Home /News /technology /

கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன் யூசர்களுக்கு தற்போதைய ஆண்ட்ராய்டு அப்டேட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல்.!

கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன் யூசர்களுக்கு தற்போதைய ஆண்ட்ராய்டு அப்டேட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல்.!

கூகுள் பிக்சல்

கூகுள் பிக்சல்

Google Pixel Smartphone | சில சமயங்களில் ஆண்ட்ராய்டு அப்டேட்களும் சிக்கலானதாகவும் மாறி விடுகின்றன. இதனால், மொபைலின் செயல்பாடுகளும் பாதிக்கப்படுகின்றன. இப்படியொரு பிரச்சனை தான், கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன் யூசர்களுக்கு வந்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
ஸ்மார்ட்போன் என்றாலே அதில் அவ்வப்போது பல வித அப்டேட்கள் வந்தவண்ணம் இருக்கும். முன்பு இருந்த பிழைகளை திருத்தியோ அல்லது புதிய அம்சத்தை சேர்த்தோ புது அப்டேட்டாக வழங்குவார்கள். அதன்படி, ஆண்ட்ராய்டு யூசர்களுக்கு தங்களது மொபைலில் பலவித ஆண்ட்ராய்டு அப்டேட்கள் ஒவ்வொரு வெர்ஷனாக வந்து கொண்டே இருக்கும். இது எல்லா வகையான பிராண்ட் மொபைல்களுக்கும் பொருந்தும். அதே போன்று அப்டேட்கள் வந்தால், அவற்றை அவசியம் புதிப்பித்து கொள்ள வேண்டியது தான் நல்லது.

ஆனால், சில சமயங்களில் அப்டேட்களும் சிக்கலானதாகவும் மாறி விடுகின்றன. இதனால், மொபைலின் செயல்பாடுகளும் பாதிக்கப்படுகின்றன. இப்படியொரு பிரச்சனை தான், கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன் யூசர்களுக்கு வந்துள்ளது. தற்போது கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன் யூசர்களுக்கான புதிய ஆண்ட்ராய்டு 13 வெர்ஷன் அப்டேட்டை தந்துள்ளது. ஆனால் இந்த அப்டேட் அனைத்தும் திட்டத்தின் படி நடக்கவில்லை என்றே சொல்லலாம். பல யூசர்கள் இந்த புதிய அப்டேட்டில் தாமதத்தை எதிர்கொண்டுள்ளனர். சிலர் ஆண்ட்ராய்டு 13 அப்டேட் சில அம்சங்களைப் பயன்படுத்த முடியாததாக இருக்கிறது என புகார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக சமீபத்திய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை (ஓஎஸ்) நிறுவிய பிறகு, பிக்சல் யூசர்களால் வயர்லெஸ் சார்ஜிங்கைப் பயன்படுத்த முடியவில்லை என்று இந்த புதிய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த பல புகார்களை ரெட்டிட் தளத்தின் மூலம் பகிர்ந்து வருகின்றனர். அதில் முக்கியமாக ஆண்ட்ராய்டு 13 அப்டேட்டை பெற்ற பிறகு தங்கள் ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங்கை பயன்படுத்த முடியவில்லை என்று புகார் அளித்துள்ளனர்.



கூகுள் பிக்சல் 6, பிக்சல் 6 ப்ரோ, பிக்சல் 4 மற்றும் பிக்சல் 4 எக்ஸ்எல் போன்ற மாடல்களில் இந்த சிக்கல் கண்டறியப்பட்டுள்ளது. இந்த பிரீமியம் ஃபோன்கள் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கின்றன, அதே நேரத்தில் பிக்சல் 3a, 4a மற்றும் 6a ஆகிய ஸ்மார்ட்போன்கள் இந்த அம்சத்தை ஆதரிக்காததால், பல சிக்கல்கள் இருக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்று பல புகார்கள் வந்தவண்ணம் உள்ளது.

Also Read : ஐபோன், ஐபேட் யூஸர்களுக்கு முக்கிய அப்டேட்... தொழில்நுட்பத்துறை அமைச்சர் வெளியிட்ட எச்சரிக்கை.! 

ஆனால், கூகுள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இந்த சிக்கலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் இந்த சிக்கலை ஒரு திருத்தம் மூலம் சரியாக கவனிக்க வேண்டும் என்று யூசர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த வயர்லெஸ் சார்ஜிங் வசதி என்பது பிக்சல் ஸ்மார்ட்போன்களில் உள்ள கூடுதல் அம்சமாகும், மேலும் புதிய ஆண்ட்ராய்டு வெர்ஷன் அப்டேட்கள் அதை எவ்வாறு பயன்படுத்த முடியாததாக மாற்றியது என்பது தெரியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

Also Read : சீன ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் தடை; சீனாவின் தரப்பில் விளக்கம்

வயர்லெஸ் சார்ஜிங்குடன் கூடுதலாக, ஆண்ட்ராய்டு 13 அப்டேட்டானது பிக்சல் யூசர்களுக்கு அதிக சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. சில கூகுள் ஃபை யூசர்கள், ஆண்ட்ராய்டு 13 அப்டேட்டை செய்த பிறகு, தங்கள் பிக்சல் ஃபோன்களில் ரிச் கம்யூனிகேஷன் சர்வீசஸை(ஆர்.சி.எஸ்) பெற முடியவில்லை என்றும் கூறியுள்ளனர். கூகிள் நிறுவனம் சமீபத்தில் இந்தியா உட்பட பல நாடுகளில் பிக்சல் 6a ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. புதிய பிக்சல் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.43,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படியொரு பிரச்சனைக்குரிய அப்டேட்டை சரிசெய்யவில்லை எனில் இது யூசர்களுக்கு அதிருப்தியை தர கூடும்.
Published by:Selvi M
First published:

Tags: Google, Smartphone, Technology

அடுத்த செய்தி