உலகில் மிக பிரபலமான இ-மெயில் சேவை நிறுவனம் ஜிமெயில் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. கடந்த ஆண்டின் நிலவரப்படி உலகெங்கிலும் 1.8 பில்லியன் மக்கள் ஜிமெயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இமெயில் வாடிக்கையாளர்களின் மார்க்கெட் பங்குகளில் கூகுள் இமெயில் சேவையானது 18 சதவீத பங்குகளைக் கொண்டுள்ளது.
மக்களில் சுமார் 75 சதவீதம் பேருடைய மொபைல் ஃபோன்களில் ஜிமெயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இதையெல்லாம் மனதில் வைத்து, வாடிக்கையாளர்களின் சௌகரியம் கருதி ஆஃப்லைன் ஜிமெயில் சேவையை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு கூகுள் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஆஃப்லைன் சேவையை பயன்படுத்தி இன்டர்நெட் வசதி இல்லாமலே இமெயில்களை படிக்கவும், பதில் அளிக்கவும், ஜிமெயில் மெசேஜ்களை தேடவும் முடியும் என்று மவுண்டைன் வியூ என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொலைதூரப் பகுதிகளில் பலன் அளிக்கும்
இன்றைக்கும் கூட இணைய வசதி இல்லாத கிராமப்புற பகுதிகள் மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்கு நீங்கள் செல்லும்போது இந்த ஆஃப்லைன் சேவை உங்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று கூகுள் நிறுவனம் தெரிவிக்கிறது.
உங்கள் டிவைஸில் நீங்கள் கூகுள் எனேபிள் செய்து கொள்வது எப்படி?
1. உங்கள் டிவைஸில் mail.google.com என்ற தளத்திற்கு செல்லவும். ஆஃப்லைன் ஜிமெயில் சேவை என்பது கூகுள் குரோம் பிரவுஸரில் மட்டுமே வேலை செய்யும் என்றும், அது நீங்கள் நார்மல் மோடில் பிரவுஸிங் செய்ய வேண்டும் என்றும் கூகுள் நிறுவனம் தெரிவிக்கிறது. பிரைவேட் பிரவுசிங் மற்றும் இதர நிறுவன பிரவுசர்களில் ஆஃப்லைன் சேவை வேலை செய்யாது.
2. உங்கள் இன்பாக்ஸ் சென்ற பிறகு செட்டிங்க்ஸ் சென்று கோக்வீல் பட்டனை (Cogwheel button) அழுத்தவும்.
3. இப்போது ஆல் செட்டிங்க்ஸ் பார்ப்பதற்கான பட்டனை கிளிக் செய்யவும்.
Also Read : Gmail யூஸர்களே உஷார்... மெயில் மூலம் நடக்கும் ஆன்லைன் மோசடிகளில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிகள்!
4. இந்தப் பக்கத்தில் ஆஃப்லைன் என்ற டேப் மீது கிளிக் செய்யவும்.
5. இங்கு எனேபிள் ஆஃப்லைன் இன்பாக்ஸ் என்ற ஆப்ஷன் மீது கிளிக் செய்யவும்.
6. இப்போது எத்தனை நாட்களுக்கான மெசேஜ்களை சின்கரனைஸ் (sync) செய்வது என்பதை தேர்வு செய்து கொள்ளலாம்.
7. இப்போது உங்கள் கம்ப்யூட்டரில் எவ்வளவு ஸ்பேஸ் இருக்கிறது என்பதை கூகுள் காண்பிக்கும். இதைத் தொடர்ந்து எவ்வளவு டேட்டாவை நீங்கள் ஆஃப்லைனில் சேமிப்பது என்பதை தேர்வு செய்யலாம் அல்லது ஆஃப்லைனில் ஏற்கனவே உள்ள டேட்டாவை நீக்கலாம்.
8. ஆஃப்லைன் டேட்டாவை தொடர்ந்து வைத்துக் கொள்வது அல்லது நீக்குவது என்ற ஆப்ஷனை நீங்கள் தேர்வு செய்த பிறகு, சேவ் சேஞ்சஸ் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். இப்போது உங்கள் கம்ப்யூட்டரில் ஆஃப்லைன் ஜிமெயில் சேவை ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Google, Technology