18
Updated: December 7, 2018, 3:35 PM IST
கேமரா இனி வழியும் காட்டும் - கூகுள் கொண்டுவரும் VPS மேப்
வி.பி.எஸ் தொழில்நுட்பம்
Web Desk | news18
Updated: December 7, 2018, 3:35 PM IST
கூகுள் மேப்-ல் வரவிருக்கும் புதிய மாற்றங்கள் குறித்தும் அவற்றிற்காக உருவாக்கப்படும் வி.பி.எஸ் அம்சம் குறித்தும் கூகுள் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

கூகுள் மேப் மூலமாக இதுவரை நாம் பயன்படுத்திய வசதிகளை விட சற்று கூடுதல் வசதிகளுடன் கூடிய augmented reality தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட வி.பி.எஸ் (visual positioning system) என்ற அமைப்பை கூகுள் அறிமுகப்படுத்த உள்ளது.

இந்த வி.பி.எஸ் ஆப், மொபைலில் உள்ள கேமரா வழியாக நாம் செல்ல வேண்டிய இடத்தை காட்சிகள் மூலமாக இணைக்கும். மேலும் அதில் உள்ள வழி காட்டும் அம்புகள் நாம் செல்ல வேண்டிய திசையை சுலபமாக அறியுறுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதனால் யூசர்கள் சென்றடைய வேண்டிய இடத்தை எந்தவித கஷ்டமும் இன்றி மிக சுலபமாக சென்றடைய முடியும்.

வி.பி.எஸ் தொழில்நுட்பம்


அது மட்டுமல்லாமல் இந்த ஆப், அதனை பயன்படுத்துவோருக்கு ஃப்ரென்ட்லியாக இருக்கும் வகையில் நரி( fox) போன்ற அனிமேஷன் கேரக்டரை இணைத்துள்ளனர்.

இந்த ஃபாக்ஸ் அனிமேஷன் நமக்கு உதவுவதுடன் நல்ல நண்பனை போல் பொழுதுபோக்காகவும் கேமராவுடன் வந்து கொண்டே இருக்கும்.
Loading...
மேலும் இந்த augmented reality தொழில்நுட்பமானது, பயன்பாட்டாளருக்கு தேவையான தகவல்களை அளிப்பதுடன் கூடுதல் தகவலையும் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக ஷாப்பிங் செல்லும் போது, குறிப்பிட்ட மால் அல்லது சூப்பர் மார்கெட்டின் முழு தகவல் மற்றும் அங்கு இருக்கக்கூடிய மொத்த பொருட்களின் விலை அதன் ஆஃபர்கள் பற்றிய முழு தகவல் அட்டை ஒன்றை யூசருக்கு அளிக்கும்.இந்த வி.பி.எஸ் ஆனது, ஜி.பி.எஸ்ஸின் மேப்-ஐ காட்டிலும் சிறந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடர்ந்த நகர்ப்புற பகுதிகளில் இந்த தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுளின் துணை தலைவரான அபர்ணா சென்னபிரகாடா கூறுகையில், இந்த அம்சங்கள் iOS மற்றும் Android இல் மட்டுமே சாத்தியமாகும் என்றார்.மேலும் இது குறித்து ஆப்பிள் நிறுவனம், இனி வரக்கூடிய அனைத்து ஐ போன்களும் இந்த augmented reality தொழில்நுட்பத்தில் தாயாரிக்கப்பட உள்ளதாக கூறியுள்ளது. அத்துடன் இந்த ஆப்பை மேலும் மேம்படுத்த அதற்குரிய ஆப் தயாரிப்பு வல்லுநர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த "வி.பி.எஸ்" (visual positioning system)ஆப்பை கேமிரா மூலமாக யூசர்ள் பார்ப்பதற்கு ஏற்ப 8k eyepieces-ஐ இணைக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.Also see... துப்பாக்கியை காட்டி மிரட்டி கொள்ளை
First published: December 7, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்