ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

Google Pay-ல் ஏற்படும் பேமெண்ட் சிக்கல்களை சரி செய்வது எப்படி? 

Google Pay-ல் ஏற்படும் பேமெண்ட் சிக்கல்களை சரி செய்வது எப்படி? 

G Pay

G Pay

Google Pay Payment Issues | நீங்கள் கூகுள் பே மூலம் பணம் செலுத்தும் போது சில சிக்கல்களை எதிர்கொண்டால், அதனை சரி செய்து கொள்வதற்காக வழிமுறைகள் என்னவென்று தெரியுமா?

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

இந்தியாவில் கூகுள் பே போன்ற ஆன்லைன் பேமெண்ட் ஆப்கள் அசுர வளர்ச்சி அடைந்து வருகின்றன. பெட்டிக்கடை முதல் அதிநவீன மால்கள் வரை இன்று QR Code ஸ்கேனர்களைக் காண முடிகிறது, அதில் போனில் உள்ள பேமெண்ட் ஆப் ஸ்கேனரை ஸ்கேன் செய்து சில நிமிடங்களிலேயே பணம் செலுத்திவிடலாம். ஃபோன் ரீசார்ஜ், பில் பேமெண்ட், ஷாப்பிங் மற்றும் ஆன்லைன் மூலம் பணம் அனுப்புவது போன்ற பல்வேறு பரிவர்த்தனைகளுக்கு கூகுள் பே பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் இந்த தொழில்நுட்பம் திடீரென வேலை செய்யவில்லை என்றால் என்ன செய்வது?. பணம் செலுத்தும் ஆப்ஸைப் பயன்படுத்தும் போது டிஜிட்டல் நிதி பரிவர்த்தனைகள் தோல்வியடையும் நிகழ்வுகள் ஏற்படும். நீங்கள் கூகுள் பே மூலம் பணம் செலுத்தும் போது சில சிக்கல்களை எதிர்கொண்டால், அதனை சரி செய்து கொள்வதற்காக வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கூகுள் பே-யில் பேமெண்ட் தொடர்பான சிக்கல்களைச் சரிசெய்வது எப்படி?

இன்டர்நெட் கனேக்‌ஷன் சரியாக உள்ளதா?

‘என்னது இது சின்னபுள்ளத் தனமா இருக்கு’ என நீங்கள் நினைக்கலாம், ஆனால் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் முன்பு உங்கள் போனில் டேட்டா அல்லது வைஃபை கனேக்‌ஷன் சரியாக வேலை செய்கிறதா? என்பதை ஒருமுறை சரிபார்ப்பது கட்டாயம். இல்லையெனில் போன் டேட்டா அல்லது வைஃபை இணைப்பை ரீஸ்டார்ட் செய்துவிட்டு, அவை சரியாக இணைப்பில் உள்ளதை உறுதி செய்து கொள்ளவும். மேலும் நெட்வொர்க் மிகவும் ஸ்லோவாக இருக்கும் போது கூகுள் பே மூலம் பணப்பரிமாற்றம் செய்தாலும், நீங்கள் சிக்கல்களை சந்திக்க நேரிடலாம்.

உங்கள் சரிபார்க்கப்பட்ட எண்ணைச் சரிபார்க்கவும்:

கூகுள் பே ஆப்ஸில் கொடுக்கப்பட்டுள்ள உங்களுடைய எண் சரிபார்க்கப்பட்ட எண் தானா என்பதை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள். உங்கள் எண் தவறாகவோ அல்லது காலாவதியானதாகவோ இருந்தால், எண்ணைப் புதுப்பிப்பது மிகவும் எளிது. உங்கள் கூகுள் பே ஆப்பில் உள்ள சுயவிவரப் படத்தைக் கிளிக் செய்யவும். பின்னர் சேட்டிங்கில் (Setting) தனிப்பட்ட தகவலைத் தேர்ந்தெடுக்கவும் (Personal Information ). அங்குள்ள உங்களுடைய மொபைல் எண் சரியானதா? என்பதை சோதித்துக் கொள்ளலாம்.

கூகுள் பே உடன் இணைக்கப்பட்டுள்ள கார்டை சரிபார்க்கவும்:

கூகுள் பே என்பது உங்களின் பில்கள் மற்றும் பணப் பரிவர்த்தனைகளைச் செலுத்துவதற்கான ஒரு கருவி மட்டுமே. அதற்கான தொகை எப்போதும் உங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் இணைக்கப்பட்டுள்ள உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கப்படும். எனவே இணைக்கப்பட்ட அனைத்து கார்டுகளும் அப்டேட் செய்யப்பட்டுள்ளதா அல்லது இல்லையா என்பதைச் சரிபார்க்கவும். இதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் கூட பணத்தை அனுப்பு முடியாது.

அப்டேட் கூகுள் பே:

முதலில் கூறியதைப் போல் எப்படி இன்டர்நெட் இருக்கிறதா? இல்லையா? என சோதித்து பார்ப்பது அவசியமோ, அதேபோல் உங்களுடைய போனில் உள்ள கூகுள் பே ஆப் அப்டேட் செய்யப்பட்டுள்ளதா? என்பதையும் சரிபார்க்க வேண்டும். அதற்கு கூகுள் பே ஸ்டோருக்கு சென்று, அதில் உள்ள கூகுள் பே ஆப் புதுப்பிக்கப்பட்டுள்ளதா? என்பதை பார்க்கவும். அவ்வாறு அது அப்டேட் செய்யப்படாமல் இருந்தால், Update என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து அதனை புதுப்பிக்கவும். நீங்கள் கூகுள் பேவை அப்டேட் செய்தால், அது பாதுகாப்பு காரணங்களுக்கு மீண்டும் ஒருமுறை போன் நெம்பர், கார்டு விவரங்கள் ஆகியவற்றை உள்ளிடும் படி செய்ய கேட்கும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

First published:

Tags: Google pay