கூகுள் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL விலை என்ன?

கேமராவில் இரவு நேரத்திலும் படம்பிடிக்கக் கூடிய வசதிகள் உள்ளது. வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களில் 3000 mAh பேட்டரி திறனுடன் கூகுள் பிக்சல் 3ஏ ஃபோன் கிடைக்கும்.

news18
Updated: May 8, 2019, 1:52 PM IST
கூகுள் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL விலை என்ன?
கூகுள் பிக்ஸல்
news18
Updated: May 8, 2019, 1:52 PM IST
கூகுள் நிறுவனம் கூகுள் I/O 2019 வருடாந்திர டெவலப்பர் மாநாட்டில் கூகுள் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ எக்ஸ்எல் ஃபோன்களை அறிமுகம் செய்துள்ளது.

2008-ம் ஆண்டு தொடங்கி தற்போது வரை இந்த Google I/O வருடாந்தர டெவலப்பர் மாநாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நேற்று தொடங்கிய நிகழ்ச்சியில் புதிய போன்களை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.

கூகுள் பிக்சல் 3ஏ விலை மற்றும் சிறப்பம்சங்கள்:


கூகுள் பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் இந்திய விலை ரூ.39,999 ஆக நிர்ணயம் செய்யப்ட்டுள்ளது.

கூகுள் பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போனில் ஆண்டிராய்டு 9.0 பை இயங்குதாளம், 5.6 இன்ச் FHD பிளஸ் டிஸ்ப்ளே, 12.2 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. செல்ஃபி கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 670 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும்.

கேமராவில் இரவு நேரத்திலும் படம்பிடிக்கக் கூடிய வசதிகள் உள்ளது. வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களில் 3000 mAh பேட்டரி திறனுடன் கூகுள் பிக்சல் 3ஏ ஃபோன் கிடைக்கும்.

கூகுள் பிக்சல் 3ஏ XL விலை மற்றும் சிறப்பம்சங்கள்:


கூகுள் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்ஃபோனின் இந்திய விலை ரூ.44,999 என நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

கூகுள் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போனில் ஆண்டிராய்டு 9.0 பை இயங்குதளம், 6 இன்ச் FHD பிளஸ் டிஸ்ப்ளே, 12.2 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. செல்ஃபி கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும்.

கூகுள் பிக்சல் 3ஏ போன்று இதிலும் கேமராவில் இரவு நேரத்திலும் படம்பிடிக்கக்கூடிய வசதிகள் புகுத்தப்பட்டுள்ளது. வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களில் 3700 mAh பேட்டரி திறனுடன் கூகுள் பிக்சல் 3ஏ XL ஃபோன் விற்பனைக்கு வர உள்ளது.

மேலும் பார்க்க:
First published: May 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...