• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • கூகுள் புகைப்படம் இலவச ஸ்டோரேஜ்க்கு என்டுகார்டு - மாத சந்தா விலை என்ன?

கூகுள் புகைப்படம் இலவச ஸ்டோரேஜ்க்கு என்டுகார்டு - மாத சந்தா விலை என்ன?

மாத சந்தா விலை

மாத சந்தா விலை

அனைத்து பயனாளர்களுக்கும் வழங்கி வரும் 15 ஜிபி இலவச ஸ்டோரேஜில் எந்த மாற்றமும் செய்யப்படாது என கூகுள் தெரிவித்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஜூன் 1-ம் தேதி முதல் கூகுள் ஸ்டோரேஜில் புகைப்படங்களை இலவசமாக சேமிப்பதற்கு என்டுகார்டு போட்டுள்ள அந்நிறுவனம், கூகுள் ஒன் என்ற மாத சந்தாவை அறிமுகப்படுத்தியுள்ளது.

இணையம் இருக்கும்பட்சத்தில் செல்லும் இடங்களில் எடுக்கும் புகைப்படங்களை கூகுள் ஸ்டோரேஜில் சேமித்து வைத்துக்கொள்ளலாம். இந்த வசதியை கூகுள் பயனாளர்களுக்கு இலவசமாக வழங்கி வந்த அந்த நிறுவனம், உயர்தரமான புகைப்படங்களுக்கு திடீரென இலவச ஸ்டோரேஜ் சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு ஜூன் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. அனைத்து பயனாளர்களுக்கும் வழங்கி வரும் 15 ஜிபி இலவச ஸ்டோரேஜில் எந்த மாற்றமும் செய்யப்படாது என தெரிவித்துள்ள கூகுள், ஏற்கனவே சேமித்து வைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 15 ஜிபிக்கு அதிகமாக இருந்தால் கூகுள் ஒன் சந்தாவில் கண்டிப்பாக இணைந்தாக வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

ஜூன் 1ம் தேதிக்குப் பிறகு 15 ஜிபிக்குள் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மட்டுமே கூகுள் ஸ்டோரேஜில் இருக்கும். மாத சந்தாவில் இணையவில்லை என்றால், அந்த தகவல்கள் அழிந்துவிடும். கூகுள் ஒன்னின் (Google One) அடிப்படை சந்தா 100 ஜிபி திட்டத்துடன் துவங்குகிறது. இதற்கு மாதத்திற்கு ரூ.130, ஆண்டுக்கு ரூ.1,300 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினர்களுடன் ஸ்டோரேஜை பகிர்ந்து கொள்ளலாம். 200 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் திட்டமும் உள்ளது. இந்த திட்டத்தில் மாதம் ரூ.210, ஆண்டுக்கு ரூ.2,100 கட்டணமாக செலுத்த வேண்டும். 2டிபிக்கு (2 TB) மாதத்திற்கு ரூ.650, ஆண்டுக்கு ரூ.6,500 செலுத்த வேண்டும். 10டிபிக்கு ஸ்டோரேஜ் திட்டத்தில் மாதம் ரூ.3,250 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Also read... Twitter: ‘அவர்கள் இந்திய சட்டத்தை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்’ - ட்விட்டர் நிறுவனத்தை சாடிய ரவிசங்கர் பிரசாத்!

iOS செயலி வெர்சன்களிலும் கூகுள் ஒன் ஸ்டோரேஜ் கட்டணம் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றாலும், விலையில் மாற்றம் உள்ளது. iOS வெர்சன் செயலிகளுக்கு கூடுதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டுளது. அந்த வெர்சன் செயலிகளின் அடிப்படை கூகுள் ஒன் சந்தா விலையானது மாதத்துக்கு ரூ.149, ஆண்டுக்கு 1,499 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டு 200ஜிபி மற்றும் 1 TB திட்டமும் முறையே மாதத்துக்கு ரூ.219, ரூ.719 என்ற விலையிலும், ஆண்டுக்கு ரூ.2,199, ரூ.7,500 விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

உலகளவிலான பிக்சல் (Pixel) பயனர்களுக்கு இது பொருந்தாது என, கூகுள் கூறியுள்ளது. பிக்சல் வெர்சன் சாதனங்களை வைத்திருப்பவர்கள் இலவசமாக உயர்தர புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அன்லிமிட்டெடாக சேமிக்கலாம் என தெரிவித்துள்ளது. கூகுள் போட்டோஸ் ஸ்டோரேஜ் சந்தா உங்களுக்கு ஒத்துவரவில்லை என்றால், அதற்கு மாற்றாக டிஜி பாக்ஸ், டிகோ மற்றும் மைக்ரோசாப்ட் ஒன்டிரைவ் ஆகியவை உள்ளன. கூகுள் போட்டோஸ் ஸ்டோரேஜ் சந்தாவை விட குறைவான விலையில் இந்த திட்டங்கள் கிடைக்கின்றன. சலுகைகள் மற்றும் பல்வேறு சிறப்பு அம்சங்களை பகுத்தாய்ந்து உங்களுக்கு வசதியாக இருப்பதை தேர்தெடுத்துக் கொள்ளலாம்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: