Home /News /technology /

Google Android | ஆண்ட்ராய்டு ஃபோன்களுக்கு கூகுளின் பிரத்யேக அம்சங்கள்!

Google Android | ஆண்ட்ராய்டு ஃபோன்களுக்கு கூகுளின் பிரத்யேக அம்சங்கள்!

google android phone

google android phone

Google Android Phones | போர்ட்ரைட் புகைப்படங்கள், செல்ஃபி முதல். செல்லப்பிராணிகள், உணவு படங்கள் வரை, அனைத்து விதமான படங்களையும் ப்ளர் செய்யலாம்.

பல நிறுவனங்கள் ஆண்ட்ராய்டு ஃபோன்களை போட்டி போட்டுக்கொண்டு வழங்கி வருகின்றன. இதில், தொழில் நுட்ப உலகின் ஜாம்பவானான கூகுள் நிறுவனமும் அடங்கும். கூகுள் பிக்சல் என்பது கூகுளின் பிரத்தேக ஸ்மார்ட்ஃபோன் பிராண்டாகும். மற்ற ஆண்ட்ராய்டு போன்களில் இல்லாத பல சிறப்பம்சங்கள் கூகுளில் இருக்கிறது. அதே போல, சமீபத்தில் கூடுதலாக சில பிரத்யேகமான அம்சங்கள் மற்றும் ஃபீச்சர்கள் ஆகியவற்றை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கூகுள் ஆண்ட்ராய்டு ஃபோன்களில் பின்வரும் அம்சங்கள் சேர்க்கப்பட உள்ளன.

கூகுள் ஃபோட்டோஸ் ப்ளர் அம்சம் (Google Photos Blur):

Google Photos இன் போர்ட்ரெய்ட் ப்ளர் செய்யும் அம்சம், நீங்கள் எடுக்கும் பல விதமான புகைபப்டங்களின் பின்னணியை மங்கலாக்கி, புகைப்படத்தின் முக்கிய அம்சத்தை ஹைலைட் செய்து காட்டும். உங்களுடைய போர்ட்ரைட் புகைப்படங்கள், செல்ஃபி முதல். செல்லப்பிராணிகள், உணவு படங்கள் வரை, அனைத்து விதமான படங்களையும் ப்ளர் செய்யலாம். இந்த ப்ளர் அம்சம், இதற்கு முன்னர் மனிதர்களின் புகைப்படம் / முகம் இருந்தால் மட்டுமே பயன்படுத்த முடிந்தது.

இந்தக் குறிப்பிட்ட அம்சம், பிக்சல் ஃபோன் வைத்திருக்கும் Google One யூசர்களுக்கும் எதிர்காலத்தில் அப்டேட் செய்யப்படும்.

கூகுள் கீபோர்டு மற்றும் ஜிபோர்டு அப்கிரேடு (Google Keyboard and GBoard):

கூகிளின் கீபோர்டு அல்லது ஜிபோர்டில் கிராமர் (இலக்கணம்) திருத்தும் மேம்பட்ட அம்சம் சேர்க்கப்படும். தற்போது எழுத்துப்பிழையை சரிபார்க்கும் ஆப்ஷனுடன் இந்த இலக்கணம் சரிபார்க்கும் அம்சமும் இணைகிறது என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இரண்டு எமோஜிகளை ஸ்டிக்கர்களாக இணைக்கும் 2,000 க்கும் மேற்பட்ட எமோஜி மாஷ்-அப் உடன் ஜிபோர்டும் புதுப்பிக்கப்படுகிறது.



கூகுள் லைவ் ட்ரான்ஸ்கிரைப் செயலி (Google Live Transcribe App):

ஆடியோ ரிக்கார்டிங் போல, நாம் பேசுவதை வார்த்தைகளாக மாற்றவது தான் டிரான்ஸ்கிரிப்ஷன். இந்த அம்சம் பலருக்கும் பல விதமாக உதவியாக இருக்கும். கூகுள் ஃபோனில் இந்த லைவ் டிரான்ஸ்கிரைப் செயலி அப்டேட் செய்யப்படுகிறது. காது கேளாதவர்களுக்கு மிகவும் பயனளிக்கும் வகையில் பேச்சிலிருந்து உரையாக மற்றும் டிரான்ஸ்கிரிப்ஷனை வழங்க, இந்த கூகுளின் லைவ் ஆப் ஆஃப்லைனிலும் இயங்குமாறு புதுப்பிக்கப்படுகிறது. சப்வே அல்லது விமானப் பயணம் போன்ற பகுதிகளில் மற்றும் நெட்வொர்க் கவரேஜ் குறைவாக இருக்கும் இடங்களில் உரையாடலுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Also Read : புதிய ஆண்டிராய்ட் ஃபோன் வாங்குகிறீர்களா? இந்த தப்ப மட்டும் தவறியும் செய்யாதீங்க

தற்போது அனைத்து பிராண்டு ஆண்ட்ராய்டு ஃபோன்களிலும் லைவ் டிரான்ஸ்கிரைப் செயலி கிடைக்கிறது. Samsung மற்றும் Google Pixel ஃபோன்களில் இந்த செயலி இன்-பில்ட்டாக நிறுவப்பட்டுள்ளது.

Also Read : வாட்ஸ் அப்-பில் ஃபேக் நியூஸ் செக் செய்வது எப்படி - வந்தாச்சு புது வசதி

மேலே உள்ள அம்சங்களைத் தவிர்த்து, கூகுள் அசிஸ்டண்ட் கூடுதலாக புதிய அம்சத்தை வழங்குகிறது. உங்களுடைய குரலைப் பயன்படுத்தி, வாய்ஸ் மெசேஜ் மூலம் பார்க்கிங்கிற்கு பணம் செலுத்தலாம் மற்றும் பார்க்கிங் ஸ்டேட்டஸ் சரிபார்க்கலாம். ஆனால், இந்த அம்சம் தற்போது அமெரிக்காவில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Published by:Selvi M
First published:

Tags: Android, Google, Technology

அடுத்த செய்தி