பொதுக் கழிப்பறைகளை அறிய உதவும் கூகுள் மேப்ஸ்..!

‘Public toilets near me' என்ற கூகுள் மேப்ஸ் அம்சம் மூலம் பயனளார்கள் இருப்பிடங்களை அறிந்துகொள்ள முடியும்.

Web Desk | news18
Updated: July 12, 2019, 3:07 PM IST
பொதுக் கழிப்பறைகளை அறிய உதவும் கூகுள் மேப்ஸ்..!
மாதிரிப்படம்
Web Desk | news18
Updated: July 12, 2019, 3:07 PM IST
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மக்கள் பொதுக்கழிப்பறைகளை அறிந்துகொள்வதற்காக இந்திய அரசுடன் இணைந்து புதிய தொழில்நுட்ப அம்சத்தை கூகுள் மேப்ஸ் வழங்குகிறது.

மத்திய அரசின் "Loo Review" பிரசாரத்துக்கு உதவும் வகையில் கூகுள் நிறுவனம் சார்பில் நாடு முழுவதும் உள்ள பொதுக்கழிப்பறைகளின் இருப்பிடங்களை அறிந்துகொள்ளூம் வசதி கூகுள் மேப்ஸ் மூலம் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 45 ஆயிரம் பொதுக்கழிப்பறைகளின் இருப்பிடங்கள் இதுவரையில் கூகுள் மேப்ஸில் இணைக்கப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களுக்கு இன்னும் இத்திட்டம் மேம்படுத்தப்படவில்லை என்றாலும் சுமார் 1700 நகரங்களில் கூகுள் மேப்ஸ் பொதுக்கழிப்பறை இருப்பிடம் அறியும் வசதி சிறப்பாகவே செயல்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ‘Public toilets near me' என்ற கூகுள் மேப்ஸ் அம்சம் மூலம் பயனளார்கள் இருப்பிடங்களை அறிந்துகொள்ள முடியும்.

”கூகுள் மேப்ஸின் இத்திட்டம் மூத்த குடிமக்களுக்கும் குறிப்பாக பெண்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பொது இடங்களில் உள்ள பொதுக்கழிப்பறைகளின் தூய்மையும் மேம்படுத்தப்படும். இந்த ஆப் மூலமாகவே மக்களிடம் கருத்து கேட்டு பொதுக்கழிப்பறைகள் மேம்படுத்தப்படும்” எனக் கூறியுள்ளார் மத்திய வீட்டுவாரியம் மற்றும் நகர்ப்புற நலத்துறை அமைச்சகத்தின் செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

மேலும் பார்க்க: அமேசான் ப்ரைம் வழங்கும் யூத் ஆஃபர்... 18-24 வயதுடையோருக்கு அசத்தல் கேஷ்பேக்..!
First published: July 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...