15-வது ஆண்டுவிழாவை முன்னிட்டு கூகுள் மேப்ஸ்-க்குக் கிடைத்த புதிய லோகோ!

கூகுள் மேப்ஸ் செயலியில் 220 நாடுகளின் அப்டேட் ஆன வரைபடம் பயனாளர்களுக்கு ஏற்ற அத்தனை நேவிகேஷன் அம்சங்களையும் வழங்குகிறது.

15-வது ஆண்டுவிழாவை முன்னிட்டு கூகுள் மேப்ஸ்-க்குக் கிடைத்த புதிய லோகோ!
கூகுள் மேப்ஸ்
  • News18
  • Last Updated: February 8, 2020, 11:55 AM IST
  • Share this:
கூகுள் மேப்ஸ் அறிமுகமாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் அந்த செயலிக்கு புதிய லோகோ-வை கூகுள் நிறுவனம் வழங்கியுள்ளது.

தற்போதைய சூழலில் கூகுள் மேப்ஸ் செயலியை சர்வதேச அளவில் 1 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருவதாக கூகுள் நிறுவனம் தெரிவிக்கிறது. புதிய இடங்களுக்குச் செல்லவும் தெரியாத வழிகளில் பயணிக்கவும் உதவும் கூகுளின் இந்த மேப்ஸ் வசதி பயனாளர்கள் மத்தியில் சற்றும் குறையாத வரவேற்பைப் பெற்று வருகிறது.

புதிய அப்டேட் ஆக பொது போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தும் மக்களுக்கு ஏதுவாகவும் கூகுள் மேப்ஸ் உள்ளது. பொது இடங்களில் உள்ள கூட்ட நெரிசல், போக்குவரத்து சூழல், பயணிக்க வேண்டிய இடத்தில் நிலவும் வானிலை ஆகியவற்றை அறியவும் கூகுள் மேப்ஸ் உதவுகிறது.


கூகுள் மேப்ஸ் செயலியில் 220 நாடுகளின் அப்டேட் ஆன வரைபடம் பயனாளர்களுக்கு ஏற்ற அத்தனை நேவிகேஷன் அம்சங்களையும் வழங்க பெரும் உதவியாய் உள்ளது.

மேலும் பார்க்க: வாட்ஸ்அப் வெப் பக்கத்திலும் டார்க் மோட்... க்ரோம், ஃபயர்பாக்ஸ், ஓபெரா-வில் ஆக்டிவேட் செய்வது எப்படி?
First published: February 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading