ஜூம்-ஐ தொடர்ந்து "Meet PWA" என்ற வெப் ஆப்பை அறிமுகப்படுத்தியது கூகுள் மீட்!

Meet PWA

கூகுள் மீட்டின் PWA செயலியானது வெப் பிரவுசரில் இருக்கும் கூகுள் மீட் போல அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது.

  • Share this:
கூகுள் மீட் (Google Meet) ஒரு முழுமையான வெப் ஆப்பை உருவாகியுள்ளதாக தனது வலைப்பதிவு மூலம் அறிவித்துள்ளது. மேலும் இந்த ஆப் Progressive Web Application (PWA) என்றும் அழைக்கப்படுகிறது. PWA என்பது ஒரு வழக்கமான ஸ்மார்ட்போன் அல்லது டெஸ்க்டாப் செயலி ஆகும். இது ஆஃப்லைன் அல்லது மோசமான நெட்வொர்க் நிலைமைகளின் கீழ் வேலை செய்யும் நன்மைகளைக் கொண்டு வருவதற்காக வெப் பிரவுசர் மூலம் வழங்கப்படும் ஒரு வகை மென்பொருள் என்றும் கூறப்பட்டுள்ளது.

கூகுள் மீட்டின் PWA செயலியானது வெப் பிரவுசரில் இருக்கும் கூகுள் மீட் போல அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. ஆனால் ஒரு தனித்துவமான செயலியாக இப்போது இருக்கும் என்று மென்பொருள் நிறுவனம் விளக்கியுள்ளது. இது பயன்படுத்த மிகவும் எளிதானது. மேலும் இது டாப்களுக்கு இடையில் மாற வேண்டிய அவசியத்தை நீக்கி உங்கள் வேலைகளை ஒழுங்குபடுத்துகிறது. ஜூம் அதன் சொந்த வெப் ஆப்பை அறிமுகப்படுத்திய சில நாட்களிலேயே கூகுள் நிறுவனமும் தனி வெப் ஆப் அப்டேட்டை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கூகுள் குரோம் பிரவுசர் வெர்சன் 73 மற்றும் அதற்கு மேற்பட்ட குரோம் வெர்ஷன் கொண்ட எந்த சாதனத்திலும் மீட் PWA செயலி இயங்கும். பிரவுசர் வெர்சன் 73 கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. மேலும், விண்டோஸ், மேகோஸ், குரோம் ஓஎஸ் மற்றும் லினக்ஸ் சாதனங்களில் PWA மீட் வேலை செய்கிறது. இது தொடர்பாக நிறுவனம் வெளியிட்ட ஒரு வலைப்பதிவில், கூகுளின் கட்டணத் திட்டத்தின் ஒரு பகுதி யூசர்களும் இந்த Meet வெப் செயலியை பயன்படுத்தலாம் என்று விளக்கம் கொடுத்துள்ளது.

Google Workspace கட்டணத் திட்டங்களைக் கொண்ட நிறுவனங்களின் நிர்வாகிகள் யூசர்களுக்கான முற்போக்கான வலை பயன்பாட்டை (Progressive Web Application) ஆட்டோமெட்டிக்காக இன்ஸ்டால் செய்துகொள்ளவும் அல்லது PWA அணுகலை நிர்வகிக்கவும் உதவி மையத்தைப் பயன்படுத்தலாம் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த PWA Meet வெப் ஆப்பை டவுன்லோட் செய்ய, குரோம் பிரவுசரை ஓபன் செய்து, அதில் URL பாரின் வலதுபுறத்தில் இன்ஸ்டால் பட்டன் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

அவ்வாறு இருந்தால் இன்ஸ்டால் என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். இப்போது மீட் செயலி புதிய டாபில் ஓபன் ஆகும். ஒருவேளை செயலியை அன்இன்ஸ்டால் செய்து வெப் பிரவுசரில் கூகுள் மீட் அனுபவத்தை பெற விரும்புகிறவர்கள், குரோம் பிரவுசரில் கூகுள் வலைத்தளத்தைத் ஓபன் செய்ய வேண்டும். PWA ஆப்பை ஓபன் செய்து, அதன் மேல் வலதுபுறத்தில் உள்ள 'more' என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் அதில் அனின்ஸ்ட்டால் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இப்போது யூசர்கள் பழைய முறையில் கூகுள் மீட்-ஐ பயன்படுத்த முடியும்.

Also read... தானாகவே மறையும் புகைப்படங்கள் – வாட்ஸ்அப் புதிய அப்டேட்!

மேலும் நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, ஆகஸ்ட் 2ம் தேதி முதல் சில யூசர்கள் மட்டும் சுமார் 15 நாட்களுக்கு Google Meet PWA-வை அணுகலாம் என்று கூகுள் குறிப்பிட்டுள்ளது. Meet PWA அனைத்து Google Workspace வாடிக்கையாளர்களுக்கும், G Suite Basic மற்றும் Business வாடிக்கையாளர்களுக்கும், தனிப்பட்ட Google கணக்குகள் உள்ள பயனர்களுக்கும் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, ஜிமெயில், டாக்ஸ், டிரைவ், யூடியூப், மற்றும் ஷீட்களுக்கான PWA-களையும் நிறுவனம் வழங்குகிறது.
Published by:Vinothini Aandisamy
First published: