பாலியல் புகாரில் சிக்கிய ஊழியருக்கு ரூ.313 கோடி இழப்பீடு வழங்கிய கூகுள்!

கூகுள் நிறுவனத்திலிருந்து வெளியேறிய அமித் சிங்கால் உபர் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார்.

news18
Updated: March 13, 2019, 5:29 PM IST
பாலியல் புகாரில் சிக்கிய ஊழியருக்கு ரூ.313 கோடி இழப்பீடு வழங்கிய கூகுள்!
அமித் சிங்கால்
news18
Updated: March 13, 2019, 5:29 PM IST
பாலியல் புகாரில் சிக்கிய ஊழியருக்கு 3.15 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கியதாகக் கூகுள் நிறுவனம் பங்குச்சந்தையில் தெரிவித்துள்ளது.

கூகுள் சர்ச் பிரிவின் துணை தலைவராகப் பணிபுரிந்துவந்த அமித் சிங்கால் 2015-ம் ஆண்டுப் பெண் ஊழியர் ஒருவருக்குப் பாலியல் புகார் அளித்ததன் பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

விசாரணையில் இவர் தவறு செய்திருப்பது தெரியவர 2016-ம் ஆண்டுக் கூகுள் நிறுவன பணியிலிருந்து விலகினார். ஆனால், இவர் நிறுவனத்தை விட்டு வெளியேறக் கூகுள் நிறுவனம் எவ்வளவு இழப்பீடு வழங்கியது என்ற விவரங்களை ரகசியமாகவே வைத்திருந்தது.


எனவே கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் மீது அதன் பங்குதாரர் ஒருவர் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில் உயர் பதவியிலிருந்த ஊழியர் ஒருவர் பிற ஊழியர்களிடம் தகாத முறையில் நடந்துகொண்ட போதும் அவரைப் பணி நீக்கம் செய்யாமல் கோடி கணக்கில் பணம் வழங்கியுள்ளது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

வழக்கு தொடரப்பட்டதை அடுத்து ஆல்பாபெட் நிறுவனம் அமித் சிங்காலுக்கு 3 ஆண்டுகளுக்குச் சேர்த்து 4.5 கோடி டாலரை இழப்பீடாக வழங்கியதாகக் கூறியுள்ளது.

கூகுள் நிறுவனத்திலிருந்து வெளியேறிய அமித் சிங்கால் உபர் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். ஆனால், பாலியல் புகார் காரணமாகத் தான் கூகுளிலிருந்து வெளியேறினார் என்ற செய்திகள் வெளியாக அங்கு இருந்தும் ராஜினாமா செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Loading...

மேலும் பார்க்க:
First published: March 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...