• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • புகைப்படத்தை மறைக்க கூகுள் போட்டோஸில் புதிய அம்சம் அறிமுகம் - முழு விவரம் இதோ!

புகைப்படத்தை மறைக்க கூகுள் போட்டோஸில் புதிய அம்சம் அறிமுகம் - முழு விவரம் இதோ!

கூகுள் போட்டோ

கூகுள் போட்டோ

தனிப்பட்ட புகைப்படம் அல்லது போல்டர்களைக் கூட நீங்கள் மறைத்துக் கொள்ளலாம். பிரத்யேகமான பாஸ்வேர்டு, கைரேகை லாக் அல்லது ஸ்கிரீன் லாக் செட்டிங்ஸைக் கூட இந்த புகைப்படங்களின் பாதுகாப்புக்காக உபயோகப்படுத்திக்கொள்ள முடியும்.

  • Share this:
ஸ்மார்ட்போனில் இருக்கும் புகைப்படங்களை லாக்போட்டு மறைக்கும் வசதி கூகுள் போட்டோஸில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கூகுள் போட்டோஸில் புதிதாக ஒரு அப்டேட் கொண்டு வரப்பட்டுள்ளது. அதில், யூசர்கள் தங்களுக்கு முக்கியமாக கருதும் அல்லது பிரைவசியாக கருதும் போட்டோக்களை லாக் செய்து கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. பாஸ்வேர்டு போட்டு நீங்கள் விரும்பும் புகைப்படங்களை மறைத்துக் கொள்ளலாம். ஏனென்றால், யார் ஸ்மார்ட்போன் எடுத்தாலும் கேலரியில் இருக்கும் புகைப்படங்களை தான் முதலில் பார்க்க விரும்புகின்றனர்.

அந்த நேரத்தில் நமக்கு பிடித்த சில பிரைவசியான புகைப்படங்கள் இருந்தாலும், அதனை அவர்கள் பார்க்க நேரிடும். அல்லது முன்கூட்டியே அந்தப் புகைப்படங்களை அழித்துவிட்டு அவர்களின் கைகளில் ஸ்மார்ட்போனை கொடுப்போம். இந்த சங்கடமான நிலை, கூகுள் போட்டோஸ் யூசர்களுக்கு வராது. பிரைவசிக்காக எடுத்த எந்த புகைப்படங்களானாலும், பாஸ்வேர்டு போட்டு மறைத்துக்கொள்ளலாம். உங்கள் அனுமதியில்லாமல் வேறு யாரும் அந்தப் புகைப்படங்களை பார்க்க முடியாது.

இந்த புதிய வசதி அனைத்து மொபைல்களுக்கும் இப்போது கொடுக்கப்படவில்லை. பிக்சல் மொபைல்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக கொடுக்கப்பட்டுள்ளது. பிக்சல் போன் பயன்படுத்தும் யூசர்களின் கருத்துகளுக்கு ஏற்ப ஆன்டிராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் ஸ்மார்ட்போன்களிலும் இந்த புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த கூகுள் திட்டமிட்டுள்ளது.

தனிப்பட்ட புகைப்படம் அல்லது போல்டர்களைக் கூட நீங்கள் மறைத்துக் கொள்ளலாம். பிரத்யேகமான பாஸ்வேர்டு, கைரேகை லாக் அல்லது ஸ்கிரீன் லாக் செட்டிங்ஸைக் கூட இந்த புகைப்படங்களின் பாதுகாப்புக்காக உபயோகப்படுத்திக்கொள்ள முடியும்.

கூகுள் போட்டோஸ் லாக் போல்டரை உருவாக்குவது எப்படி?

நீங்கள் ஏற்கனவே ஸ்கிரீன் லாக் செட்டிங்ஸ் பயன்படுத்திக் கொண்டிருந்தால், அதே லாக் செட்டிங்ஸைக் இந்த போல்டருக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். முதலில் கூகுள் போட்டோஸூக்கு செல்லுங்கள். அங்கு Library / Utilities / Locked Folder என்பதை வரிசையாக தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போது, ஸ்கிரீனில் என்ன செய்ய வேண்டும்? என வழிமுறை காட்டும். அதனை பின்பற்றும்போது லாக் ஃபோல்டரை உருவாக்கலாம்.

இப்போது உங்கள் லாக் ஃபோல்டர் உருவாக்கப்பட்டிருக்கும். இதனையடுத்து நீங்கள் விரும்பிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அந்த போல்டருக்கு மூவ் செய்யுங்கள். அதாவது, கூகுள் புகைப்படங்கள் ஃபோல்டரைத் திறந்து நீங்கள் விரும்பும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஒட்டுமொத்தமாக தேர்வு செய்யுங்கள். பின்னர், மேல் வலது புறத்தில் More என்ற ஆப்சன் இருக்கும். அதனை கிளிக் செய்தால் லாக் போல்டருக்கு மூவ் செய்யுங்கள் எனக் காட்டும். அந்த ஆப்சனை கிளிக் செய்தவுடன், நீங்கள் தேர்ந்தெடுத்த பைல்கள் அந்த ஃபோல்டருக்கு சென்றுவிடும்.

Also read... உங்களது புகைப்படங்களை கலர்ஃபுல்லாக்கும் பெஸ்ட் 5 கேமரா செயலிகள்!

லாக் ஃபோல்டரை கண்டுபிடிப்பது எப்படி?

லாக் போல்டருக்கு சென்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வழக்கமாக இருக்கும் போல்டரில் காண்பிக்கப்படாது. ஒருவேளை லாக் ஃபோல்டருக்குள் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை நீங்கள் பார்க்க வேண்டும் என விரும்பினால், கூகுள் ஃபோட்டோ பைலைத் திறக்க வேண்டும். அதில் லாக்டு ஃபோல்டர் ஆப்சனை தேர்ந்தெடுத்தால், மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பைல்களைக் காணலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: