• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • Google: முக்கியமான பாதுகாப்பு அம்சத்தை விரைவில் வெளியிடவுள்ள கூகுள்!

Google: முக்கியமான பாதுகாப்பு அம்சத்தை விரைவில் வெளியிடவுள்ள கூகுள்!

கூகுள்

கூகுள்

பிசி வேர்ல்ட் பத்திரிகையுடன் பேசிய கூகுளின் அடையாளம் மற்றும் யூசர் பாதுகாப்பிற்கான தயாரிப்பு நிர்வாக இயக்குனர் மார்க் ரிஷர்

  • Share this:
தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் விரைவில் தனது யூசர்களுக்கு தானாக செயல்படும் இரண்டு காரணி அங்கீகாரத்தை (two-factor authentication) வழங்க திட்டமிட்டுள்ளது என்று பிசி வேர்ல்ட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது குறித்து பிசி வேர்ல்ட் பத்திரிகையுடன் பேசிய கூகுளின் அடையாளம் மற்றும் யூசர் பாதுகாப்பிற்கான தயாரிப்பு நிர்வாக இயக்குனர் மார்க் ரிஷர், யூசர்கள் தங்கள் கணக்குகளை சரியான முறையில் கட்டமைத்திருந்தால், 2SV-இல் அதாவது இரண்டு காரணி அங்கீகாரத்தை தானாக பதிவுசெய்ய நிறுவனம் ஆரம்பிக்கும்.

எவ்வாறாயினும், இந்த பாதுகாப்பு அம்சத்தை முடக்கும் விருப்பத்தையும் யூசர்களுக்கு மென்பொருள் நிறுவனம் வழங்கும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரிஷர் வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து கூகுள் கூறியதாவது, "இந்த கூடுதல் காரணிகள் வலுவான பாதுகாப்பைக் குறிக்கின்றன. ஆனால் யூசர்கள் தங்கள் கணக்குகளை தற்செயலாக லாக் செய்யாமல் இருப்பதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும். இது குறைவான இடையூறு விளைவிக்கும் திட்டமாகவும் இருக்கும். அதனால்தான் பயனர்களுக்காக நாங்கள் இதனை தொடங்க இருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் ரிஷர் இது குறித்து பேசுகையில், "பாஸ்வேர்ட்ஸ் உங்கள் ஆன்லைன் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கலாம். மேலும் அவை திருடப்படலாம். இதுதவிர உங்கள் பழைய பாஸ்வேர்டுகளை உங்கள் கணக்கில் பயன்படுத்த வேண்டிய அவசியம் வந்தால் நீங்கள் அதை நினைவில் கொள்வது கடினம் என்பதையும் ரிஷர் கூறியுள்ளார். மேலும் பாஸ்வேர்ட்ஸ் தவறான கைகளில் கிடைத்தால் பல கணக்குகளை நீங்கள் இழக்க வேண்டிய அபாயத்தை இது அதிகரிக்கிறது.

எனவே இப்போதே, இரண்டு காரணி அங்கீகாரத்துடன் உங்கள் கணக்கைப் பாதுகாக்க Google உங்களுக்கு ஒரு விருப்பத்தை வழங்குகிறது. இது வேறு சாதனங்களில் உங்கள் கணக்கின் உள்நுழைவை உறுதிப்படுத்த உங்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தியை அனுப்புகிறது. ஆனால் அது இன்னும் விரும்பத்தக்கதாக இருக்கிறது. 2-காரணி அங்கீகாரம் என்பது உங்கள் கணக்கில் கூடுதல் பாதுகாப்பைச் சேர்க்கும். உங்கள் கணக்கில் வேறு யாராவது உள்நுழைய முயற்சிக்கும்போதெல்லாம், உங்கள் தொலைபேசியில் அனுப்பப்பட்ட பாதுகாப்புக் குறியீடு அவர்களுக்குத் தேவைப்படும். இந்த குறியீடு இல்லாமல் எந்த ஒரு 3ம் நபராலும் உங்கள் கணக்கை அணுக முடியாது என்பது தான் இதன் சிறப்பம்சம்.

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மக்களை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் பல ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய வழிவகுத்தது. இந்த லிஸ்டில் கூகுள் நிறுவனமும் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் வருகிற செப்டம்பர் மாதம் வரை ஒர்க் பிரேம் ஹோம் நடைமுறையே தொடரும் என நிறுவனம் அறிவித்துள்ளது. ஊழியர்களின் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும், மற்றொரு புறம், பெரிய நிறுவனங்களின் செலவு பாதியாக குறைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அதன்படி, கடந்த மார்ச் மாதத்திலிருந்தே கூகுளின் பெரும்பாலான பணியாளர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ததன் மூலம் ஒரு வருடத்தில் ஒரு பில்லியன் அமெரிக்கன் டாலர்கள், இந்திய மதிப்பில் சுமார் 7,400 கோடி ரூபாயை நிறுவனம் மிச்சம் செய்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: