2022 முதல் மறுசுழற்சி ப்ளாஸ்டிக் மூலமாகவே கூகுள் ஃபோன்கள் தயாராகும்!

100 சதவிகிதம் மறு சுழற்சி செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் மூலமாகவே தயாரிக்கப்படும் என்றும் கூகுள் உறுதி தெரிவித்துள்ளது.

Web Desk | news18
Updated: August 6, 2019, 11:52 AM IST
2022 முதல் மறுசுழற்சி ப்ளாஸ்டிக் மூலமாகவே கூகுள் ஃபோன்கள் தயாராகும்!
மாதிரிப்படம்
Web Desk | news18
Updated: August 6, 2019, 11:52 AM IST
வருகிற 2022-ம் ஆண்டு முதல் மறுசுழற்சி செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் மூலப்பொருட்கள் மூலம் கூகுள் ஃபோன்கள் மற்றும் ஸ்பீக்கர்கள் தயாராகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலைக் காக்கவும் கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கவும் இப்புதிய முயற்சியை அடுத்த ஆண்டு முதலே தொடங்க உள்ளதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது. மக்களை மட்டுமின்றி அரசின் நடவடிக்கைகளையும் பின்பற்றிக் கவரும் நோக்குடன் டெக் நிறுவனங்களின் அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வும் ஒருவித காரணம் என்றே கூறப்படுகிறது. கடந்த 2017-ம் ஆண்டில் இருந்ததைவிட 2018-ம் ஆண்டும் கூகுளின் கார்பன் வெளியேற்றம் 40 சதவிகிதம் வரையில் குறைக்கப்பட்டுள்ளதாம். 2020 முதல் கூகுள் தயாரிப்புகளில் ஒன்பதில் மூன்று தயாரிப்புகள் மறு சுழற்சி செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் மூலமாக மட்டுமே தயாராகும் என கூகுள் சேவைப் பிரிவின் தலைவர் மீகன் தெரிவித்துள்ளார்.

மேலும் 2022-ம் ஆண்டு முதல் கூகுளின் தயாரிப்புகள் முழுவதும் 100 சதவிகிதம் மறு சுழற்சி செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் மூலமாகவே தயாரிக்கப்படும் என்றும் கூகுள் உறுதி தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்க: சுழலும் கேமிரா உடன் விற்பனைக்கு வந்துள்ளது சாம்சங் கேலக்ஸி A80!
First published: August 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...