கூகுள் நியூஸ் வருவாயில் பங்கு கேட்கும் அமெரிக்க ஊடகங்கள்!

கூகுள், வருவாய் குறித்து இதுவரை எந்தவொரு தகவல்களையும் வெளியிடாமல் விமர்சனங்களுக்கு வாயும் திறக்காமல் உள்ளது.

Web Desk | news18
Updated: June 11, 2019, 5:39 PM IST
கூகுள் நியூஸ் வருவாயில் பங்கு கேட்கும் அமெரிக்க ஊடகங்கள்!
கூகுள் அலுவலகம். (Christie Hemm Klok/The New York Times)
Web Desk | news18
Updated: June 11, 2019, 5:39 PM IST
கூகுள் நிறுவனம் தனது செய்திப்பிரிவு வாயிலாக மட்டும் 2018-ம் ஆண்டில் சுமார் 4.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாயை ஈட்டியுள்ளதாக நியூஸ் மீடியா அலையன்ஸ் என்ற நிறுவனம் ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

சர்வதேச அளவில் கடைசியாக வெளியான இரண்டு அவெஞ்சர்ஸ் திரைப்படங்களின் டிக்கெட் விற்பனையைவிட கூகுள் நியூஸின் ஓராண்டு வருவாய் அதிகம். கூகுள் நியூஸ் என்னும் தளத்தின் கீழ் பல செய்தி நிறுவனங்கள் வெளியிடும் அத்தனை செய்திகளும் இடம்பெற்றிருக்கும்.

ஆக, ”4.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாயை சம்பாதித்துத் தந்த அத்தனை செய்தியாளர்களும் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாளிதழ்களுக்கும் அந்த வருமானத்தில் பங்கு வேண்டும்” என நியூயார்க் டைம்ஸ், நியூஸ் மீடியா அலையன்ஸ் உள்ளிட்ட பல செய்தி நிறுவனங்களும் கேட்டுள்ளன.

இதுகுறித்து அமெரிக்க ஊடக நிறுவனங்கள் பல விமர்சித்து வந்தாலும் கூகுள் நிறுவனம் தனது கூகுள் சர்ச் மற்றும் கூகுள் நியூஸ் வருவாய் குறித்து இதுவரை எந்தவொரு தகவல்களையும் வெளியிடாமல் விமர்சனங்களுக்கு வாயும் திறக்காமல் உள்ளது.

மேலும் பார்க்க: ’ஹேக்’ செய்யப்பட்ட அமிதாப் பச்சன் ட்விட்டர் கணக்கு!
First published: June 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...