கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து TikTok-செயலி நீக்கம்

மத்திய அரசு கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து டிக் டாக்-ஐ நீக்குமாறு அறிவுறுத்தியுள்ளதையடுத்து, TikTok செயலி நீக்கப்பட்டது

கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து TikTok-செயலி நீக்கம்
டிக் டாக் செயலி
  • News18
  • Last Updated: April 17, 2019, 12:52 PM IST
  • Share this:
TikTok செயலியை பற்றி தனிப்பட்ட புகாரை யாரும் தெரிவிக்கவில்லை.. ஆனால் இந்தியாவின் சட்டங்களுக்கு ஒத்துப்போகாததால் இந்த செயலியை Google Play Store-ல் இருந்து நீக்கப்படுவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாவின் பைட்டேன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டிக் டாக் செயலி இந்திய கலாச்சாரத்தைச் சீரழிக்கும் விதமாகவும், பாதுகாப்பு அற்றதாகவும் உள்ளது. எனவே டிக் டாக் செயலியை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ஏப்ரல் 3-ம் தேதி உத்தரவிட்டு இருந்தது.

மதுரை உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் டிக் டாக் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், மதுரை உயர் நீதிமன்ற கிளையின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்தது.


இந்நிலையில், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் செயலிகள் தளங்களிலிருந்து டிக் டாக் செயலியை நீக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள டிக் டாக் நிறுவனம் “இந்தியாவிற்கான உள்ளடக்கத்தைக் கண்காணித்து சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 6 மில்லியனுக்கும் அதிகமான விதிகளை மதிக்காத வீடியோக்களை நீக்கியுள்ளோம். மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஏப்ரல் 22-ம் தேதி நடைபெற உள்ளது” என்றும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, நேற்று இரவில் Google Play Store-ல் TikTok செயலியை நீக்கியது Google நிறுவனம்! நேற்று (செவ்வாய் கிழமை) இரவில் இருந்து இந்த செயலியை Google Play Store-ல் பெற இயலாது. மேலும், Apple நிறுவனம் இந்த செயலியை நீக்காமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.பிப்ரவரி மாதம் முதலே தமிழக அரசு, டிக் டாக் செயலியை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.
தொழில்நுட்பம் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  தொழில்நுட்பம் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also Watch: மிகக்குறுகிய காலத்தில் 30 கோடி வாடிக்கையாளர்களை பெற்று ரிலையன்ஸ் ஜியோ சாதனை! 


First published: April 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading