பேஸ்புக், ட்விட்டருக்கு போட்டியாக மீண்டும் ஒரு சமூக வலைதளத்தை உருவாக்கிய கூகுள்!

தற்போது SHOELACE சமுக வலைதள செயலி சேவை நியூயார்க் நகரத்தில் மட்டும் தொடங்கப்பட்டுள்ளது.

news18
Updated: July 16, 2019, 1:55 PM IST
பேஸ்புக், ட்விட்டருக்கு போட்டியாக மீண்டும் ஒரு சமூக வலைதளத்தை உருவாக்கிய கூகுள்!
கூகுள் ஷூலேஸ்
news18
Updated: July 16, 2019, 1:55 PM IST
பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் போலவே, கூகுள் நிறுவனமும் புதியதாக SHOELACE என்ற சமூக வலைதளத்தை உருவாக்கியுள்ளது.

ஆர்குட்-க்கு பிறகு கூகுள் பிளஸ் சமூக வலைதள சேவையை கூகுள் அறிமுகம் செய்தது. ஆனால், அது பெரிய அளவில் வெற்றிபெறாததை அடுத்து, தற்போது SHOELACE மூலம் சமூக வலைதள உலகில் கால்பதிக்க கூகுள் களமிறங்கியுள்ளது.

SHOELACE சமுக வலைதளம் போன்று தான் என்றாலும் மொபைல் செயலி வடிவில் மட்டுமே கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட சீன சமூக வலைதள செயலியான Helo, ShareChat போன்றவற்றுக்கு போட்டியாக SHOELACE இருக்கும் என்று கூறப்படுகிறது.

தற்போது SHOELACE சமுக வலைதள செயலி சேவை நியூயார்க் நகரத்தில் மட்டும் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் பிற நாடுகள், நகரங்களிலும் SHOELACE சேவை கிடைக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

பல முறை ஃபேஸ்புக், டிவிட்டருக்கு போட்டியாக சமூக வலை தளத்தை உருவாக்க முயன்று தோல்வியை மட்டுமே சந்தித்துள்ள நிலையில், SHOELACE வெற்றியை தருமா? என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.

கூகுள் பிளஸ் சேவை 2011 ஜூன் 28-ம் தேதி தொடங்கப்பட்டு, 2019 ஏப்ரல் 2-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டது.

இந்தோனேசியாவை விடாமல் துரத்தும் நிலநடுக்கம்.. சேதமடையும் கோயில்கள், கட்டடங்கள்



மேலும் பார்க்க:
First published: July 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...