• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • Google Messages: கூகுள் மெசேஜில் OTP Auto-Delete அம்சம் விரைவில் அறிமுகம்!

Google Messages: கூகுள் மெசேஜில் OTP Auto-Delete அம்சம் விரைவில் அறிமுகம்!

கூகுள் மெசேஜ்

கூகுள் மெசேஜ்

இந்தியாவில் உள்ள யூசர்களுக்கு தற்போது வெளியாகவுள்ள இரண்டு புதிய அப்டேட்டுகள் விரைவில் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

  • Share this:
கூகுள் மெசேஜ் ஆப்-பை பெரும்பாலான ஆண்ட்ராய்டு யூசர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதில் மெசேஜ் அனுப்பவும், பெறவும் முடியும். மெசேஜ் அனுப்புவது நம்பகமானதாக இருப்பதால் மொபைல்/டெஸ்க்டாப்பிலிருந்து மெசேஜ் அனுப்ப இந்த ஆப்பை பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் உங்களுக்குப் பிடித்த படங்கள், GIFகள், ஈமோஜி, ஸ்டிக்கர்கள், வீடியோக்கள், ஆடியோ மெசேஜ்கள் ஆகியவற்றைப் பகிரலாம். டார்க் மோடிலும் நீங்கள் மெசேஜ்-ஐ படிக்கலாம். இந்த ஆப்-பில் உங்கள் இருப்பிடத்தை அனுப்பலாம். தேடல் ஐகானின் மீது தட்டி, குறிப்பிட்ட தொடர்பை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். மேலும் RCS அம்சம் மூலம் உங்கள் நண்பர்கள் எப்போது மெசேஜை தட்டச்சு செய்கிறார்கள், எப்போது உங்கள் மெசேஜைப் படித்தார்கள் என்பதை கூட பார்த்து கொள்ளலாம்.

இந்த நிலையில் தற்போது புதிய அப்டேட்டை பெறுகிறது. இந்தியாவில் உள்ள யூசர்களுக்கு தற்போது வெளியாகவுள்ள இரண்டு புதிய அப்டேட்டுகள் விரைவில் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் தனிப்பட்ட செய்திகள் மற்றும் விளம்பர செய்திகளை யூசர்கள் பிரித்து பார்க்க முடியும். இதன் மூலம் DOTP போன்ற பல வகையான செய்திகளை வரிசைப்படுத்தி அவற்றில் "மிகவும் முக்கியமானதை எளிதாக கண்டறிய வகை செய்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த அம்சம் சாப்ட்வேர் மூலம் இயங்குவதாகவும் கூகுள் நிறுவனம் தரப்பில் இருந்து யாரும் யூசர்களின் செய்திகளை படிக்க முடியாது என்றும் தகவல் அளித்துள்ளனர். மேலும் “செய்திகள் அனைத்தும் உங்கள் சாதனத்தில் பாதுகாப்பாக நடக்கும், எனவே உங்கள் உரையாடல்கள் பயன்பாட்டில் இருக்கும், மேலும் உங்கள் வரிசைப்படுத்தப்பட்ட செய்திகளை ஆஃப்லைனில் அணுகலாம்” என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரு முறை கடவுச்சொற்களை (OTPகள்) கொண்ட செய்திகளை தானாக நீக்குவதற்கான விருப்பத்தையும் கூகுள் சேர்க்கிறது. இந்த OTP-கள் உங்கள் மெசேஜ் ஆப்பில் அதிகம் சேராமல் இருக்க இந்த அம்சம் உதவும். இந்த செய்திகள் 24 மணி நேரத்திற்குப் பிறகு அகற்றப்படும், இதனால் பயனர்கள் அவற்றை நீக்குவதற்கு நேரத்தை செலவிட மாட்டார்கள்.

Also read... Vodafone Idea: வோடாஃபோன் ஐடியாவின் ரூ.99, ரூ.109 பிளான் அறிமுகம் - ஜியோ ஏர்டெல் பிளான்கள் என்ன?

இதுகுறித்து விளக்கிய கூகுள் நிறுவனம், இந்த புதிய அப்டேட்டுகள் உங்கள் செய்திகளை எளிதாக நிர்வகிக்க உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். அண்ட்ராய்டு 8 ஓஎஸ் முதல் தற்போதைய புதிய ஓசி பயன்படுத்தும் யூசர்களுக்கும் இந்த புதிய அப்டேட் கிடைக்கும். இந்தியாவில் உள்ள ஆண்ட்ராய்டு தொலைபேசிகளுக்கு இந்த அப்டேட்டை வரும் வாரத்தில் வெளியிட உள்ளோம் என தகவல் அளித்துள்ளனர். இந்த புதிய அப்டேட்டை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் அல்ல, விரும்பும் இருப்பவர்கள் பயன்படுத்லாம் இல்லையென்றால் செட்டிங் சென்று மாற்றி கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: