கூகுள் மீட் கொண்டு வரவுள்ள 2 புதிய அப்டேட்-என்னென்ன தெரியுமா?

கூகுள் மீட்

கூகுள் மீட்டில் 25 பேர் வரை கோ-ஹோஸ்டுகளாக சேர்த்துக் கொள்ளும் புதிய வசதியை கூகுள் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்துகிறது.

  • Share this:
கொரோனா வைரஸ் காரணமாக வீட்டில் இருந்து வேலை செய்வோர் இணைய வழி மீட்டிங்கிலேயே அதிகம் பங்கேற்க வேண்டியுள்ளது. பணிக்கான நேர்முகத்தேர்வு உள்ளிட்டவையும் இணைவழி வீடியோ கால் மூலம் மேற்கொள்ளப்படுவதால் Zoom மற்றும் Google Meet செயலிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. யூசர்களின் தேவையை அறிந்து அதற்கேற்ப தங்கள் செயலிகளில் கூகுள் உள்ளிட்ட வீடியோ செயலி நிறுவனங்கள் மேம்படுத்தி வருகின்றன. தற்போது Google Meet செயலியில் 2 விதமான புதிய அப்டேட்கள் கொண்டுவரப்பட உள்ளன.

இலவச மற்றும் வொர்க் ஸ்பேஸில் பயன்படுத்துப்பவர்களுக்கு ஏற்ப கூகுள் மீட் செயலியின் புதிய அப்டேட்கள் இடம்பெற உள்ளது. புதிதாக வரவுள்ள அப்டேடில் ஹோஸ்டுடன் சேர்ந்து 25 பேர் வரை கோ-ஹோஸ்டாக இணைந்து கொள்ளும் அம்சத்தை கூகுள் அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் மீட்டிங் ஏற்பாடு செய்யும் ஹோஸ்டுக்கு இருக்கும் அனைத்து அணுகல் வசதிகளும் கோ-ஹோஸ்டுகளுக்கும் கிடைக்கும். இந்த புதிய அப்டேட்டானது கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடனும், விரைவாக அணுகும் முறையையும் கொண்டிருக்கும் என கூகுள் தெரிவித்துள்ளது.கோ-ஹோஸ்டாக இணைக்கப்படும் அனைவரும் செட்டிங்ஸ்களை பயன்படுத்தலாம். ஸ்கிரீன் ஷேர், மெசேஜ் அனுப்புதல், பங்கேற்பாளர்களை முடக்குதல், மீட்டிங்கை நிறைவு செய்தல், யார் மீட்டிங்கில் பங்கேற்க அனுமதிக்கலாம் ஆகிய அம்சங்கள் ஹோஸ்டைப் போலவே கோ-ஹோஸ்டாக இணைபவர்களும் முடிவு செய்யலாம். இவை அனைத்தும் புதுப்பிக்கப்பட்ட குயிக் அக்சஸ் (Quick Access) -ல் இந்த வசதிகள் இடம்பெற்றிருக்கும்.

குயிக் அக்சஸ் ஆன் செய்யப்பட்டிருந்தால் மொபைல் மற்றும் டெஸ்க்டாப்பில் இருந்து கூகுள் மீட்டில் தானாகவே சேரும் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. குயிக் அக்சஸ் கொடுக்கப்படவில்லை என்றால், பங்கேற்பாளர்கள் மீட்டிங்களில் இணையும் வரை ஹோஸ்ட் காத்திருக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே மீட்டிங்கில் இணையும் வசதியும், புதிய நபர்கள் இணையமுடியாத வகையில் பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.கூகுள் மீட்டில் வரவுள்ள இந்த அப்டேட் அம்சங்கள் ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளன. அதிலும், ஆன்டிராய்டு யூசர்கள் மட்டுமே அந்த வசதிகளை அப்போது பெற முடியும். ஐ.ஓ.எஸ் யூசர்களாக இருந்தால் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும் என கூகுள் தெரிவித்துள்ளது. கூகுள் கொண்டுவந்துள்ள அப்டேட்டில் ஒரு முக்கியமான விஷயம் உள்ளது. இந்த அப்டேட்டுகளை அனைத்து யூசர்களும் பயன்படுத்த முடியாது. இலவச மற்றும் வொர்க்ஸ்பேஸ் யூசர்கள் ஆகிய தளங்களுக்கு ஏற்ப மட்டுமே புதிய அப்டேட்டுகளை பெற முடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: