ஆண்ட்ராய்டின் சமீபத்திய வெர்ஷன்களில் கால்ஸ்களை ரெக்கார்ட் செய்யும் திறனை தேர்ட்-பார்ட்டி அப்ளிகேஷன்களுக்கு வழங்குவதை கட்டுப்படுத்த சமீபத்தில் தனது Play Store பாலிசியை கூகுள் அப்டேட் செய்து உள்ளது. கூகுள் கடந்த சில ஆண்டுகளாகவே கால் ரெக்கார்டிங் அம்சத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறது. முன்பு 2019 செப்டம்பரில் ஆண்ட்ராய்டு 10 அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் மைக்ரோஃபோன் வழியாக கால்ஸ்களை ஆப்ஸ்கள் ரெக்கார்ட் செய்வது தடுக்கப்பட்டது.
இந்நிலையில் Accessibility API வழியே ஆண்ட்ராய்டில் கால்ஸ்களை ரெக்கார்ட் செய்ய டெவலப்பர்கள் பயன்படுத்தும் மற்றொரு வழியை கூகுள் இப்போது துண்டித்துள்ளது. அதாவது கூகுள் அதன் Accessibility API-க்கான அணுகலை நீக்குகிறது. கூகுளின் இந்த அதிரடி நடவடிக்கை மூலம் அனைத்து தேர்ட்-பார்ட்டி ஆப்ஸ்களும் அவற்றின் முக்கிய செயல்பாட்டை இழக்கின்றன. எனினும் ஃபர்ஸ்ட் பார்ட்டி டயலர் ஆப்ஸ் (First party dialler apps) மற்றும் ஃபோன்களில் ப்ரீ-இன்ஸ்டால் செய்யப்பட்ட Google Dialer ஆகியவை பிராந்தியம் மற்றும் உற்பத்தியாளரை (region and manufacturer) பொறுத்து ஃபோன் கால்ஸ்களை ரெக்கார்ட் செய்யும்.
Accessibility API டிசைன் செய்யப்படவில்லை மற்றும் ரிமோட் கால் ஆடியோ ரெக்கார்டிங்கிற்காக டெவலப்பர்கள் அதை கோர முடியாது என்று புதுப்பிக்கப்பட்ட Play Store கொள்கைகளின் ஒரு விதி கூறுகிறது. கூகுளின் இந்த புதிய கொள்கை வரும் மே 11 முதல் அமலுக்கு வருகிறது. எனவே ஆப் டெவலப்பர்கள் தேர்ட்-பார்ட்டி ஆப்ஸ்கள் மூலம் கால் ரெக்கார்டிங் அம்சத்தை வழங்க முடியாது.
Read More : ஒரே வாரத்தில் 2.2 மில்லியன் பேர் டாடா நியூ செயலி டவுன்லோடு - இதன் சிறப்பம்சங்கள் என்னென்ன?
உங்களது ஆண்ட்ராய்டு மொபைலில் உள்ளமைக்கப்பட்ட கால் ரெக்கார்டர் (built-in call recorder) இல்லாமல் நீங்கள் ஸ்மார்ட் போனை பயன்படுத்தினால், வரும் மே 11 முதல் வாய்ஸ் கால்ஸ்களை உங்களால் இனி ரெக்கார்ட் செய்ய முடியாது. மே 11 காலக்கெடுவிற்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில் ஆண்ட்ராய்டில் தேர்ட்-பார்ட்டி ஆப்ஸ்களை பயன்படுத்தி கால்ஸ்களை தொடர்ந்து ரெக்கார்ட் செய்வதற்காக, யூஸர்கள் விரைவில் sideloading அல்லது தேர்ட்-பார்ட்டி சோர்ஸஸ்களில் இருந்து ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்வது உள்ளிட்டவற்றை நாட வேண்டியிருக்கும்.
எனினும் இது ஒரு ஆபத்தான செயல்முறையாகும். ஏனென்றால் இது இணையத்தில் தேர்ட்-பார்ட்டி வெப்சைட்ஸ்களில் இருந்து சரிபார்க்கப்படாத இன்ஸ்டாலேஷன் அல்லது தீங்கிழைக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட ஆப்ஸ்களை டவுன்லோட் செய்ய வழிவகுக்கும். Xiaomi, Samsung, OnePlus மற்றும் Oppo போன்ற சில பிராண்டினுடைய ஸ்மார்ட் போன்களில் built-in call record அம்சம் இருப்பதால் அவை மே 11-க்குப் பிறகும் தொடர்ந்து செயல்படும். கூகுளின் பாலிசி மாற்றங்களை விரைவில் ஆப்ஸ் டெவலப்பர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, காலக்கெடு முடிவதற்குள் அந்தந்த ஆப்ஸை அகற்றும்படி டெவலப்பர்களிடம் கூகுள் கேட்கலாம் என்று தெரிகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.