இந்தியாவில் ஆரம்பிக்கக்கூடிய நிறுவனங்கள் அனைத்தும் முன்னேற்றத்தை எட்டிவிடாது. பண பற்றாக்குறை, சரியான தலைமையில்லாதது போன்ற பல காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், என்ன செய்வது? யாரிடம் அறிவுரைகளைக் கேட்பது என்ற மனநிலையில் உள்ளவர்களுக்கு, பதிலளிக்கும் விதமாக கூகுள் இந்தியா தற்போது ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம், இந்தியாவில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள சுமார் 10 ஆயிரம் ஸ்டார் அப்களுக்கு அதாவது வளர்ந்து வரும் தொழில்நிறுவனங்களுக்கு வழிகாட்டும் வகையில் ஸ்டார்ட்அப் பள்ளிகளை கூகுள் இந்தியா தொடங்கியுள்ளது. இப்பள்ளி வளர்ந்து வரும் நிறுவனங்களுக்குத் தேவையானப் பயிற்சிகள் வழங்குவதோடு, பயனுள்ள தயாரிப்பு உத்திகளை வடிவமைப்பது, ரோட் மேப்பிங் மற்றும் தயாரிப்பு தேவைகள் தொடர்பான ஆவண மேம்பாடு போன்றவை குறித்த அறிவுறுத்தும் விதமாக பாடத்திட்டங்கள் அமைந்திருக்கும் எனவும் கூறப்படுகிறது.
ஸ்டார்அப் பள்ளி செயல்படும் விதம்:
கூகுள் இந்தியா தொடங்கியுள்ள ஸ்டார்அப் பள்ளியின் மூலம் 9 வாரங்களுக்கு இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. SSI நிகழ்வில் நடத்தப்படும் இப்பயிற்சியின் போது fintech, D2C (Direct to Customer), B2B (Business to Business) மற்றும் B2C (Business to Customer), நெட்வொர்க்கிங், வேலை தேடல் மற்றும் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பலருக்கும் பலனளிக்கும் என கூறப்படுகிறது. மேலும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கானப் பயிற்சியில் கூகுள் தலைவர்கள் மற்றும் பல துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் இடம் பெறுவார்கள். இதன் மூலம் வளர்ந்துவரும் நிறுவனங்களுக்கு உதவிக்கரமாக இருப்பதோடு, நாடு முழுவதும் உள்ள இளம் தலைமுறையினர்களுக்கு ஊக்கத்தையும், ஆர்வத்தையும் ஏற்படுத்துவதாக இருக்கும்.
பொதுவாக எந்தவொரு ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் பண பற்றாக்குறை, பயனற்ற திட்டங்கள் மற்றும் சரியான தலைமையின்மை போன்ற பல காரணங்களால் முன்னேற்றம் அடைவதில்லை எனவும் ஏறக்குறைய 90 சதவீத ஸ்டார்ட் அப்கள் துவங்கப்பட்ட முதல் ஐந்து ஆண்டுகளுக்கு தோல்வியைத் தான் சந்திக்கின்றன. இந்நிலையில் தான் இது போன்ற வளர்ந்து வரும் தொழில்நிறுவனங்களுக்கு உதவும் வகையில் ஸ்டார்ட்அப் பள்ளி அமையவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Also Read : Blockchain Technology என்றால் என்ன? இதில் டெவலப்பராவதற்கு தேவையான திறன்கள் என்ன?
இந்நிலையில் தான், இது குறித்து கூகுள் இந்தியா தெரிவிக்கையில், ஸடார்ட்அப்கள் பெங்களூரு, டெல்லி, மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகியவற்றில் இருந்து மட்டுமில்லை ஜெய்ப்பூர், இந்தூர், கோரக்பூர் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வேகமாக வளர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. எனவே நாட்டின் தொலைத்தூர மூலைகளில் இருந்து ஸ்டார்அப் நிறுவனங்கள் வளரும் சூழலில் அவர்கள் அனைவருக்கும் உதவும் விதமாக இந்த முயற்சியை நாங்கள் கையில் எடுத்துள்ளதாகவும் கூகுள் தெரிவிக்கிறது.
Also Read : நிலவுக்கும் செவ்வாய்க்கும் புல்லட் ரயில்விடும் ஜப்பான் !
இவர்களுக்கான அறிவைக் கட்டமைத்து நிறுவனங்களுக்கு உதவும் வகையில் புதிய பாடத்திட்டம் எஸ்எஸ்ஐ ல் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிது. இதன் மூலம் இளம் தொழில் முனைவோர்கள் நிச்சயம் பயனடைவார்கள் எனவும் இதனை இளைஞர்கள் தவறாமல் பயன்படுத்தி கொள்ளுமாறும் கூகுள் இந்தியா தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.