போலிகளை களை எடுத்த கூகுள் ப்ளே ஸ்டோர்!

கூகுள் ப்ளே ஸ்டோரின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய புதிய செயலியை உருவாக்கியுள்ளது கூகுள்.

போலிகளை களை எடுத்த கூகுள் ப்ளே ஸ்டோர்!
கூகுள் ப்ளே ஸ்டோரின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய புதிய செயலியை உருவாக்கியுள்ளது கூகுள்.
  • News18
  • Last Updated: December 19, 2018, 10:10 PM IST
  • Share this:
போலியாக உள்ள ரிவ்யூ, ரேட்டிங், ஆப்ஸ் என அனைத்தையும் anti-spam system மூலம் களை எடுத்து நீக்கியுள்ளது கூகுள் ப்ளே ஸ்டோர்.

இப்புதிய anti-spam system கூகுள் ஆப்-ல் உள்ள மோசமான ஆப்ஸ், போலி ரிவ்யூகள் மற்றும் ரேட்டிங் ஆகியவற்றை நீக்குகிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான போலி ரிவ்யூகளை நீக்கியுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான apps நீக்கப்பட்டுள்ளது.

இம்மாதிரியான போலி கணக்கிலிருந்து ரிவ்யூ வரும்போது ஒரு நடுத்தரமான ஆப் மிகச்சிறப்பானதாகப் பயனாளர்களுக்குக் காண்பிக்கப்படுகிறது. ஆப் டெவலப்பர்கள் கூட நல்ல ரிவ்யூ, ரேட்டிங் தருபவர்களுக்கு பணம் அல்லது பரிசுப்பொருள்கள் வழங்கப்படுவதாகவும் கூகுள் குற்றம் சுமத்துகிறது. இதனால் ப்ளே ஸ்டோரில் பல ஆப்ஸ்-க்கு உண்மையான மதிப்பீடே கிடைப்பதில்லை. anti-spam system போலிகளைக் களை எடுத்தலும் இனி தொடர்ந்து ஒரு சாதரண நிலையில் இருக்கும் ஆப், திடீரென வளர்ந்தாலும் அதையும் இப்புதிய செயலி கவனித்து அது போலியானால் நீக்குவதற்கான நடவடிக்கையை எடுக்கிறது.


’இதுவெறும் செயலியின் செயல்பாடாக இல்லாமல் கூகுள் பணியாளர்களும் இணைந்து போலிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுவர். இதற்காக சிறப்புப் பொறியாளர் குழு ஒன்று கூகுள் ப்ளே ஸ்டோரின் உண்மைத் தன்மையைக் காக்கவும் பயனாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கவும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. தரத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் ப்ளே ஸ்டோர் செயல்படும்’ என கூகுள் தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்க: தமிழ் தேசிய கூட்டமைப்பை பழிவாங்கும் இலங்கை
First published: December 19, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading