• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • இதய துடிப்பு மற்றும் சுவாச விகிதத்தை கண்காணிக்கும் அம்சத்தை பெறும் கூகுள் பிக்சல் 6!

இதய துடிப்பு மற்றும் சுவாச விகிதத்தை கண்காணிக்கும் அம்சத்தை பெறும் கூகுள் பிக்சல் 6!

கூகுள் பிக்சல் 6

கூகுள் பிக்சல் 6

பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ ஃபோனில் இந்த அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை பரிசோதிக்க Google Fit app-ஐ ஓபன் செய்து Browse-க்கு சென்று Vitals-க்கு செல்ல வேண்டும்.

  • Share this:
கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரான்ஸ், தைவான், ஜப்பான், அமெரிக்கா மற்றும் யுனைட்டட் கிங்டம் உள்ளிட்ட நாடுகளில் கடந்த மாதம் கூகுள் நிறுவனம் தனது பிக்சல் 6 சீரிஸை (கூகுள் பிக்சல் 6 & பிக்சல் 6 ப்ரோ) அறிமுகப்படுத்தியது. இதனிடையே கூகுள் ஃபிட் ஆப் (Google Fit app) மூலம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கூகுள் பிக்சல் 6 டிவைஸில் ஹார்ட் ரேட் ட்ராக்கிங் மற்றும் ரெஸ்பிரேட்டரி ரேட் ட்ராகிங் அதாவது சுவாச வீதம் கண்காணிப்பு உள்ளிட்ட அம்சங்களை சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த அம்சங்கள் ஏற்கனவே Pixel 5 மற்றும் Pixel 4a யூஸர்களுக்கு சில நாட்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில், சில காரணங்களால் இவை பிக்சல் 6 சீரிஸில் இடம்பெறாமல் இருந்தது.

ஆனால் தற்போது கூகுள் ஃபிட் மூலம் இந்த புதிய அம்சங்கள் கூகுள் பிக்சல் 6 மற்றும் கூகுள் 6 ப்ரோவில் இடம்பெறுவதாக கூறப்படுகிறது. ஸ்மார்ட் ஃபோனின் கேமரா மற்றும் ஃபிளாஷ் மூலம் யூஸர்கள் தங்கள் இதய துடிப்பை அளவிடவும் சுவாச விகிதத்தை கண்காணிக்கவும் இந்த புதிய அம்சம் உதவுகிறது. முதற்கட்டமாக கூகுள் பிக்சல் 6 ஃபோன்கள் கூகுள் ஃபிட் ஆப் மூலம் இப்போது இதய துடிப்பு மற்றும் சுவாசக் கண்காணிப்பு அம்சங்களை பெறுகின்றன என்று 9to5Google-ன் அறிக்கை தெரிவிக்கிறது.

இதயத் துடிப்பு மற்றும் சுவாச துடிப்பை அளவிட Google Fit ஆப்ஸ் ஃபோனின் கேமராவை பயன்படுத்தும் அதே நேரத்தில் இந்த அம்சம் "மருத்துவ பயன்பாட்டிற்கானது அல்ல" என்று கூகுள் குறிப்பிட்டு உள்ளது. இதனிடையே இதய துடிப்பு கண்காணிப்பு அம்சத்தை சோதிக்கும் போது, அதன் முடிவுகள் துல்லியமாகவும் மற்றும் ஃபிட்பிட் டிராக்கருடன் நன்கு பொருந்தியதாகவும் ஒரு அறிக்கை 9to5Google-ன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ ஃபோனில் இந்த அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை பரிசோதிக்க Google Fit app-ஐ ஓபன் செய்து Browse-க்கு சென்று Vitals-க்கு செல்ல வேண்டும். ஹார்ட் ட்ராகிங் அம்சம் விரல்களின் நிறத்தில் நுட்பமான மாற்றங்களை கண்காணிக்க ஃபோனின் பின்புற கேமராவை பயன்படுத்துகிறது.

Also read... கேஷ்பேக் மற்றும் இலவச டேட்டா கூப்பன்களை வழங்கும் ஜியோ மற்றும் ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்கள்!

அதே போல சுவாச விகிதத்தை அளவிட தலை மற்றும் மேல் உடற்பகுதியை பிக்சல் 6 ஃபோனின் முன்புற கேமராவை நோக்கி வைத்து நார்மலாக சுவாசிக்க வேண்டும். பிக்சல் 6 மற்றும் 6 ப்ரோ டிவைஸ்கள் போதுமான வெளிச்சம் இருக்கும் போது துல்லியத்தை வெளிப்படுத்துவதாக அறிக்கைகள் கூறுகின்றன.

பழைய பிக்சல் டிவைஸ்களில் உள்ள Fit app-ல் ஃபிளாஷ்லைட்டை இயக்குவதற்கான பிரத்யேக பட்டன் இருந்தாலும், தற்போதைய பிக்சல் 6 சீரிஸில் இந்த ஆப்ஷன் இல்லை என்றே தோன்றுகிறது. எனவே துல்லிய முடிவுக்கு நன்கு வெளிச்சமான சூழல் தேவை. இந்த அம்சங்கள் early access முறையில் சில கூகுள் பிக்சல் 6 சீரிஸ் யூஸர்களுக்கு கிடைத்து வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: