ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

Google Pixel 6 ஸ்மார்ட்போன் அமேசானில் ரூ.44,444-க்கு விற்பனையாகிறது - விவரங்கள் இதோ!

Google Pixel 6 ஸ்மார்ட்போன் அமேசானில் ரூ.44,444-க்கு விற்பனையாகிறது - விவரங்கள் இதோ!

Google Pixel 6

Google Pixel 6

Google Pixel 6 Smartphone | நீங்கள் பிக்சல் 6 ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால், கூகுள் அதை முறையாக இந்தியாவில் அறிமுகம் செய்யும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கூகுள் நிறுவனம் தனது பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போனை இந்தியாவில் இன்னும் முறையாக அறிமுகப்படுத்தவில்லை, என்றாலும் நீங்கள் அவற்றை வாங்கி பயன்படுத்த முடியும். இது எப்படி முடியும் என்று யோசிக்கிறீர்களா? இதை பற்றிய விரிவான பல தகவல்களை உங்களுக்கு தருவதே இந்த பதிவின் நோக்கம். கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்கள், அமேசான் இந்தியா இணையதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

எனவே, நீங்கள் பிக்சல் 6 ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால், கூகுள் அதை முறையாக இந்தியாவில் அறிமுகம் செய்யும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை. மேலும், பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோவின் விற்பனைக்குப் பிந்தைய சேவைகளை கூகுள் வழங்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் அதிகாரப்பூர்வமாக இன்னும் இந்தியாவில் வெளியிடப்படவில்லை என்பதே இதற்கான காரணமாகும்.

கூகுள் பிக்சல் 6 அமேசானில் 8ஜிபி+128ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் ரூ.44,444-க்கு விற்கப்படுகிறது. அதேசமயம் பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போனானது அமேசானில் 12ஜிபி மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் ரூ.71,700-க்கு விற்கப்படுகிறது. 12ஜிபி மற்றும் 256ஜிபி வேரியண்ட் ரூ.99,650-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சோர்டா சன்னி மற்றும் ஸ்டோர்மி பிளாக் உள்ளிட்ட இரண்டு அற்புதமான நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றன.

அமெரிக்காவில், பிக்சல் 6 மொபைலின் 8 ஜிபி மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்ட வேரியண்ட் $599 டாலர் (தோராயமாக ரூ. 45,000) என்கிற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. 8ஜிபி ரேம் கொண்ட 256ஜிபி வேரியண்ட் மொபைலின் விலையானது $699 டாலராக (தோராயமாக ரூ. 52,500) விற்பனை செய்யப்படுகிறது. பிக்சல் 6 ப்ரோ ஆனது 128GB, 256GB, 512GB என மூன்று ஸ்டோரேஜ் அமைப்புகளில் விற்பனை செய்யப்படுகிறது. 128ஜிபி வேரியண்ட்டின் விலை $899 டாலராகவும் (தோராயமாக ரூ.67,500), 256ஜிபி வேரியண்டின் விலை $999 டாலராகவும்(தோராயமாக ரூ.75,000) மற்றும் 512ஜிபி வேரியண்ட்டின் விலை $1099 டாலராகவும்(தோராயமாக ரூ.82,500) உள்ளது.

Also Read : 2024-க்குள் ஸ்மார்ட்போன் கேமராக்கள் டிஎஸ்எல்ஆர் கேமராக்களை பின்தள்ளும் - சோனி நம்பிக்கை!

எனவே, இந்தியாவிலும் அமெரிக்காவிலும் இந்த ஃபோன்களின் விலை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருப்பதை கருத்தில் கொண்டு, நீங்கள் கூகுளின் இந்த அற்புதமான பிக்சல் போன்களை வாங்கலாம். இருப்பினும், விற்பனைக்குப் பிந்தைய சேவைகள் மிகவும் முக்கியமானவை, நீங்கள் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோவை வாங்கினால் தற்போதைக்கு அதற்கான சேவைகள் எதுவும் கிடைக்காது, ஏனெனில் கூகுள் இந்தியாவில் அவற்றை முறையாக அறிமுகப்படுத்தவில்லை.

Also Read : வாட்ஸ் அப் யூஸர்களே உஷார்... மகள் போல் மெசெஜ் அனுப்பி ரூ.15 லட்சம் பணம் பறிப்பு

எனவே நீங்கள் உண்மையிலேயே இந்த பிக்சல் மொபைலை விரும்பினால், பிக்சல் 6a ஸ்மார்ட்போனுக்காக நீங்கள் காத்திருக்க வேண்டும். இது விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஜூலை மாத இறுதியில் இந்திய சந்தைகளுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 21 முதல் அமெரிக்கா மற்றும் ஜப்பானில் முன்கூட்டிய ஆர்டருக்கு பிக்சல் 6a கிடைக்கும் என்று கூகுள் தரப்பில் இருந்து அறிவிப்பு வந்துள்ளது.

First published:

Tags: Amazon, Smartphone, Technology