பிளே ஸ்டோரில் செப்டம்பர் முதல் இந்த ஆப்களுக்கு தடை: கூகுள் அறிவிப்பு!

google play store

‘ஷுகர் டாடி’ வகையறாவில், ஒரு பெரிய அப்ளிகேஷன் தொகுப்பே உள்ளது. இந்த வகையான அப்ளிகேஷன்கள் இனி கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்காது.

  • Share this:
சமீபத்திய சேவை விதிமுறைகளின் புதுப்பிப்புகள் படி, கூகுள் நிறுவனம், பாலியல் ரீதியான உள்ளடக்கத்தைக் குறைத்து, மைனர்களுக்கு பாதுகாப்பை மேம்படுத்தும் முனைப்பில் ஈடுபட்டுள்ளது. இதன் விளைவாக, “ஷுகர் டாடி” என்ற ஸ்டைல் டேட்டிங் ஆப்-கள் அனைத்தும், வரும் செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் தடைசெய்யப்பட இருக்கிறது.

கூகுளில், பணத்தை ஈடாக வைத்து உறவுகளை வளர்க்கும் அப்ளிகேஷன்கள் உள்ளன. நீங்கள் இதுவரை அறியாமல் இருந்திருக்கலாம். ஆனால், இதுவரை, ‘ஷுகர் டாடி’ வகையறாவில், ஒரு பெரிய அப்ளிகேஷன் தொகுப்பே உள்ளது. இந்த வகையான அப்ளிகேஷன்கள் இனி கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்காது. கூகுளின் பொருத்தமற்ற உள்ளடக்கக் கொள்கை அடிப்படையில், செப்டம்பர் 1 முதல் தடைசெய்யப்பட உள்ளது.

Also Read: மார்பை தொட்ட இளைஞருக்கு, இளம் பெண் கொடுத்த ஷாக்!

இந்த புதிய தடைகள், பாலியல் உள்ளடக்கம், குறிப்பாக ஏதேனும் ஒன்றை வழங்கி, அதற்கு பாலியல் உறவைப் பெறும் அப்ளிகேஷன்கள் ஆகியவற்றுக்கு அமல்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக, இந்த டேட்டிங் ஆப்கள் பல லட்சம் முறைகள் டவுன்லோடு செய்யப்பட்டுள்ளன என்றும் தகவல் வெளிவந்துள்ளன.

“ஷுகர் டாடி” என்பது, பணத்துக்காகவோ, பொருளுக்காகவோ அல்லது வேறு ஏதேனும் தேவைகளை நிறைவேற்றவோ, இள வயது பெண்ணுடன் ஒரு ஆண் கொண்டிருக்கும் உறவைக் குறிக்கும் சொல். இதற்கு முன்பு இதைப் போன்ற ஆப்ஸ்கள் இருந்தாலும், தற்போது பல தளங்களும், சமூக ரீதியான விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி செய்கின்றது.

Also Read:  டேக்ஸி ஓட்டுநர் மீது இளம்பெண் தாக்குதல்.. தடுக்க வந்தவருக்கும் அடி..

பாரம்பரிய டேட்டிங் ஆப்ஸ் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் பணம் செலுத்தி உறவில் ஈடுபடக்கூடிய சூழலில், இந்த மாற்றம் எவ்வாறு பலனளிக்கும்?

இளம் வயதினரிடம் இந்த ஆப்ஸ் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக இந்த புதுப்பிப்பு மேற்கொள்ளப்படுகிறது. இணைய பாலுறவு மற்றும் விபச்சாரம் அதிகரித்து வந்த நிலையில், அதைக் கட்டுப்படுத்தும் வகையில், ட்ரம்ப் 2018 ஆம் ஆண்டு FOSTA-SESTA சட்டம் மற்றும் கட்டுப்பாடு முன்வைத்த நிலையில், கூகுள் இந்த முடிவை எடுத்தது.

பாலியல் தொழிலாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் உரையாட வழிவகுக்கும் இணையதளங்கள் நடத்துபவர்களுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை என்ற நடைமுறை உள்ளது. கூகுள் நிறுவனத்தின் இந்த அப்டேட், குழந்தைகள் மற்றும் இளம் வயதினரின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்காக வழங்கப்பட்ட அப்ளிகேஷன்களில், இனி விளம்பர அடையாளங்காட்டிகள் விளம்பரதாரர்களுக்கு அனுப்ப முடியாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த அடையாளங்காட்டிகள், விளம்பரப் பிரச்சாரம் செய்பவர்கள், பிரவுசிங் டேட்டாவுக்கு ஏற்ப தங்களின் விளம்பரங்களை மாற்றியமைக்க, சந்தையை முடிவு செய்ய உதவும். மற்ற டெக்னாலஜி பெருநிறுவனங்கள் போலவே, கூகுள் நிறுவனமும், இளம் வயதினருக்காக தனது நெட்வொர்க்குகள் மற்றும் பிளே ஸ்டோர் பிளாட்ஃபார்மில் பாதுகாப்பு அளிக்க முன்வந்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது.
Published by:Arun
First published: