கூகுள் மேப்ஸ் புதிய அப்டேட் : பயனர்களுக்கு கூடுதல் விவரங்களை வழங்கும் கம்யூனிட்டி ஃபீட்!

கூகுள் மேப்ஸ் புதிய அப்டேட் : பயனர்களுக்கு கூடுதல் விவரங்களை  வழங்கும் கம்யூனிட்டி ஃபீட்!

கூகுள் அப்டேட்

கூகுள் மேப்சின் இந்த புதிய அப்டேட்டுக்கான சோதனையின் போது, கம்யூனிட்டி ஃபீட்ஸ் இல்லாமல் ஒப்பிடும்போது வணிகர்களிடமிருந்து வரும் பதிவுகள் இரு மடங்கு அதிகமாக காணப்படுவதை கூகுள் கவனித்ததாக கூறியுள்ளது. 

  • News18
  • Last Updated :
  • Share this:
கூகுள் மேப்ஸ் (google map) என்பது நம் அன்றாட வாழ்க்கையில் அத்தியாவசிய பயன்பாடாகவே மாறிவிட்டது. ஒருவர் ஏதேனும் உணவகங்கள், வணிகங்கள், அறியப்பட்ட இடங்கள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ளவற்றைக் கண்டுபிடித்து அந்தந்த இடங்களுக்குச் செல்ல விரும்பினால் கூகுள் மேப்ஸ் மிகவும் பயனுள்ள செயலியாக இருக்கிறது. கூகுள் இப்போது இந்த செயல்பாட்டை புதிய கம்யூனிட்டி ஃபீட்ஸுடன் (community feed) விரிவுபடுத்தியுள்ளது. 

இது அருகிலுள்ள இடங்களைப் பற்றிய கூடுதல் அப்டேட்டுகளை உங்களுக்கு வழங்குகிறது. கூகுள் மேப்ஸ் செயலியில் உள்ள "எக்ஸ்ப்ளோர்" திரையில் கம்யூனிட்டி ஃபீட்ஸ்  (community feed) காண்பிக்கப்படும். மேலும் பயனர்கள் அவர்கள் பின்பற்றும் பிரபலமான இடங்கள் பற்றிய அப்டேட்டுகளை காண்பிக்கும். உள்ளூர் நிபுணர்களால் கூகுள் மேப்ஸில் சேர்க்கப்பட்ட சமீபத்திய ரிவியூஸ், புகைப்படங்கள் மற்றும் பதிவுகளையும் இது காண்பிக்கும். மேலும் அதனை பின்தொடரும் நபர்களையும் இது காண்பிக்கும்.

இதுகுறித்து கூகுள் தனது அறிவிப்பில் வெளியிட்டுள்ளதாவது, கம்யூனிட்டி ஃபீட்ஸ்  (community feed) உங்களுக்கு பயனுள்ள உள்ளூர் தகவல்களை ஒன்றிணைத்து பயனர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்வங்களுக்கு ஏற்ப வடிவமைக்கிறது என்று கூறியுள்ளது. எடுத்துக்காட்டாக, ஒரு பயனர் தங்கள் கூகுள் மேப்ஸ் உணவு மற்றும் பான விருப்பங்களில் ஆரோக்கியமான உணவு அல்லது கிரேக்க உணவு வகைகளில் ஆர்வம் காட்டியிருந்தால், அவர்கள் அந்த வகையான உணவு வகைகளில் கூடுதல் பரிந்துரைகள், புகைப்படங்கள் மற்றும் வணிக பதிவுகளை காணலாம். 

கம்யூனிட்டி ஃபீட்ஸ் நம்பகமான உள்ளூர் மூலங்களிலிருந்து அப்டேட்டுகள் மற்றும் பரிந்துரைகளைக் காண்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கம்யூனிட்டி ஃபீட்ஸ்  (community feed) வணிகங்களுக்கும் உதவும் என்றும், அவற்றை மேப்ஸில் வாடிக்கையாளர்கள் கண்டுபிடிப்பதை எளிதாக்குவதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.

Also read... Gold Rate | கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை.. மாலை நிலவரம் என்ன?



கூகுள் மேப்சின் இந்த புதிய அப்டேட்டுக்கான சோதனையின் போது, கம்யூனிட்டி ஃபீட்ஸ் இல்லாமல் ஒப்பிடும்போது வணிகர்களிடமிருந்து வரும் பதிவுகள் இரு மடங்கு அதிகமாக காணப்படுவதை கூகுள் கவனித்ததாக கூறியுள்ளது. 

தங்களுக்கு பிடித்த இடங்களுக்கான பரிந்துரைகள், வணிக சேவைகளுக்கான அப்டேட்கள், ரிவியூஸ் மற்றும் மதிப்பீடுகள், புகைப்படங்கள், மற்றவர்களின் கேள்விகளுக்கான பதில்கள், புதுப்பிக்கப்பட்ட முகவரிகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய 20 மில்லியனுக்கும் அதிகமான பங்களிப்புகளை கம்யூனிட்டி ஃபீட்ஸ் பயன்படுத்தும். இதுகுறித்து தங்களது வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள நிறுவனம், "கூகுள் மேப்ஸின் ஆய்வு திரையில் புதிய கம்யூனிட்டி ஃபீட்ஸுடன் நம்பகமான உள்ளூர் மூலங்களிலிருந்து அப்டேட்டுகள் மற்றும் பரிந்துரைகளைக் கண்டுபிடிப்பதை நாங்கள் எளிதாக்குகிறோம்" என்று தெரிவித்துள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published: