கூகுள் ஃபிளே மியூசிக் டேட்டாவை YouTube மியூசிக்கிற்கு டிரான்ஸ்ஃபர் செய்வது எப்படி?

கூகுள் ஃபிளே மியூசிக் டூ YouTube மியூசிக்

கூகுள் பிளே மியூசிக்கில் நீங்கள் சேகரித்து வைத்திருக்கும் பைல்கள் அனைத்தையும், பிப்ரவரி 24ம் தேதிக்குள் டவுன்லோடு அல்லது டிரான்ஸ்பர் செய்துகொள்ளுமாறு கூகுள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு செய்யாத நபர்களின் கூகுள் பிளே மியூசிக் தகவல்கள் திரும்ப பெற முடியாது எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

  • Share this:
கூகுள் நிறுவனம் வழங்கி வந்த கூகுள் பிளே மியூசிக் அம்சம் விரைவில் முழுமையாக நிறுத்தப்பட உள்ள நிலையில், அதில் நீங்கள் சேமித்து வைத்திருக்கும் டேட்டாவை யூடியூப் மியூசிக்கிற்கு மாற்றுவது எப்படி என்பதை பார்க்கலாம்.

கூகுள் பிளே மியூசிக் சிறப்பம்சம் கடந்த ஆண்டு டிசம்பருடன் நிறுத்தப்பட்டது. இந்த நடைமுறை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதலே தொடங்கியிருந்த நிலையில், பிப்ரவரி 24 ஆம் தேதியுடன் டெக் மார்க்கெட்டில் இருந்து முழுமையாக விடைபெற உள்ளது. இந்நிலையில், கூகுள் பிளே மியூசிக்கில் நீங்கள் சேகரித்து வைத்திருக்கும் பைல்கள் அனைத்தையும், பிப்ரவரி 24ம் தேதிக்குள் டவுன்லோடு அல்லது டிரான்ஸ்பர் செய்துகொள்ளுமாறு கூகுள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு செய்யாத நபர்களின் கூகுள் பிளே மியூசிக் தகவல்கள் திரும்ப பெற முடியாது எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கூகுள் நிறுவனம், கூகுள் பிளே மியூசிக் பயன்படுத்துவோர்களுக்கு தனித்தனியாக இமெயில் மூலம் அறிவுறுத்தல் நோட்டிபிகேசனை வழங்கி வருகிறது. அதில், கூகுள் பிளே மியூசிக் மூலம் வாங்கப்பட்ட பாடல்கள் அல்லது பதிவேற்றங்கள் உள்ளிட்டவைகளை பிப்ரவரி 24 ஆம் தேதிக்குள் யூசர்கள் யூடியூப் மியூசிக்கிற்கு மாற்றிக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இதனால், கூகுள் பிளே மியூசிக் யூசர்கள், தாங்கள் சேமித்து வைத்த டேட்டாக்களை யூ டியூப் மியூசிக்கிற்கு மாற்றி வருகின்றனர்.

எவ்வாறு கூகுள் மியூசிக் தகவல்களை மாற்றுவது என்பதை பற்றிய தகவல்கள் உங்களுக்கு தெரியாமல் இருந்தால் கவலைப்படாதீர்கள். கீழ்கொடுக்கப்படும் வழிமுறைகளை நீங்கள் முறையாக பின்பற்றினால், நிச்சயம் உங்களின் கூகுள் பிளே மியூசிக் தகவல்களை யூ டியூப் மியூசிக்கிற்கு மாற்றிக்கொள்ளலாம்.

யூசர்கள் மியூசிக் கூகுள் டாட்.காம் (music.google.com) அல்லது ஆன்டிராய்டு மற்றும் ஐபோன்களில் இருக்கும் கூகுள் பிளே மியூசிக் செயலிக்குள் செல்லுங்கள். அங்கு டிரான்ஸ்பர் டூ யூ டியூப் புராம்ப்ட் (Transfer to YouTube prompt) ஆப்சன் இருக்கும். அதனை நீங்கள் தேர்வு செய்தால், உங்களின் கூகுள் பிளே தகவல்கள் யூடியூப் மியூசிக்கிற்கு டிரான்ஸ்பர் ஆகும். கூகுள் பிளே மியூசிக்கில் நீங்கள் சேகரித்து வைத்திருக்கும் பிளே லிஸ்ட், பாடல்கள், ஆல்பம், லைக்ஸ், மற்றும் அப்லோடிங் பர்சேஸஸ், பில்லிங் தொடர்பான அனைத்து தகவல்களும் யூடியூப் மியூசிக்கில் சேமித்து வைக்கப்படும்.

ஒருமுறை உங்கள் பைல்கள் டிரான்ஸ்பர் செய்யப்பட்டவுடன், யூடியூப் மியூசிக்கிலும் உங்களின் மியூசிக் லைப்ரரியை டவுன்லோடு செய்துகொள்ளலாம் அல்லது அழித்துவிடலாம். யூசர்களின் வசதிக்கு ஏற்ப ஏற்கனவே இருந்த நடைமுறைகளை மேலும் எளிமையாக்கி கூகுள் கொடுத்துள்ளது. அதனால், கூகுள் பிளே மியூசிக்கில் இருக்கும் தகவல்களை எடுக்க முடியாது என கவலை கொள்ள வேண்டாம். ஒரே ஒரு நிபந்தனை என்னவென்றால், பிப்ரவரி 24 ஆம் தேதிக்குள் கூகுள் பிளே மியூசிக்கில் இருக்கும் தகவல்களை யூ டியூப் மியூசிக்கிற்கு மாற்றிக்கொள்ள வேண்டும். கூகுள் பிளே மியூசிக் டெக் மார்க்கெட்டை விட்டு சென்றாலும் யூடியூப் மியூசிக் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
Published by:Arun
First published: