உங்க போனில் இந்த ஆப்ஸ் இருந்தால் உடனே நீக்கிடுங்க...

நீக்கப்பட்ட ஆப்ஸ்-களில் சில ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோரால் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Web Desk | news18
Updated: July 20, 2019, 12:46 AM IST
உங்க போனில் இந்த ஆப்ஸ் இருந்தால் உடனே நீக்கிடுங்க...
மாதிரிப்படம்
Web Desk | news18
Updated: July 20, 2019, 12:46 AM IST
பயனாளர்களுக்குத் தொந்தரவு செய்யும் 7 ஆப்ஸ்-களை ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது கூகுள்.

ஒரு ஆப் பயன்படுத்தும் பயனாளரின் இருப்பிடம், தொடர்பு எண்கள், மெசேஞ்கள் மற்றும் ஃபோன்கால் குறித்தத் தகவல்களை அந்த ஆப் கவனித்து வரும். இதன் மூலம் பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டு அவருக்குப் பல தொந்தரவுகளையும் தரும்.

இதுபோன்ற ஆப்ஸ்-களை அவாஸ்ட் என்னும் ஆன்டி-வைரஸ் நிறுவனம் மூலம் கண்டறிந்துள்ளது கூகுள் நிறுவனம். ரஷ்யர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட அவாஸ்ட் மூலமாகவே தொந்தரவு தரும் ஆப்ஸ்-களை கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கியுள்ளது. நீக்கப்பட்ட ஆப்ஸ்-களில் சில ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோரால் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


நீக்கப்பட்ட ஆப்ஸ் விவரம்:

  • -- Track Employees Check Work Phone Online Spy Free


  • Loading...

  • --Spy Kids Tracker

  • --Phone Cell Tracker

  • --Mobile Tracking

  • --Spy Tracker

  • --SMS Tracker

  • --Employee Work Spy


”நெறிமுறைகள் அற்ற ஆப்ஸ்-கள் பல மக்களின் தனியுரிமையைக் கெடுக்கின்றன. இதுபோன்ற பிரச்னைக்குரிய ஆப்ஸ்கள் நிச்சயமாக ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டிருப்பதுதான் சரியானது. இவை பல குற்றச்செயல்களை ஊக்குவிக்கின்றன. இது போன்ற ஆப்ஸ்-களை நாங்கள் ஸ்டாக்கர்வேர் என அழைக்கிறோம்” எனக் கூறியுள்ளார் அவாஸ்ட் நிறுவனத்தின் மொபைல் அபாயங்கள் மற்றும் பாதுகாப்புக் குழுத் தலைவர் நிக்கோலஸ் க்ரிஸைடோஸ்.

மேலும் பார்க்க: இன்ஸ்டாகிராமில் ‘ஹேக்கிங் பக்’... கண்டறிந்த தமிழருக்கு 20 லட்சம் ரூபாய் பரிசு!
First published: July 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...