இன்டர்வியூ வார்ம் அப் என்ற பெயரில் புதிய முயற்சி ஒன்றை கூகுள் நிறுவனம் தொடங்கியுள்ளது. இன்டர்வியூவுக்கு தயாராகும் மக்களுக்கு கேள்விகளை பயிற்சி செய்வதற்கான தளமாக இது செயல்பட உள்ளது. இதன் மூலமாக இன்டர்வியூ செல்வதற்கான நம்பிக்கை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.
வேலை தேடும் தனி நபர்கள் மற்றும் தொழிலை விரிவாக்கம் செய்ய விரும்பும் வணிகத்துறையினர் போன்றோருக்கு தேவையான தகவல்களை கூகுள் நிறுவனம் வழங்கி வருகிறது.
கூகுள் தொடங்கியுள்ள இன்டர்வியூ வார்ம் அப் என்றால் என்ன?
தனி நபர்கள் தங்கள் இன்டர்வியூக்கு பயிற்சி செய்வதற்கான தளம் இது. குறிப்பாக இது ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ் என்ற செயற்கை அறிவாற்றல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும். கேள்விகளுக்கு யூசர்கள் தெரிவிக்கும் பதிலை ஆய்வு செய்வதுடன், அந்த விஷயம் தொடர்பாக விரிவாக தெரிந்து கொள்வதற்கு உதவி செய்யும்.
ஒரு யூசர் டெஸ்க்டாப் மூலமாக இணையதளத்தை திறக்கும்போது, அவர்களது வாய்ஸ் (குரல்) எப்படி என்பதை புரிந்து கொள்வதற்காக சில பதில்களை சொல்லுமாறு இது கேட்கும்.
இன்டர்வியூ வார்ம் அப் டூல் பயன்படுத்துவது எப்படி?
முதலில் இன்டர்வியூ வார்ம் அப் தளத்திற்கு செல்ல வேண்டும். அங்கு ஸ்டார்ட் பிராக்டிசிங் என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். இங்கு யூசர்கள் தாங்கள் எந்த வேலைக்கு செல்ல இருக்கிறோம் என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதை அவர்கள் கிளிக் செய்தவுடன், அவர்களிடம் கூகுள் தோராயமாக 5 கேள்விகளை கேட்கும்.
இந்தக் கேள்விகள் அனைத்தும் நீங்கள் தேர்வு செய்யும் வேலை துறை சார்ந்த நிபுணர்களால் தயாரிக்கப்பட்டவை ஆகும். கேள்விகள் கேட்கப்பட்டவுடன், நீங்கள் ஆன்சர் என்பதை கிளிக் செய்து பதில் அளிக்கத் தொடங்க வேண்டும்.
Also Read : Play Store-ல் இருந்து சுமார் 9 லட்சம் ஆப்ஸ்களை நீக்கும் கூகுள்!
உடனடியாக மொழிமாற்றம் :
நீங்கள் சொல்லும் பதிலை கூகுள் உடனடியாக உங்களுடைய மொழிக்கு மாற்றம் செய்யும். இது மட்டுமின்றி, யூசர் அளிக்கும் பதிலைப் பொறுத்து, தொடர்புடைய விஷயம் குறித்த விரிவான தகவல்களை கூகுள் உங்கள் முன் எடுத்து வைக்கும். அவற்றை படித்து, மீண்டும் நீங்கள் பயிற்சி செய்யலாம். நீங்கள் சொல்லும் பதிலுக்கு கூகுள் மதிப்பெண் வழங்காது. மாறாக, உங்கள் பதிலை ஆய்வு செய்து, அந்தத் துறையில் உங்கள் அறிவை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கும்.
எந்தெந்த டிவைஸ்களில் இது கிடைக்கிறது?
குரோம் பிரவுஸரின் லேட்டஸ்ட் வெர்சன் ஓஎஸ்எக்ஸ், விண்டோஸ் மற்றும் ஆண்டிராய்டு, ஐஓஎஸ் டிவைஸில் லேட்டஸ்ட் சஃபாரி வெர்சன் ஆகியவற்றில் இதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதுவரையிலும் நீங்கள் இன்டர்வியூ செல்லாதவர் எனில், உங்கள் மனதில் இன்டர்வியூ என்றாலே அச்சம் இருக்கும் என்றால் அல்லது உங்கள் அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்ள இந்த தளத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Google, Interviews, Technology