கூகுள் மேப்ஸ் (Google Maps) மற்றும் கூகுள் சர்ச் (Google Search) செயலிகளில் ஒரு புதிய அப்டேட்டை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் பயனர்கள் தங்கள் வணிகங்களை செய்லபடுத்த தனிப்பட்ட செய்திகளின் அனுப்புவதன் மூலம் வாடிக்கையாளர்களுடன் சாட் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே வாடிக்கையாளர்கள் 'கேள்வி கேளுங்கள்' (Ask a Question) அம்சத்தைப் பயன்படுத்தி வணிகங்களுக்கான பொது வினவலை அனுப்பலாம்.
இருப்பினும், இந்த புதிய செய்தி (new message) அனுப்பும் விருப்பத்தின் மூலம் பார்க்கிங் இடம் மற்றும் பலவகையான கேள்விகளுக்கு நேரடியாக கூகுள் மேப்ஸ் அல்லது கூகுள் சர்ச்சில் உடனடி பதில்களைப் பெற பயனர்களை அனுமதிக்கும்.
இருந்த போதிலும், மேப்ஸ் மற்றும் சர்ச்சில் தேடப்படும் சரிபார்க்கப்பட்ட வணிகம் இந்த செய்தி விருப்பத்தை எனேபிள் செய்திருக்கும் போது மட்டுமே வடிக்கையாளர்களால் செய்திகளை அனுப்ப முடியும். தற்போது இந்த செய்தி அம்சத்தை வணிக உரிமையாளர்கள் கூகுள் மேப்ஸில் பயன்படுத்துகின்றனர்.
அதே நேரத்தில் கூகுள் சர்ச் செயலியில் இந்த செய்தி அம்சம் இந்த மாத இறுதியில் வணிகர்களுக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் "வணிக உரிமையாளர்கள் தங்களது வணிக சுயவிவரத்திலிருந்து செய்தி அம்சத்தை இயக்கும் போது, திரையின் கீழ் இடதுபுறத்தில் உள்ள அப்டேட்டுகள் என்ற விருப்பத்தில் உள்ள வணிகச் செய்திகள்(Business Messages) பிரிவில் இருந்து கூகுள் மேப்ஸ் செயலியில் வாடிக்கையாளர்களுக்கு பதிலளிக்கத் தொடங்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது.
வணிக உரிமையாளர்கள் இந்த செய்திகள் அம்சத்தை இயக்க தங்களது மேப்ஸ் செயலியில், கூகுள் எனது வணிக பயன்பாடு> அமைப்புகள்> செய்திகளைத் தேர்ந்தெடு> டர்ன் ஆன் (Google My Business app > Settings > Select Messages > Turn on.) என்ற வழிகளை பின்பற்ற வேண்டும். மேலும், வாடிக்கையாளர்கள் தங்கள் கூகுள் மேப்ஸ் செயலியில் தேடும் குறிப்பிட்ட வணிகங்களின் சுயவிவரத்தில் புதிய செய்தி (New Message) பட்டன் தோன்றும்.
இதுதவிர, வாடிக்கையாளர்கள் கூகுள் மேப்ஸ் வழியாக சரிபார்க்கப்பட்ட வணிகத்தை அழைக்க முயற்சிக்கும் போது, அழைப்பு பதிலளிக்கப்படாவிட்டால், வாடிக்கையாளர்கள் ஒரு செய்தியை அனுப்பும்படி கேட்கப்படுவார்கள். மேலும், கூகுள் சர்ச் மூலமாகவும் வாடிக்கையாளர்கள் அனுப்பும் செய்திகளை வணிக உரிமையாளர்கள் காண முடியும் என நிறுவனம் கூறியுள்ளது.வாடிக்கையாளர்கள் அனுப்பிய செய்திகளுக்கு கூகுள் சர்ச் மூலம் வணிகர்கள் அவர்களின் கணினிகளிலிருந்தும் நேரடியாக சாட் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் சர்ச்-ல் இந்த செய்தி அம்சத்தைப் பற்றிய கூடுதல் விவரங்கள் தொழில்நுட்ப நிறுவனத்திடமிருந்து அதிகம் எதிர்பார்க்கப்படுகின்றன. இதற்கிடையில், கூகுள் மேப்ஸ் மற்றும் சர்ச்-ல் வணிகங்களை செயல்படுத்த, அவர்களின் வாடிக்கையாளர்களைப் பற்றி மேலும் அறியும் வகையில் செயல்திறன் நுண்ணறிவுகள் (performance insights) என்ற அம்சத்தை கூகுள் உருவாக்கி வருகிறது.
இந்த மாதத்திலிருந்து, நிறுவனம் வணிக சுயவிவரங்களுக்கான புதிய அளவீடுகளை வெளியிடுகிறது. இது வாடிக்கையாளர்கள் தங்கள் வணிகத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதைப் புரிந்துகொள்ள அனுமதிக்கும். இது குறித்து மேலும் நிறுவனம் கூறியதாவது, " கூகுளில் உங்கள் வணிகத்தைக் கண்டறிய வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் தேடல் வினவல்களின் விரிவான பட்டியலை விரைவில் காண்பீர்கள்.
அடுத்த ஆண்டின் தொடக்கத்தில், கூகுள் மேப்ஸ் மற்றும் சர்ச் வழியாக வாடிக்கையாளர்கள் அவர்களின் கணினி அல்லது மொபைல் சாதனத்திலிருந்து, உங்கள் வணிகத்தைப் பார்த்தார்களா என்பதைக் காட்டும் செயல்திறன் பக்கத்திற்கான அப்டேட்டுகளை காண்பீர்கள். ஏற்கனவே புதுப்பிக்கப்பட்ட நுண்ணறிவுகளின் மூலம், வணிக நிறுவனங்கள் கடந்த ஆறு மாதங்களாக தகவல்களைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் செயல்திறன் நுண்ணறிவு (performance insights) அம்சம் கூகுள் மை பிசினஸ் டூல்ஸ் வழியாக வணிகர்களுக்கு கிடைக்கும்" என தெரிவித்துள்ளது.