இன்றைய வளர்ந்துவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப புதிய புதிய அப்டேட்டுகளுடன் கூடிய வசதிகளை இணையதளம் நமக்கு ஏற்படுத்தி தருகிறது. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் போல, கூகுள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் புதிய புதிப்பான ஆன்ட்ராய்டு 13 பீட்டாவை அறிமுகம் செய்துள்ளது. இந்த அப்பேட் google pixel 4 xl, google 4a, google pixel 4 a (5g), google pixel 5 a, google pixel 6, google pixel 6 pro போன்ற கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கும், Samsung, oneplus, Asus, oppo, vivo, Xiaomi மற்றும் பல பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கிறது.
புதிய அப்டேட்டுடன் வந்துள்ள ஆண்ட்ராய்டு, ஆண்ட்ராய்டு 12 ஐ போல் பெரிய மாற்றம் இருக்காது. இருந்த போதும் Android 13 ல் இயக்க முறைமையில் பல மேம்பாடுகளைக் கொண்டுவரும். காட்சி மேம்பாடுகளின் அடிப்படையில், புதிய தீம் கொண்ட ஆப்ஸ் ஐகான்கள் (themed app icons), பிக்சல் லாஞ்சருக்கான இரண்டு முகப்புத் திரை தளவமைப்புகள் (two home screen layouts for Pixel launcher) மற்றும் பலவற்றைப் பெறுவோம்.
இந்த புதிய ஆண்ட்ராய்டு பீட்டா பதிவானது தற்போது இந்தியாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட Google pixel 6a ஸ்மார்ட்போன்களும் பெறலாம். இதோ முழு விபரம்..
ஆண்ட்ராய்டு 13 பீட்டா பதிப்பை மொபைலில் பதிவிறக்க முதலில், https://www.google.com/android/beta யை கிளிக் செய்து google திட்டத்தில் பதிவு செய்யவும்.
Also Read : சாம்சங் போன் பயன்படுத்துபவர்களுக்கு ஹேப்பி நியூஸ்... இனி இந்த கவலை உங்களுக்கு வேண்டாம்
View your eligible devices என்பதைக் கிளிக் செய்யவும். இதில் google pixal 6a போன் லிஸ்டில் இருந்தால் நீல நிற Opt in பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
தொடர்ந்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு, உறுதிப்படுத்தல் பொத்தானை கிளிக் செய்யவும். இப்போது ஆண்ட்ராய்டு 13 பீட்டா திட்டத்தில் நீங்கள் இணைந்துவிட்டீர்கள்.
இதிலிருந்து அதிகபட்சம் 1-3 நாள்களில் android 13 ota மொபைலில் புதுப்பிக்கப்படும். முதலில் ஆண்ட்ராய்டு 13 யை புதுப்பிக்க Open Settings > System > System Update யை கிளிக் செய்து Install Update என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Also Read : உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை மாற்றுவது எப்படி?
இப்போது உங்கள் Google Pixel 6a ஆனது Android 13 புதுப்பிப்பைப் பதிவிறக்கத் தொடங்கும். இதற்கு சிறிது நேரம் எடுக்கும் என்பதால் மொபைலை சார்ஜில் வைத்திருங்கள். Android 13 பீட்டாவைப் புதுப்பிப்பதற்கு முன்னதாக பயனர்கள் உங்கள் போனில் உள்ள அனைத்து முக்கிய தகவல்களையும் copy செய்துக்கொள்ள வேண்டும். இல்லாவிடில் புதிய அப்டேட்டிற்கு பிறகு உங்களின் அனைத்து தகவல்களும் அழிந்துவிடும் என்பது நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.