ஆண்களைவிட பெண்களுக்கு அதிகம் சம்பளம் தரும் கூகுள்!

கூகுள் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்களை விட பெண்களுக்கு ஊதியம் குறைவாகக் கொடுப்பதாகப் புகார் எழுந்தது.

Web Desk | news18
Updated: March 6, 2019, 12:31 PM IST
ஆண்களைவிட பெண்களுக்கு அதிகம் சம்பளம் தரும் கூகுள்!
கூகுள் (Image: AP)
Web Desk | news18
Updated: March 6, 2019, 12:31 PM IST
கூகுள் நிறுவனம் குறிப்பிட்ட ஒரு பணியிடத்துக்கு மட்டும் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் சம்பளம் தருகிறது.

கூகுள் நிறுவனத்தில் சர்வதேச அளவில் பணி செய்யும் 91 சதவிகித பணியாளர்களிடம் ஒரு உட்கட்ட சர்வே ஆய்வு நடத்தப்பட்டது. இதில், கூகுளில் கிரேட் 4 மென்பொருள் பொறியாளர்களுக்கான பணியில் மட்டும் பெண்கள் அதிகம் ஊதியம் பெறுகின்றனர்.

கூகுள் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்களை விட பெண்களுக்கு ஊதியம் குறைவாகக் கொடுப்பதாகப் புகார் எழுந்தது.


பணிக்குத்தான் ஊதியமே தவிர பாலின வேறுபாடுகளுக்கு இல்லை என்ற புகார் எழுந்தது. இதையடுத்து பாலின வேறுபாடு காட்டியதற்காக நஷ்ட ஈடு வழங்கியது கூகுள்.

அதன் அடிப்படையில் 10,677 கூகுள் பணியாளர்களுக்கு நஷ்ட ஈடாக சுமார் 9.7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டன.

அதாவது, தலா 908 அமெரிக்க டாலர்கள். தற்போது கிரேட் 4 மென்பொருள் பொறியாளர்கள் பணியில் பெண்களுக்கு ஊதியம் அதிகம் வழங்கப்பட்டதால் அதற்கு நஷ்ட ஈடாக ஆண்களுக்கு குறிப்பிட்ட தொகை வழங்கப்பட்டுள்ளதாக ஃபோர்ப்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Loading...

மேலும் பார்க்க: நடிகர் சூர்யா நடிப்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு விளம்பரப் படம்
First published: March 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...