ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

கூலாக கலக்கும் கூகுள்! 6 ஆண்டுகளில் 30 மில்லியன் போன்கள் விற்பனை! என்ன ஸ்பெஷல் தெரியுமா?

கூலாக கலக்கும் கூகுள்! 6 ஆண்டுகளில் 30 மில்லியன் போன்கள் விற்பனை! என்ன ஸ்பெஷல் தெரியுமா?

கூகுள் ஸ்மார்ட்ஃபோன்

கூகுள் ஸ்மார்ட்ஃபோன்

Google Pixel | கடந்த 2016-ல் ஒரிஜினல் கூகுள் பிக்சல் மற்றும் பிக்சல் எக்ஸ்எல் அறிமுகத்துடன் பிக்சல் சீரிஸை அறிமுகப்படுத்தியதில் இருந்து சுமார் 30 மில்லியன் பிக்சல் டிவைஸ்களை கூகுள் நிறுவனம் விற்றுள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தொழில்நுட்ப நிறுவனமான கூகுளின் Pixel 7 சீரிஸ் ஸ்மார்ட் ஃபோன்கள் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், அதன் பிக்சல் சீரிஸ் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து தற்போது வரை கிட்டத்தட்ட 30 மில்லியன் ஸ்மார்ட் ஃபோன் யூனிட்களை விற்றுள்ளதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

IDC-ன் சமீபத்திய மதிப்பீட்டின்படி, கடந்த 6 ஆண்டுகளில் விற்கப்பட்டுள்ள பிக்சல் ஸ்மார்ட் ஃபோன்களின் எண்ணிக்கை சுமார் 28.6 மில்லியன் யூனிட்களுக்கும் மேல் ஆகும். முக்கியமாக கூகுள் ஆண்டுக்கு சுமார் 4.6 மில்லியன் பிக்சல் ஃபோன்களை விற்பனை செய்கிறது. எனவே மார்க்கெட்டில் அறிமுகமான சில ஆண்டுகளிலேயே ஒரு சில பிராண்டுகளை விட அதிக விற்பனையை பதிவு செய்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. எனினும் 2021-ல் மட்டும் மேற்கண்ட எண்ணிக்கையை விட பல மடங்கு அதிகமாக விற்கப்பட்டுள்ள Samsung Electronics போன்ற போட்டி நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கை குறைவே.

2019-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட Pixel 3a மாடல் உண்மையில் பிக்சல் சீரிஸ் ஸ்மார்ட் ஃபோன்களின் விற்பனையை அதிகரிக்க செய்ததில் முக்கிய பங்கு வகித்தது. இந்த மிட்-ரேஞ்ச ஹேண்ட்செட்டின் 7 மில்லியன் யூனிட்களை ஒரே ஆண்டில் விற்றது கூகுள். இந்நிலையில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் மாடலான பிக்சல் 7, ஒரே வருடத்தில் 7 மில்லியனுக்கும் அதிகமான யூனிட்கள் விற்பனையாகி நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை 30 மில்லியனை தாண்டும் என்றும் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் சாம்சங், ஒன்பிளஸ் மற்றும் ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் தற்போது பிடித்திருக்கும் மார்க்கெட்டின் ஒரு பகுதியைப் பிடிக்க கூகுள் தீவிரம் காட்டி வருகிறது. கூகுள் நிறுவனம் தனது லேட்டஸ்ட் ஆல்-நியூ கூகுள் பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோவை வெளியிட்டது, கூகிளின் அடுத்த தலைமுறை Tensor G2 ப்ராசஸர் மற்றும் ஆண்ட்ராய்டு 13 உடன் இந்த டிவைஸ் வரும். இதில் பிக்சல் 7 டிவைஸின் விலை ரூ.59,999 மற்றும் பிக்சல் 7 ப்ரோ டிவைஸின் விலை ரூ.84,999 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த 2 டிவைஸ்களும் வரும் அக்டோபர் 13 முதல் யூஸர்கள் வாங்க கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

Also Read : பட்ஜெட் விலையில் லேப்டாப்.. 4ஜி கார்டுடன் வரும் ‘ஜியோபுக்’ விலை என்னத் தெரியுமா.?

கூகுள் பிக்சல் மற்றும் சாம்சங் ஸ்மார்ட் ஃபோன் விற்பனைக்கு இடையே பெரிய இடைவெளி இருந்தாலும், முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட பிக்சல் 6 சீரிஸ் கடந்த இரண்டு தலைமுறை பிக்சல்களை விட அவை அதிக யூனிட்களை விற்றதாகவும் கூகுள் கூறுகிறது. இந்த வெற்றி பிக்சல் 7 சீரிஸில் தொடரும் என்ற நம்பிக்கையை நிறுவனம் கொண்டுள்ளது.

Nikkei Asia-வின் சில அறிக்கைபடி, கூகுள் நிறுவனம் சுமார் 8 மில்லியன் பிக்சல் 7 டிவைஸ்களை உற்பத்தி செய்ய ஆர்டர் கொடுத்துள்ளது. எந்த பிக்சல் டிவைஸிற்கும் இதுவரை இல்லாத வகையிலான மிக பெரிய தயாரிப்பு ஆர்டராக இது உள்ளது.

Published by:Selvi M
First published:

Tags: Google, Smartphone, Technology