ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

இந்தியர்களிடம் இருந்து கூகுளுக்கு சென்ற சரமாரி புகார் - 95,000 சர்ச்சைக் கன்டென்டுகள் நீக்கம்!

இந்தியர்களிடம் இருந்து கூகுளுக்கு சென்ற சரமாரி புகார் - 95,000 சர்ச்சைக் கன்டென்டுகள் நீக்கம்!

கூகுள்

கூகுள்

ஜூலை மாதத்தில் நீக்கப்பட்ட கன்டென்டுகள் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

இந்தியர்கள் தெரிவித்த புகார்களின் அடிப்படையில் சர்ச்சைக்குரிய ஜூலை மாதத்தில் மட்டும் 95,680 கன்டென்டுகளை கூகுள் நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது.

இனைய உலகில் ஜாம்பாவனாக இருக்கும் கூகுளில் சர்ச்சைக்குரிய கன்டென்டுகள் கொட்டிக்கிடக்கின்றன. இவை குறித்து உலகளவில் தொடர்ந்து புகார்கள் எழுப்பப்பட்டு வருவதால், அந்த கன்டென்டுகளை நீக்க கூகுள் நிறுவனம் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவில் புதிய தொழில்நுட்ப விதிகள் மே 26 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. அந்த விதிகளை ஏற்க முதலில் தயக்கம் தெரிவித்த கூகுள் நிறுவனம், மத்திய அரசுடனான பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இந்திய தொழில்நுட்ப விதிகளுக்கு சம்மதம் தெரிவித்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன்படி, புதிய தொழில்நுட்ப விதிகளின்படி யூசர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாதந்தோறும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை வெளியிட வேண்டும். கூகுள் நிறுவனம் ஜூலை மாதத்தில் எடுத்த நடவடிக்கைகளின் தரவுகளை பொதுவெளியில் வெளியிட்டுள்ளது. அதில், யூசர்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் தனியுரிமை, காப்புரிமை, நீதிமன்ற உத்தரவு, சட்டம் மற்றும் அவதூறு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் 95,680 விதிமீறல் கன்டென்டுகளை நீக்கியுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜூன் மாதத்தில் 83613, மே மாதத்தில் 71132, ஏப்ரலில் 59350 கன்டென்டுகள் விதிமீறல் புகார்களின் அடிப்படையில் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

ஜூலை மாதத்தில் நீக்கப்பட்ட கன்டென்டுகள் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இவைதவிர, கூகுளின் தனியுரிமை கொள்கைக்கு முரணாக பதிவேற்றப்பட்டிருந்த 5,76,892 கன்டென்டுகளையும் கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது. இது குறித்து கூகுள் கொடுத்துள்ள விளக்கத்தில், இந்திய யூசர்களிடமிருந்து 36,934 புகார்கள் பெறப்பட்டதாகவும், அதனடிப்படையில் 95,680 கன்டென்டுகளை நீக்கியதாகவும் விளக்கம் கொடுத்துள்ளது. ஒவ்வொரு நாட்டின் டிஜிட்டல் தளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள சட்ட வரையறைக்குட்பட்டு கூகுள் நடவடிக்கை எடுப்பதாகவும், கன்டென்டுகளை நீக்கும்போது அதனை கவனமாக பரிசீலித்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

Also read... Apple Days sale on Flipkart: ஐபோன் 12 மினி, ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் போன்களுக்கு ரூ.9,000 வரை தள்ளுபடி அறிவிப்பு!

சில புகார்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூகுள் தெரிவித்துள்ளது. கூகுள் கொடுத்துள்ள விளக்கத்தில், " ஒரே கன்டென்டு தொடர்பாக பல்வேறு புகார்கள் வரும்போது, ஏதேனும் ஒரு புகாரின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒரு சில புகார்கள் பொதுவாக அனுப்பப்படுகின்றன. அவற்றில் யூ.ஆர்.எல் குறிப்பிடப்படுவதில்லை. பொதுவாக அனுப்பப்படும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க இயலவில்லை. ஒரு புகார் தெரிவிக்கும்போது, சரியான விளக்கம் மற்றும் சட்டவிதிகளை குறிப்பிட்டு அனுப்பும்போது, அதனை பரிசீலித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம்" என தெரிவித்துள்ளது.

போலித் தகவல்கள் மற்றும் நடிகைகள் தொடர்பான ஆபாச படங்கள், கிராபிக்ஸ் புகைப்படங்கள், ஆள்மாறாட்டம் உள்ளிட்ட புகார்களைக் கொண்ட கன்டென்டுகளையும் கூகுள் நீக்கிவிடும்.

First published:

Tags: Google