பாரபட்ச நடவடிக்கை... கொந்தளித்த ஊழியர்கள்- பணியைவிட்டு விலகிய கூகுள் HR!

கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களைப் பாதுகாக்காமல் தனக்கான பயனை மட்டும் யோசித்து செயல்படுவதாக சில ஊழியர்கள் குற்றம் சுமத்தினர்.

பாரபட்ச நடவடிக்கை... கொந்தளித்த ஊழியர்கள்- பணியைவிட்டு விலகிய கூகுள் HR!
கூகுள்
  • News18
  • Last Updated: February 12, 2020, 3:17 PM IST
  • Share this:
கூகுள் நிறுவனத்தில் தொடர்ந்து ஊழியர்கள் மீது பாரபட்ச நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகக் கூறி ஊழியர்கள் கொந்தளித்ததால் கூகுளின் தலைமை மனித வளத்துறை அதிகாரி தனது பதவியைவிட்டு விலகியுள்ளார்.

கூகுளின் மனித வளத்துறையில் துணைத் தலைவர் பதவி வகித்து வந்தவர் எய்லின் நாட்டன். கடந்த 2016-ம் ஆண்டு முதல் கூகுள் நிறுவனத்தின் மூத்தத் தலைவர்களுள் ஒருவராக இருந்து வந்த எய்லின் இன்று ஊழியர்களின் கொந்தளிப்பால் தானாகவே முன்வந்து பணியைவிட்டு விலகியுள்ளார்.

கூகுள் அலுவலகங்களில் ஊழியர்கள் மத்தியில் நிலவும் பாலியல் துன்புறுத்தல்கள், முறையற்ற உறவுகள் குறித்து சக ஊழியர்கள் புகார் அளித்துள்ளனர். ஆனால், நிறுவனத்தின் மீது தொடர்ந்து யார் எவ்வித புகார் கொடுத்தாலும் அவர்களை பணியைவிட்டு நீக்கும் நடவடிக்கை தொடர்ந்து வந்துள்ளது.


இதனால், கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களைப் பாதுகாக்காமல் தனக்கான பயனை மட்டும் யோசித்து செயல்படுவதாக சில ஊழியர்கள் குற்றம் சுமத்தினர். இதுபோன்று நிறுவனத்தின் பாரபட்ச நடவடிக்கைக்கு எதிராக இணைந்த பெரும் குழுவினர் தொடர் போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கினர். இதையடுத்து ஹெச் ஆர் எய்லின் தன் குடும்பத்துடன் நேரம் செலவிட பதவி விலகுவதாகக் கூறி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.

ஆனால், கூகுள் நிறுவனம் அவருக்கு ஊழியர்கள் சாரா வேறொரு பதவியை வழங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்க: 6,499 ரூபாய்க்கு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ள ரெட்மி..!
First published: February 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading