தொழில்நுட்ப ஜாம்பவான் நிறுவனங்கள் என்று உலகில் ஒரு சில நிறுவனங்களை எளிதாகப் பட்டியலிடலாம். இந்த நிறுவனங்களின் தயாரிப்புகளும் சேவைகளும் உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவர்களின் சேவை இல்லாமல் ஒரு நாள் கூட இயங்க முடியாது என்று இருக்கும் அதே நிலையில், யூசர்களின் தனிப்பட்ட தரவு டேட்டாக்கள், யூசர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை ட்ராக் செய்வது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளும் அதிகரித்து வருகிறது. கூகுள், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட டெக்னாலஜி ஜாம்பவான்கள் அனைவர் மேலும் புகார் எழுப்பியுள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு கூட பல நிறுவனங்கள் மீது, ‘யூசர்களின் டேட்டா விற்பனை செய்யப்பட்டது’ என்ற குற்றம் சாட்டப்பட்டது. யூசர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்குமாறு பல சட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு பலவிதமான வழிமுறைகள் கையாளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், எந்த நிறுவனம் யூசர்களின் டேட்டாவை அதிகமாக டிராக் செய்கிறது என்று என்பதைப் பற்றிய ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி கூகுள் நிறுவனம் தான் யூசர்களின் டேட்டாவை அதிகமாக டிராக் செய்கிறது என்று அதிர்ச்சியூட்டும் ஒரு ஆய்வு அறிக்கை வெளியாகியுள்ளது. கூகுள் நிறுவனத்தின் பிசினஸ் மாடலே அதனுடைய டேட்டாவை நம்பித்தான் இருக்கிறது என்பதால் கூகுள் நிறுவனம் அனைத்து டேட்டாக்களையுமே டிராக் செய்து வருகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து இரண்டு பெரிய சமூகவலைத்தள ஊடகங்களான ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் இரண்டு நிறுவனங்களுமே தங்களுக்குத் தேவையான தகவலைச் சேமித்து வைக்கிறது.
Also Read : சோஷியல் மீடியாவில் நீங்க படிப்பது எல்லாம் உண்மை தகவலா..! - என்ன சொல்கிறது ஆய்வு
இவர்களோடு ஒப்பிடும்போது ஆப்பிள் நிறுவனம் தான் இவர்களுக்கு அதிக பிரைவசி தருகிறது என்பதையும் அறிக்கை குறிப்பிட்டிருந்தது. உலகில் இருக்கும் அனைத்து பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் உடன் ஒப்பிடும் பொழுது கூகுள் தான் மிக அதிக அளவில் டேட்டாவை டிராக் செய்கிறது என்பது இந்த ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
StockApps.com என்ற நிறுவனத்தின் ஆய்வின் அடிப்படையில், அமேசான், ஃபேஸ்புக், ஆப்பிள், ட்விட்டர் உள்ளிட்ட ஈகாமர்ஸ் நிறுவனங்கள் என்றாலும் சரி சமூக வலைத்தள சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் என்றாலும் சரி, கூகுள் தான் யூசர்களின் தகவல்களை அதிகமாகச் சேமித்து டிராக் செய்கிறது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு நபரின் 31 வகையான தனிப்பட்ட தகவலைக் கூகுள் பெறுகிறது என்பதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த ஆய்வை மேற்கொண்ட ஒரு ஆய்வாளர், “நாம் எந்த ஒரு வலைத்தளத்திற்கு சைன்-அப் செய்யும் பொழுதும் அல்லது ஏதேனும் நாம் தளத்தைப் பயன்படுத்தும் பொழுதும் அல்லது ஏதேனும் அக்ரீமென்ட் உள்ளிட்டவற்றுக்கு இணையத்தில் பதிவு செய்யும் போதுமே, அதிலிருக்கும் தனியுரிமை கொள்கையைப் பாதிப்பதில்லை.
பெரும்பாலும் படிப்பதற்கு நேரமில்லை அல்லது பொறுமை இல்லை. பிரைவசி பாலிசி என்று கூறப்படும் பல பக்கங்களுக்கு நீளும் விவரங்களைப் பொறுமையாகப் படித்து ஒப்புக் கொள்வதில்லை. எனவே பல யூசர்களும் தங்களுக்குத் தெரியாமல் தங்களுடைய தனிப்பட்ட விவரங்களை வலைத்தளங்களுக்குத் தருவதாக ஒப்புக் கொள்கின்றனர். அதுமட்டுமில்லாமல் ஒரு சிலர் பிரைவசி பாலிசியை முழுமையாகப் படித்தாலும், எல்லோருக்கும் பிரைவசி பாலிசியில் குறிப்பிடப்பட்டிருக்கும் சில சட்ட ரீதியான விபரங்களையும் நுணுக்கங்களையும் புரிந்து கொள்ளும் அளவுக்குச் சட்ட அறிவு இல்லை என்பதும் இதில் முக்கியமானது” என்று தெரிவித்திருந்தார்.
Also Read : மேக் இன் இந்தியா | இந்தியாவில் உற்பத்தியாகும் ஐபோன், எப்போது விற்பனைக்கு கிடைக்கும்.?
எனவே, கூகுள் பயன்படுத்தும் போது, நாம் அதன் பிரைவசி பாலிசியை ஏற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு ஏற்றுக் கொள்ளும் போது, நம்முடைய (யூசர்களுடைய) தகவலைக் கூகுள் அக்சஸ் செய்யலாம், டிராக் செய்யலாம் என்ற அனுமதியை வழங்கி விடுகிறோம்.
பெரும்பாலும், இந்த டேட்டாவை வைத்து விளம்பரங்கள் டார்கெட் செய்யப்படுகின்றன என்று கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.