தற்போது ஏராளமானோர் தங்கள் மொபைல் சாதனத்தில் கூகுள் பே பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துகின்றனர். நண்பர்களுக்கோ உறவினர்களுக்கோ பணம் அனுப்பவும் இந்த ஆப்ஸ் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. கூகுள் பே என்பது கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் இலவச மொபைல் ஆப்ஸ் ஆகும். இதில் பல நன்மைகள் உள்ளன. பயனர்கள் Google Pay-ஐ பயன்படுத்தும்போது வாடிக்கையாளர்கள் கூடுதல் பரிவர்த்தனைக் கட்டணங்களை செலுத்துவதில்லை.
கூகுள் பே ஃபார் இந்தியா (Tez) ஆப்ஸ் மீண்டும் Apple App Store-இல் வந்துள்ளது. பிரபலமான டிஜிட்டல் பேமெண்ட்களின் ஆப்ஸ் இந்த வாரத்தில் சில நாட்களுக்கு யாருக்கும் கிடைக்கவில்லை, App Storeல-இருந்து பட்டியலிடப்படாத நிலையில், கூகிள் ஆப்ஸில் சில சிக்கல்களை சரிசெய்தது. இப்போது கூகுள் பே ஆப்ஸின் சிக்கல்கள் தீர்ந்துவிட்டதாக கூகுள் கூறுகிறது. இதன் பொருள் கூகிள் பே ஃபார் இந்தியா ஆப்ஸானது PhonePe, Paytm, மற்றும் Amazon Pay உள்ளிட்ட போட்டி டிஜிட்டல் பேமெண்ட் தளங்களுடன் மீண்டும் டிஜிட்டல் போர்களை தொடங்கலாம் என்பதாகும்.
கூகுள் பே ஆப்ஸ்க்கான திருத்தங்கள் பேமெண்ட் வெற்றி விகிதங்களை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஒருங்கிணைந்த கொடுப்பனவு இடைமுகம் (UPI) பரிவர்த்தனைகளுக்கும் இது வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பயனர்கள் இப்போது தங்கள் Apple iPhoneல் உள்ள App Storeலிருந்து கூகுள் பேவை பதிவிறக்கம் செய்யலாம் மற்றும் ஏற்கனவே உள்ள கூகுள் பே பயனர்கள் தங்கள் iPhoneகளில் ஆப்ஸை அப்டேட் செய்ய வேண்டும்.
Also read... இந்தியாவில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மெசஞ்சர்களில் கிராஸ் மெசேஜிங் அம்சம் அறிமுகம்
வெளியீட்டுக் குறிப்புகள் மற்றும் புதிய கூகுள் பே ஃபார் இந்தியா (Tez) ஆப்ஸ்க்கான சேஞ்ச்லாக் சரியாக நிர்ணயிக்கப்பட்டவற்றின் அடிப்படை பற்றி அதிக தகவல் எதுவும் இல்லை. "கூகுள் பே ஆஃப்ஸை அப்டேட் செய்த பிறகு நாங்கள் கவனித்ததிலிருந்து, நாங்கள் முன்பு பயன்படுத்திய இணைக்கப்பட்ட UPI வங்கிக் கணக்கையும், கூகிள் பே ஆப்ஸையும் மீட்டெடுக்க வேண்டும்.
அதாவது, நாங்கள் மீண்டும் பணம் செலுத்தத் தொடங்குவதற்கு முன், UPI கணக்கு இணைக்கும் செயல்முறையின் ஒரு பகுதியாக இருக்கும் அங்கீகாரத்திற்காக எங்களின் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணை உள்ளிடவேண்டும். ஆஃப்ஸின் இன்டெர்பெஸை பொருத்தவரை அதிகம் மாறிவிட்டதாகத் தெரியவில்லை, இருப்பினும், தகுதிவாய்ந்த பேமண்ட்கள் முடிந்தபின் நீங்கள் பெறும் கீறல் அட்டைகளில் “நல்ல அதிர்ஷ்டம் அடுத்த முறை”(better luck next time) என்பது நீக்கப்பட்டன என்பதை நம்புவதாக பலரும் கூறியுள்ளனர்.
கூகுள் பே ஃபார் இந்தியா(Tez) கடந்த சில நாட்களாக பிளே/ஆப் ஸ்டோரில் இல்லாமல் இருந்தது, அதற்கு முன்னர் பணம் செலுத்தும் தோல்விகளை எதிர்கொள்வது, பல்வேறு காரணிகளால் டிஜிட்டல் பேமண்ட்கள் விரிவான இழுவைக் காணும் நேரத்தில் உதவியிருக்காது. அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் மற்றும் பிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல் உள்ளிட்ட ஆன்லைன் விற்பனைகளும், பெரும்பாலான பயனர்கள் முடிந்தவரை வீட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர்க்கும் நேரத்தில் டிஜிட்டல் பேமண்ட்களை நம்புவது மக்களிடையே அதிகரித்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்ட நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷனின் தரவுகளின்படி, கடந்த செப்டம்பர் மாதத்தில் UPI பரிவர்த்தனைகள் ரூ.180 கோடி எனவும், இது ரூ. 3.29 லட்சம் கோடியுடன் நிறைவடைந்தன என்றது. இது ஆகஸ்டில் 161 கோடி பரிவர்த்தனைகளிலிருந்து அதிகரித்துள்ளது என்றும் UPI பரிவர்த்தனைகளில் தொடர்ச்சியான அதிகரிப்பு என்னவென்றால், கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக அதிக மக்கள் ஆன்லைன் மூலம் பணம் செலுத்துகின்றன.
கூகுள் பே UPI பேமென்ட்களை பெரிதும் நம்பியுள்ளது, குறிப்பாக iPhone பயனர்களுக்கு, ஆண்ட்ராய்டுக்கான கூகுள் பே பயன்பாடு சில கிரெடிட் கார்டுகளையும் ஆதரிக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Google pay, I Phone