ஆக்ஷன், அட்வென்சர், ஆர்கேட், கார்ட், கேசினோ, எஜூகேஷனல், மியூசிக், ரேஸிங், ஸ்போர்ட்ஸ், வோர்ட் என பல வகையான பிரிவின் கீழ், மில்லியன் கணக்கான ஆண்ட்ராய்டு ஆப்கள் அணுக கிடைக்கும் ஒரு இடம் தான் - கூகுள் ப்ளே ஸ்டோர். எதை விடுவது, எதை டவுன்லோட் செய்வது என்கிற குழப்பத்தை எதிர்கொள்ளாமல் பிளே ஸ்டோரில் இருந்து வெளியேறுவது மிகவும் கடினம்!
ஆனால் இங்கே நாம் கவனிக்க வேண்டிய ஒரு மோசமான விஷயம் என்னவென்றால், கூகுள் பிளே ஸ்டோரில் காலாவதியான ஆப்கள் இன்னமும் அணுக கிடைகின்றன என்பதே ஆகும்.
லேட்டஸ்ட் ப்ரைவஸி மற்றும் செக்யூரிட்டி அம்சங்கள் இல்லாத காரணத்தால், யூசர்கள் டவுன்லோட் செய்ய கூடாத சில காலாவதியான ஆப்கள் பிளே ஸ்டோரில் இருப்பதை கூகுள் நிறுவனமே ஒற்றுக்கொண்டுள்ளது. மேலும் இதனொரு பகுதியாக பிளே ஸ்டோரில் உள்ள காலாவதியான மற்றும் நிறுவனத்தின் செக்யூரிட்டி ஸ்டாண்டர்ட்டிற்கு பொருந்தாத ஆப்கள் விரைவில் "மறைக்கப்படும்" என்றும் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
கூகுள் ப்ளே ஸ்டோரில் 3.5 மில்லியன் ஆப்கள் உள்ளன, அதில் பல ஆப்கள் காலாவதியாகி இருக்கலாம் என்று ஸ்டேட்டிஸ்டாவின் (Statista) சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. காலாவதியான ஆப்கள் நாம் அச்சம்கொள்ளும் அளவிலான தீங்குகளை விளைவிப்பதில்லை என்றாலும் கூட, ஆண்ட்ராய்டு யூசர்கள் பாதுகாப்பான அனுபவத்தை பெற வேண்டும் என்று கூகுள் விரும்புகிறது. எனவே தான் காலாவதியான ஆப்களை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கும் பணிகளை, கூகுள் நிறுவனம் வருகிற நவம்பர் மாதத்தில் தெடங்க உள்ளது.
குறிப்பிட்ட மாற்றங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் செய்யப்படும் என்பதால், உங்கள் மொபைலில் இருக்கும் பழைய ஆப்களுக்கான அணுகலை இழப்பதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் கூகுள் இப்போதுதான் காலாவதியான ஆப்களை மறைக்க முடிவு செய்துள்ளது, அதாவது இந்த நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படாது. இது சார்ந்த ஆழமான தேடலை நிகழ்த்த கூகுள் நிறுவனத்திற்கு நிறைய நேரம் தேவைப்படும். அதற்குள், குறிப்பிட்ட ஆப்பை நீக்கிவிட்டு, சில காரணங்களுக்காக அதை மீண்டும் இன்ஸ்டால் செய்ய நினைத்தால், அதை உங்களால் டவுன்லோட் செய்ய முடியும். ஆனால், கூகுளால் காலாவதியானதாக கருதப்படும் ஒரு ஆப்பை நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால், அதை பிளே ஸ்டோரில் உங்களால் கண்டுபிடிக்க முடியாது.
Also Read : 10 லட்சத்துக்கும் மேற்பட்ட WhatsApp கணக்குகள் முடக்கம்..!
"யூசர்களுக்கு பாதுகாப்பான அனுபவத்தை வழங்கும் நோக்கத்தின் கீழ் - கூகுள் பிளே அம்சங்கள் மற்றும் கொள்கைகளுக்கு கூடுதலாக - ஒவ்வொரு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்டிலும் ப்ரைவஸி, செக்யூரிட்டி மற்றும் யூசர் எக்ஸ்பீரியன்ஸ் மேம்பாடுகள் கொண்டுவரப்டுகிறது. இந்த முன்னேற்றங்களின் முழு பலன்களையும் யூசர்கள் உணர்ந்து கொள்வதை உறுதிசெய்யவும், புதிய ஆண்ட்ராய்டு வெர்ஷன்களில் ஆப்கள் தடையின்றி செயல்படுவதை உறுதிசெய்யவும் நாங்கள் டெவலப்பர்களுடன் நெருக்கமாக பணியாற்றுகிறோம்” என்றும் கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.