ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

அறிமுகமான இரண்டே ஆண்டுகளில் முதலிடம்..! அதிகப் பயனாளர்களால் சாதித்த கூகுள் பே

அறிமுகமான இரண்டே ஆண்டுகளில் முதலிடம்..! அதிகப் பயனாளர்களால் சாதித்த கூகுள் பே

கூகுள்பே

கூகுள்பே

புதிதாக கூகுள் பே அறிமுகம் செய்துள்ள ‘வெர்ச்சுவல் டோக்கன் அட்டைகள்’ பாதுகாப்பான பரிவர்த்தனைக்கு ஏற்ற மிகச்சிறந்த அம்சமாகவே கருதப்படுகிறது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

இந்தியாவில் அறிமுகமான இரண்டே ஆண்டுகளில் 67 மில்லியன் பயனாளர்களுடன் டிஜிட்டல் பேமண்ட் தளங்களுள் முதலிடத்தைப் பெற்றுள்ளது கூகுள் பே.

ஃப்ளிப்கார்ட் அறிமுகம் செய்த போன்பே 55 மில்லியன் பயனாளர்களுடன் நாட்டிலேயே இரண்டாம் இடம் பிடித்துள்ளது. சமீபத்தில் ‘இந்தியாவுக்கான கூகுள்’ நிகழ்வு ஐந்தாம் ஆண்டாக நடைபெற்றது. இந்நிகழ்வில், கூகுள் பே தளத்தின் பயனாளர்கள் கடந்த 12 மாதங்களில் பயனாளர்களின் எண்ணிக்கை மும்மடங்கு உயர்ந்துள்ளதை உறுதி செய்துள்ளது.

டிஜிட்டல் பேமன்ட் தளங்களின் வளர்ச்சி என்பது இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதார ஆர்வத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது என கூகுள் பே இயக்குநர் அம்பரிஷ் கென்கே தெரிவித்துள்ளார். எலெக்ட்ரானிக் பணப்பரிமாற்றம் முறைகள் கடந்த நான்கு ஆண்டுகளில் 50 சதவிகித வளர்ச்சியைப் பெற்றுள்ளது. யூபிஐ பேமன்ட் முறைகளாலே இந்த வளர்ச்சி இன்னும் அதிகப்படியானதாக அமைந்ததாகக் கூறப்படுகிறது.

புதிதாக கூகுள் பே அறிமுகம் செய்துள்ள ‘வெர்ச்சுவல் டோக்கன் அட்டைகள்’ பாதுகாப்பான பரிவர்த்தனைக்கு ஏற்ற மிகச்சிறந்த அம்சமாகவே கருதப்படுகிறது. இம்முறையில், நீங்கள் உங்கள் விசா கார்டின் எண்ணை பதிவு செய்யத்தேவையில்லை. இதற்குப் பதிலாக தோராயமாக உருவாகும் ஒரு டோக்கன் எண் உங்களுக்குக் கிடைக்கும். இதன் மூலமாகவே பரிவர்த்தனையை செய்துகொள்ள முடியும். இந்த முறையால் உங்களது பரிவர்த்தனையின் எந்தவொரு உண்மையான விவரங்கள் வெளியாக வாய்ப்பே இல்லை என்கிறது கூகுள் பே.

மேலும் பார்க்க: இந்தியாவுக்கான கூகுள்பே: பாதுகாப்பான பணப் பரிமாற்றங்களுக்கு ஏற்ற அப்டேட்!

ரஜினியின் புது கணக்கு

First published:

Tags: Google pay