கூகுள் கிளவுட் ஸ்டோரேஜ் சேமிப்பு கட்டணங்கள் குறைப்பு..

கூகுள் கிளவுட் ஸ்டோரேஜ் சேமிப்பு கட்டணங்கள் குறைப்பு..

கூகுள் ஓன்

கூகுள் நிறுவனம், கிளவுட் ஸ்டோரேஜில் புகைப்படங்களை சேமிப்பதற்கான கட்டணம் 50% குறைப்பும், தள்ளுபடிகளையும் அறிவித்துள்ளது.

 • Share this:
  கூகுள் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில், கூகுள் கிளவுட் ஸ்டோரேஜில் ( cloud storage) அன்லிமிட்டேடாக புகைப்படங்களை சேமித்து வைப்பதற்கான சலுகை இந்த ஆண்டுடன் நிறுத்தப்படும் என அறிவித்தது. அதன்படி, கூகுள் பயனாளர்கள், புதிய கூகுள் ஒன் (google one ) திட்டங்களை சப்ஸ்கிரைப் (subscribe) செய்து கூடுதலான கிளவுட் ஸ்டோரேஜ் சலுகைகளை பெற்றுக்கொள்ளுங்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. புதிய சலுகையின்படி, 2021 ஜூன் மாதத்துக்குப் பிறகு 15 GB அளவுக்கு இலவசமாக புகைப்படங்களை சேமித்து வைத்துக்கொள்ளலாம். 

  புகைப்படங்கள், இமெயில், கூகுள் டிரைவ் உள்ளிட்டவைகளுக்கும் இவை பொருந்தும். அதுமட்டுமல்லாமல் அதிக விலையுடைய திட்டங்களுக்கான விலையை பாதியாக குறைத்துள்ளது. 10TB, 20TB, 30TB திட்டங்களின் விலையில் 50 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது.

  இந்த விலை குறைப்பு அமெரிக்காவுக்கு மட்டும் பொருந்தும். தற்போது, 10TB கூகுள் ஒன் சேமிப்பக திட்டம் ரூ .7,300- க்கு இந்தியாவில் வழங்கப்படுகிறது. புதிய சலுகையின்படி  ரூ.3,700 - க்கு வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும். 20TB கூகுள் திட்டம் ரூ.7,300க்கு கிடைக்கிறது, 30TB திட்டம் மாதத்திற்கு, 22 ஆயிரம் ரூபாயில் இருந்து அதிரடியாக குறைக்கப்பட்டு ரூ.14,700-க்கு வழங்கப்படுகிறது. 

  மேலும், 100GB, 200GB மற்றும் 2TB திட்டங்களின் கிளவுட் ஸ்டோரேஜ் ஏற்கனவே கூடுதல் சலுகை விலையில் கிடைப்பதால், அந்த திட்டங்களின் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. இதனால், அந்த திட்டங்கள் ஏற்கனவே இருந்த விலையிலேயே கிடைக்கும். கூடுதலாக சேமிப்பு தேவைப்படுவோருக்கு கட்டணத்துடன் கூடுதல் சலுகைகளும் அளிக்கப்பட்டுள்ளன.

  உதாரணமாக, 2TB மற்றும் அதற்கும் கூடுதலான சேமிப்பு தேவைப்படுவோருக்கு இலவசமாக VPN வழங்கப்படுகிறது. இந்த திட்டம் ஏற்கனவே அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் ஆன்டிராய்டு செல்போன்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. Google Store -ல் ஹார்ட்வேர் வாங்குபவர்களுக்கு 10 விழுக்காடு பணச்சலுகை மற்றும் தங்கும் விடுதிகளில் தங்குவதற்கான சலுகையும் வழங்கப்படுகிறது.

  இந்தியாவைப் பொறுத்தவரை கூகுள் ஒன் சந்தாதார்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் விலையிலேயே கூகுள் கிளவுட் ஸ்டோரேஜ் வழங்கப்படுகின்றன. புதிய சலுகைகள் ஏதும் அறிவிக்கபடவில்லை. ஏற்கனவே அறிவித்துள்ளபடி,  அனைத்து சேவைகளுக்குமான இலவச சேமிப்பு 15 ஜிபி என்பது தொடரும். இந்தியாவில் இருக்கும் 100GB Google One membership திட்டத்துக்கான மாத சந்தா ரூ.130 ஆகும். ஆண்டுக்கு ரூ.1,300 வசூலிக்கப்படுகிறது. 

  Gold Rate | ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 56 ரூபாய் அதிகரிப்பு..

  200 ஜிபி சேமிப்பு திட்டத்துக்கான மாத சந்தா ரூ.210, ஆண்டுக்கு ரூ.2,100 வசூலிக்கப்படுகிறது. 2TB ஸ்டோரேஜ் திட்டத்துக்கு மாதம் ரூ.650, ஆண்டுக்கு ரூ. 6,500 சந்தா கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதேபோல், 10TB, 20TB, மற்றும் 30TB திட்டங்களுக்கு முறையே ஏற்கனவே உள்ளபடி ரூ.3,250, ரூ. 6,500 மற்றும் ரூ. 9,750 சந்தா கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அமெரிக்காவைப் போல் இந்தியாவிலும் higher plan திட்டங்களுக்கான சந்தா தொகை 50 விழுக்காடு அளவு குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இந்த அறிவிப்பு வெளியாகலாம்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: