ஜூன் 1ம் தேதியோடு முடிவடையும் கூகுள் போட்டோஸ் இலவச அன்லிமிடெட் ஸ்டோரேஜ் : மாற்றுவழி இருக்கிறதா?

Google Photos

கூகுள் புகைப்படங்களுக்கான மாற்று வழிகளைத் தேடுகிறீர்களானால், ஸ்டோரேஜ் பற்றி கவலைப்படாமல் உங்கள் புகைப்படங்களை தொந்தரவில்லாமல் சேமிக்க சில வழிகள் உள்ளது.

  • Share this:
ஜூன் 1ம் தேதி முதல் கூகுள் போட்டோஸ்களின் இலவச ஸ்டோரேஜ் ஆப்சன் இனி கிடைக்காது. பழைய நினைவுகளை இழக்க விரும்பாதவர்களிடையே பயம் அதிகரித்து வருகிறது. இப்போது, உங்களில் பலர் கூகுள் புகைப்படங்களுக்கான மாற்று வழிகளைத் தேடுகிறீர்களானால், ஸ்டோரேஜ் பற்றி கவலைப்படாமல் உங்கள் புகைப்படங்களை தொந்தரவில்லாமல் சேமிக்க சில வழிகள் உள்ளது. எனவே, உங்கள் புகைப்படங்களுக்கு ஏற்ற கிளவுட் ஸ்டோரேஜ் திட்டத்தை வழங்கும் ஏதேனும் சேவை அல்லது பயன்பாடு இருக்கிறதா? அல்லது கூகிளுக்கு பணம் செலுத்தத் தொடங்குவது சிறந்ததா? என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கான கிளவுட் ஸ்டோரேஜ் சேவையை விட கூகுள் போடோஸின் பயன்பாடு மிக பயனுள்ளதாக இருந்தது. இதில் யூசர்கள் படங்களை எளிதாக தேடவும், ஸ்லைடு காட்சிகள், வீடியோக்கள், புகைப்படங்களைத் திருத்தவும், இலவச நினைவகம் மற்றும் பலவற்றை தானாக உருவாக்கவும் அனுமதிக்கும் பல அம்சங்களையும் கூகுள் வழங்குகிறது. அனைத்து செயல்படுகளையும் பார்க்கும் போது, கூகுள் போடோஸ்களுக்கு நேரடி மாற்று எதுவும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இருப்பினும், கூகுள் போட்டோஸ் வழங்கும் அனைத்து அம்சங்களையும் யூசர்கள் கவனிக்கவில்லை என்றால், அவர்கள் ஆன்லைனில் தங்கள் ஊடகத்தை காப்புப் பிரதி எடுக்க அனுமதிக்கும் மற்ற எந்த ஒரு கிளவுட் சேமிப்பக சேவையையும் தேர்வு செய்யலாம். அந்த வகையில் மிகவும் பிரபலமான சில விருப்பங்களைப் பற்றி பாப்போம்:

1. மைக்ரோசாஃப்ட் ஒன்ட்ரைவ் (MICROSOFT ONEDRIVE)

மைக்ரோசாஃப்ட் ஒன்ட்ரைவ் (MICROSOFT ONEDRIVE) சிறந்த கூகுள் போட்டோஸ் மாற்றுகளில் ஒன்றாகும். மேலும் யூசர்களுக்கு பிற மைக்ரோசாஃப்ட் சேவைகளுக்கான அணுகலையும் இது வழங்குகிறது. இது புகைப்பட ஸ்டோரேஜ் மற்றும் ஆட்டோமேட்டிக் இமேஜ் டேக்கிங் கேலரி காட்சியை உங்களுக்கு வழங்குகிறது. ஒன் டிரைவ் 5 ஜிபி வரை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஸ்டோரேஜ் செய்ய இலவசமாக கிடைக்கிறது. 100 ஜிபி ஸ்டோரேஜ் திட்டத்திற்கு மாதம் ரூ.130 மற்றும் வருடத்திற்கு ரூ.4,899 செலவாகிறது. மைக்ரோசாப்ட் ஒன்ட்ரைவிற்கான குடும்பத் திட்டத்தை பொறுத்தவரை ஆண்டுக்கு ரூ.6,199 செலவாகும்.

Read More:   பாலியல் குற்றச்சாட்டுகளை திசைத்திருப்புவது நானா? - பாடகி சின்மயி வெளியிட்ட வீடியோ!

2. அமேசான் போட்டோஸ் (AMAZON PHOTOS)

அமேசான் போட்டோஸ் (AMAZON PHOTOS) முழு தெளிவுத்திறன் கொண்ட புகைப்பட சேமிப்பிற்கான அன்லிமிடெட் சேமிப்பிடத்தை வழங்குகிறது மற்றும் யூசர்களை ஐந்து குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது. இது பல சர்ச், எடிட்ஸ் மற்றும் ஷேரிங் அம்சங்களையும் வழங்குகிறது. அமேசான் போட்டோஸ் அமேசான் பிரைம் உறுப்பினர் மற்றும் உறுப்பினரல்லாதவர்களுக்கும் தொகுக்கப்பட்டுள்ளது. இதன் இலவச சேமிப்பு 5 ஜிபி வரை மட்டுமே இருக்கும்.

3. ஆப்பிள் போட்டோஸ் (APPLE PHOTOS)

ஆப்பிள் போட்டோஸ் ஆப்பிள் யூசர்களுக்கான மற்றொரு நல்ல கூகுள் போடோஸ்களின் மாற்றாக இருக்கிறது. இந்த சேவை ஆப்பிள் சுற்றுச்சூழல் அமைப்பு, சக்திவாய்ந்த AI அம்சங்கள் மற்றும் பரந்த அளவிலான எடிட்டிங் கருவிகள் ஆகியவற்றில் தடையற்ற ஒருங்கிணைப்பை வழங்குகிறது. இது 5 ஜிபி வரை மட்டுமே இலவச ஸ்டோரேஜ் விருப்பத்தை வழங்குகிறது. மேலும் விண்டோஸ் அல்லது ஆண்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் வேலை செய்யாது.

Read More:   தலைமைச் செயலாளர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு செக் வைத்தாரா மம்தா பானர்ஜி?

4. டிராப்பாக்ஸ் (DROPBOX)

டிராப்பாக்ஸ் (DROPBOX) என்பது எல்லா வகையான பைல்களுக்கும் ஒரு கிளவுட் ஸ்டோரேஜ் தளமாக அமைகிறது. இது கிராஸ்-பிளாட்பார்ம் கம்பாட்டிபிலிட்டி தன்மை மற்றும் டிராப்பாக்ஸ் பாஸ்வோர்ட் மற்றும் டிராப்பாக்ஸ் இடமாற்றங்கள் போன்ற கூடுதல் அம்சங்களை வழங்குகிறது. இந்த சேவை அனைத்து பைல் வகைகளையும் ஆதரிக்கிறது மற்றும் 2 ஜிபி இலவச சேமிப்பிடத்தை மட்டுமே வழங்குகிறது. இந்த திட்டங்கள் மிகவும் விலை உயர்ந்தவை மற்றும் தனிப்பட்ட திட்டங்களுக்கு 9.99 அமெரிக்க டாலர்கள் ( அதாவது தோராயமாக ரூ. 720) விலையில் தொடங்குகின்றன.
Published by:Arun
First published: