இனி உங்கள் விரல் ரேகைதான் பாஸ்வேர்டு... ஆண்ட்ராய்டு-க்கு கூகுளின் மாற்றம்!

ஆண்ட்ராய்டு 7-க்கான அப்டேட் ஆக இச்சேவையை கூகுள் ப்ளே சேவை வழியாகக் கொண்டு வருகிறது கூகுள்.

இனி உங்கள் விரல் ரேகைதான் பாஸ்வேர்டு... ஆண்ட்ராய்டு-க்கு கூகுளின் மாற்றம்!
விரல் ரேகை பாஸ்வேர்டு
  • News18
  • Last Updated: August 14, 2019, 2:46 PM IST
  • Share this:
கூகுள் இணையதளம் மற்றும் இதர சேவைகளை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோன்களில் பயன்படுத்த இனி பாஸ்வேர்டு பயன்படுத்துவதற்கு பதில் விரல் ரேகையை பாஸ்வேர்ட் ஆகப் பயன்படுத்தும் முறையை கூகுள் கொண்டு வர உள்ளது.

ஆண்ட்ராய்டு 7-க்கான அப்டேட் ஆக இச்சேவையை கூகுள் ப்ளே சேவை வழியாகக் கொண்டு வருகிறது கூகுள். இதுகுறித்து கூகுள் தயாரிப்பு மேலாளர் டாங்ஜிங் கூறுகையில், “பிக்சல் சாதனங்களில் இந்த சேவை அமலில் உள்ளது. புதிதாக ஆண்ட்ராய்டிலும் இச்சேவையைக் கொண்டு வருவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்” என்றார்.

புதிய பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள் மூலம் பாஸ்வேர்ட் பயன்பாட்டை மேலும் பலமானதாக்கவும் எளிதாக்கவும் இந்த விரல் ரேகை பாஸ்வேர்டு உதவும் என கூகுள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளது. மேலும், இதன் மூலம் பயனாளர்களது சுயதகவல்கள் ஏதும் கசியாது என்றும் கூகுள் உறுதி தெரிவித்துள்ளது.


ஆண்ட்ராய்டு சாதனங்களில் கூகுள் க்ரோம் மூலம், https://passwords.google.com இத்தளத்தை தேர்வு செய்து அதில் எந்தத் தளத்துக்கு பாஸ்வேர்டு வேண்டுமானாலும் பாஸ்வேர்டு மேனேஜ் அம்சம் மூலம் உங்களது தகவல்களைப் பாதுகாக்க முடியும் என்கிறது கூகுள்.

மேலும் பார்க்க: புதிய திரைப்படம் வெளியாகும் அதே நேரத்தில் இனி வீட்டிலிருந்தே பார்க்கலாம்- அதிரடி அம்சங்களுடன் ஜியோ ஃபைபர்
First published: August 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்