ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

உங்க செல்போனில் இருக்கலாம் ஹேக் செய்யும் மால்வேர்.. தடுமாறும் கூகுள்.. நடப்பது என்ன?

உங்க செல்போனில் இருக்கலாம் ஹேக் செய்யும் மால்வேர்.. தடுமாறும் கூகுள்.. நடப்பது என்ன?

கூகுள்

கூகுள்

Google Play | கூகுள் ஸ்டோரிலிருந்து சில செயலிகள் நீக்கப்பட்டுள்ளன. 2 கோடிக்கும் மேல் டவுன்லோடு ஆன செயலிகள் கூட இதில் நீக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆண்ட்ராய்டு சாதனங்களில் கூகுளின் பல்வேறு செயலிகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு வருகின்றன. யூசர்களின் பாதுகாப்புக்காக மற்றும் பிரைவசிக்காகவும் பல்வேறு விதிமுறைகளின் படி பல தரப்பட்ட ஆப்ஸ்களை அவ்வபோது கூகுள் தடை செய்தும், நீக்கியும் வருகின்றது. மால்வேர், ஃபிஷிங் செயலிகள், சோஷியல் மீடியா கணக்குகளின் யூசர் லாகின் விவரங்களை திருடும் செயலிகள் என்று பல செயலிகள் தொடர்ந்து நீக்கப்பட்டு வந்துள்ளன. சமீபத்தில் அதிகமாக பேட்டரி மற்றும் அதிக மொபைல் டேட்டா பயன்படுத்துவது என்ற இரண்டு காரணங்களுக்காக கூகுள் ஸ்டோரிலிருந்து சில செயலிகள் நீக்கப்பட்டுள்ளன. 2 கோடிக்கும் மேல் டவுன்லோடு ஆன செயலிகள் கூட இதில் நீக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

எவ்வளவு பாதுகாப்பாக இருந்தாலும், ஹேக்கர்கள் எப்படியாவது கூகுள் ஆண்ட்ராய்டு செயலிக்குள் ஏதேனும் ஒரு வழியில் புகுந்து விடுகிறார்கள். சமீபத்தில் முன்னணி ஆன்டிவைரஸ் சாஃப்ட்வேர்களில் ஒன்றான மெக்அஃபீ இதைப் பற்றிய ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் கிளிக்கர் (Clicker) என்ற ஒரு புதிய மால்வேர் கூகுள் பிளேவில் எப்படியோ புகுந்துவிட்டது. ஏற்கனவே கூகுள் பிளேவில் பல லட்சக்கணக்கானவர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் 16 செயலிகளில் கிளிக்கர் மால்வேர் புகுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் இரண்டு கோடிக்கும் மேற்பட்டவர்கள் கிளிக்கர் மால்வேருடன் கூடிய ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்துள்ளனர் என்று அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

நீங்கள் ஒரு செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்றால் அந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் தேடுவீர்கள். தேடி, இன்ஸ்டால் செய்த பிறகு அந்த செயலியை திறப்பீர்கள். ஒரு சில செயலிகள் நேரடியாக திறந்து விடும். ஒரு சில செயலிகளுக்கு ரிமோட் கான்ஃபிகரேஷன் மூலம் கூடுதலான அமைப்புகளை கான்ஃபிகர் செய்ய வேண்டும் என்று alert செய்தி வரும். இந்த மால்வேர் உள்நுழைந்த செயலியில் HTTP கோரிக்கையில் உங்களுக்கு டவுன்லோட் செய்ய வேண்டும் என்ற செய்தியாகக் காண்பிக்கும். அதை நீங்கள் கிளிக் செய்து, டவுன்லோட் செய்த பிறகு FCM (ஃபையர் பேஸ் கிளவுட் மெசேஜிங்) என்ற தளத்தில் பதிவு செய்யும். அதில் இருந்து உங்களுக்கு புஷ் மெசேஜஸ் அனுப்பப்படும் என்றும் ஆன்டி-வைரஸ் நிறுவனம் தன்னுடைய வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளது.

சில நேரங்களில் போலி, அசலை விட உண்மையானது போல தோற்றமளிக்கும். அதுபோல இந்த மால்வேரும் முதல் பார்வையிலேயே ஒரு முழுமையான ஆண்ட்ராய்டு சாப்ட்வேர் போல் தான் காணப்பட்டது. ஆனால் ரிமோட் கான்ஃபிகரேஷன், FCM டெக்னிக்ஸ் என்று இதில் மறைந்திருக்கும் மோசடிகள் எக்கச்சக்கம்.

Also Read : விலை இவ்வளவு கம்மியா? இந்தியாவில் அறிமுகமானது ஜியோபுக்... தாறுமாறு சிறப்பம்சங்கள்!

ஆனால் கூகுள் தானியங்கி முறையிலும் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் பரிசோதனையிலும் இது இந்த கிளிக்கர் என்பது ஒரு மால்வேர் செயலி என்பதை உடனடியாக கண்டறிந்தது. அது மட்டுமில்லாமல் இந்த செயலியை, கூகுள் பிளேவில் இருந்து நிரந்தரமாக நீக்கி விட்டது. கூகுள் பிலே ப்ரொடக்ட்டைப் பயன்படுத்தும் யூசர்களுக்கு இந்த செயலியால் எந்தவித பாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Published by:Selvi M
First published:

Tags: Google play Store, Tamil News, Technology