புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பேக்-அப் செய்வதற்கு, கூகுள் ஃபோட்டோஸ் மிகச்சிறந்த ஆப்-ஆக உள்ளது. ஸ்மார்ட்ஃபோன், டேப்லட், அல்லது லாப்டாப் என்று எந்த சாதனத்தில் இருந்தும் நீங்கள் மீடியாவை அக்சஸ் செய்ய முடியும். மொபைல் ஆப் மட்டுமின்றி, நீங்கள் செயலியின் இணைய பதிப்பையும் எளிதாக அணுகி, பல்வேறு அம்சங்களை பயன்படுத்த முடியும். மொபைல் ஆப்-பில் இல்லாத அல்லது மறைந்திருக்கும் பல அம்சங்கள், வெப் வெர்ஷனில் காணப்படுகிறது. கூகுள் ஃபோட்டோசை மிகச்சிறந்த முறையில் பயன்படுத்தி, இயங்குதளத்தில் உங்கள் யூசர் அனுபவத்தை மேம்படுத்த உதவும் ஐந்து அம்சங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.,
புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடிட் செய்யலாம்:
கூகுள் ஃபோட்டோஸ் தற்போது புதிய அப்டேட் ஒன்றை பெற்றுள்ளது. வெப் வெர்ஷனில் மட்டுமே இருந்த எடிட் செய்யக்கூடிய அம்சம், தற்போது மொபைல் செயலி வெர்ஷனிலும் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கூகுள் ஃபோட்டோஸ் செயலியில் புகைப்படம் மற்றும் வீடியோவில் உள்ள நேரம் மற்றும் தேதியை எடிட் செய்வதற்கு இந்த அம்சம் அனுமதிக்கிறது. இந்த அம்சத்தைப் பயன்படுத்த, நீங்கள் கூகுள் ஃபோட்டோஸ்-ன் சமீபத்திய அப்டேட்டை டவுன்லோடு வேண்டும்.
கொலாஜ் அல்லது மூவியை உருவாக்குங்கள்:
கூகுள் ஃபோட்டோஸ் ஆப், புகைப்படங்களைப் பயன்படுத்தி மூவிஸ் அல்லது கொலாஜ் உருவாக்கலாம். இந்த அம்சத்தை நீங்கள் மொபைல் பதிப்பில் உள்ள லைப்ரரி பிரிவில் காணலாம். ‘Utilities’ என்ற ஆப்ஷனில் ‘tap’ செய்து, கீழே ஸ்க்ரோல் செய்தால், மூவி மற்றும் கொலாஜ் ஆப்ஷனைக் காணலாம். நீங்கள் உருவாக்கிய மூவி அல்லது கொலாஜை நீக்கினாலும், அதில் பயன்படுத்தபப்ட்ட உங்களின் ஒரிஜினல் புகைப்படங்களை கூகுள் ஃபோட்டோஸ் ஆப் நீக்காது.
நீக்கிய புகைப்படங்கள், வீடியோக்களை மீண்டும் ரீஸ்டோர் செய்யுங்கள்:
சமீபத்தில் நீங்கள் நீக்கிய (டெலீட் செய்த) புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை, டிராஷ் பகுதியில் இருந்து ரீஸ்டோர் செய்யலாம். செயலியைத் திறந்து, லைப்ரரி பகுதிக்கு சென்றால், டிராஷ் ஆப்ஷன் காணப்படும். அதை கிளிக் செய்தால், நீங்கள் டெலிட் செய்த புகைப்படங்களைக் காணலாம்.
ஒரு வேளை, நீங்கள் நீக்கிய புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் டிராஷ் பகுதியில் இல்லையென்றால், உங்களால் அதனை ரீஸ்டோர் முடியாது. அது மட்டுமின்றி, டிராஷ் பகுதியில் இருக்கும் மீடியா, நீங்கள் நீக்கிய 60 நாட்கள் வரை மட்டுமே இருக்கும். 60 நாட்களுக்கு மேல் டிராஷ் பகுதியில் இருக்கும் வீடியோ அல்லது புகைப்படம் தானாகவே நிரந்தரமாக அழிந்து விடும். அது மட்டுமின்றி, நீங்கள் நிரந்தரமாக நீக்குக என்ற விருப்பத்தை தேர்வு செய்தாலும், உங்களால் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை ரிஸ்டோர் செய்ய முடியாது என்பதை கிளிக் செய்யவும்.
Also read... ஒரே நாளில் டெலிகிராமுக்கு தாவிய 70 மில்லியன் யூசர்கள் - வாட்ஸ்அப் நிறுவனம் அதிர்ச்சி!
கூகுள் ஃபோட்டோஸ் கூடுதலான ஸ்பேஸ்:
கூகுள் ஃபோட்டோஸ்-ல் கூடுதலான ஸ்டோரேஜ் நிர்வாகக் கருவி உள்ளது. இதைப் பயன்படுத்தி, நீங்கள் ஸ்டோரேஜ் ஸ்பேசை அதிகரிக்கலாம். தெளிவில்லாத புகைப்படங்கள், ஸ்க்ரீன்ஷாட்டுகள், பெரிய வீடியோக்கள் மற்றும் உங்களுக்கு தேவையில்லாத புகைப்படங்கள் ஆகியவற்றை நீக்க இந்த கருவி பயன்படுகிறது.
இதற்கு Google Photos > Back up மற்றும் Sync settings > Manage Storage என்பதை கிளிக் செய்து ஸ்பேஸை சரி செய்து கொள்ளலாம்.
உங்கள் புகைப்படங்களை ஆர்கிவ் செய்யுங்கள்:
சில நேரங்களில், உங்கள் மொபைலில் இருக்கும் புகைப்படத்தை நீங்கள் மற்றவர்கள் பார்க்க விரும்பவில்லை என்றால், நீங்கள் ஆர்கிவ் என்ற அம்சத்தைப் பயன்படுத்தி, புகைப்படங்களை மறைவாக வைக்கலாம்.
இதை அணுக, Library > Utilities > Move photos to Archive என்பதை கிளிக் செய்தால் நீங்கள் தேர்வு செய்ய புகைப்படம் அல்லது வீடியோ மற்றவர்கள் பார்க்க முடியாமல் மறைத்து வைக்க முடியும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Google