• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • Passes API: ஆண்ட்ராய்டு போன்களில் கோவிட் -19 தடுப்பூசி அட்டைகளை சேமிக்க அனுமதிக்கும் கூகுள் பாசஸ் ஏபிஐ!

Passes API: ஆண்ட்ராய்டு போன்களில் கோவிட் -19 தடுப்பூசி அட்டைகளை சேமிக்க அனுமதிக்கும் கூகுள் பாசஸ் ஏபிஐ!

மாதிரி படம்

மாதிரி படம்

இந்த டிஜிட்டல் கார்டு சேமிக்கும் அம்சம் தற்போது அமெரிக்காவில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

  • Share this:
ஆண்ட்ராய்டு யூசர்கள் தங்களது COVID தடுப்பூசி சான்றிதழ்கள் மற்றும் சோதனை அட்டைகளை ஸ்மார்ட்போனில் எளிய மற்றும் பாதுகாப்பான வழியில் சேமித்து வைப்பதற்கும் அதனை அணுகுவதற்கும் நிறுவனம் தனது பாசஸ் ஏபிஐ-யை அப்டேட் செய்துள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக கூகுள் வெளியிட்ட ஒரு பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சுகாதார நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் பிற பொது சுகாதாரத் துறைகளைச் சேர்ந்த டெவலப்பர்கள் இந்த ஏபிஐகளுக்கான அணுகலைப் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் ஆப்களில் கோவிட் தடுப்பூசி சான்றிதழின் டிஜிட்டல் பதிப்பை உருவாக்க முடியும். இதனை நிறுவனம் ‘கோவிட் கார்டு’ என்று அழைக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த டிஜிட்டல் கார்டு சேமிக்கும் அம்சம் தற்போது அமெரிக்காவில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. விரைவில் இந்த அம்சம் மற்ற பிற நாடுகளுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஸஸ் பொதுவாக கூகுள் பேவுடன் இணைந்து செயல்படுகின்றன. இது லாயல்டி ப்ரொக்ராம்ஸ், பரிசு அட்டைகள், சலுகைகள், டிக்கெட்டுகள் மற்றும் போர்டிங் பாஸ்களை நிர்வகிக்கவும் சேமிக்கவும் யூசர்களை அனுமதிக்கிறது. இது ஆப்பிள் ஐபோன்களில் உள்ள பணப்பைகளை போன்றது.

இது இணக்கமான ஆப்களை போல ஒரேமாதிரியான செயல்பாடுகளை வழங்குகிறது. மேலும் தடுப்பூசி டிஜிட்டல் சான்றிதழை சுகாதார வழங்குநரின் ஆப் அல்லது வலைத்தளத்திலிருந்து உங்களுக்கு அனுப்பப்பட்ட உரைகள் அல்லது மின்னஞ்சல்களுடன் சேமிக்க முடியும். இதனை வைத்துக்கொள்வதன் மூலம் விமான நிலையத்தில் அல்லது வேறு ஏதெனும் இடத்தில் சரிபார்க்க வேண்டிய தேவை இருந்தால் அனைத்து முக்கியமான தகவல்களையும் இது உங்களுக்கு வழங்கும்.

தொலைபேசியின் முகப்புத் திரையில் இருந்து ஷார்ட்கட் வழியாக இந்த சான்றிதழ்களை அணுக முடியும் என்று கூகுள் நிறுவனம் கூறியுள்ளது. இணைய வசதி மிகவும் மோசமாக இருந்தாலும் சரி அல்லது இணைய இணைப்பு இல்லாவிட்டாலும் சரி உங்களால் அதனை அணுக முடியும். இந்த COVID அட்டை அம்சத்தைப் பயன்படுத்த உங்கள் ஸ்மார்ட்போன் Google Play-க்கு தனி அணுகல் இல்லாமல் Android 5 அல்லது அதற்குப் மேற்பட்ட OS- ஆக இருக்க வேண்டும்.

Also read... உஷார்! ஃபேஸ்புக் பாஸ்வேர்ட்களை திருடும் ஆப்ஸ்கள்... ஆண்டிராய்டு அதிரடி

மேலும் ஆண்ட்ராய்டு தொலைபேசியை தீம்பொருளுக்கு எதிராக பாதுகாப்பாக வைத்திருக்க தடுப்பூசிகளுக்கான பஸாஸ், ப்ளே ப்ரொடெக்ட் சான்றிதழாக இருக்கும் என்று மென்பொருள் நிறுவனம் தெரிவித்துள்ளது. கோவிட் அட்டை அதன் மையத்தில் தனியுரிமை மற்றும் பாதுகாப்போடு வடிவமைக்கப்பட்டுள்ளது எனவும் பதிவு வெளியாகியுள்ளது. ஒரு யூசர் பல சாதனங்களில் இந்த தகவலை அணுக விரும்பினால், ஒவ்வொரு சாதனத்திலும் அட்டையை மனுவலாக சேமிக்க வேண்டும்.

யூசரின் COVID தடுப்பூசி அல்லது சோதனைத் தகவலின் நகலைத் எதிலும் நிரந்தரமாக தக்கவைக்காது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. யுஸரின் COVID கார்டில் உள்ள தகவல்கள் நிறுவனம் அதன் பல்வேறு சேவைகளுடனோ அல்லது 'இலக்கு விளம்பரங்களுக்காக' மூன்றாம் தரப்பினருடனோ பகிருவதில்லை என்றும் நிறுவனம் உறுதி அளித்துள்ளது. எனவே Android பயனர்கள் COVID கார்டை லாக் ஸ்க்ரீன் மூலம் அணுகலாம். அதாவது சான்றிதழை அணுக பின் அல்லது பயோமெட்ரிக் அங்கீகாரம் தேவைப்படும்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: