Home /News /technology /

"இந்தியாவின் வானிலை பெண்மணி"-க்கு 104-வது பிறந்தநாள்.. ஸ்பெஷல் டூடுல் வெளியிட்டு கெளரவித்த கூகுள்.!

"இந்தியாவின் வானிலை பெண்மணி"-க்கு 104-வது பிறந்தநாள்.. ஸ்பெஷல் டூடுல் வெளியிட்டு கெளரவித்த கூகுள்.!

அன்னா மணி

அன்னா மணி

Anna Mani | நாட்டின் வானவியல் ஆராய்ச்சி துறைக்கும் பெருமை சேர்த்த இவரது அயராத முயற்சியை கவுரவப்படுத்தும் வகையில் கூகுள் இவருக்கு 104-வது பிறந்தநாள் டூடுலை வெளியிட்டு சிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
ஆகஸ்ட் 23-ஆம் தேதியான நேற்று இந்தியாவின் முக்கியமான பெண் விஞ்ஞானிகளில் ஒருவரும், இந்திய இயற்பியலாளர் மற்றும் வானிலை ஆய்வாளருமான மறைந்த அன்னா மணியின் (Anna Mani) 104-வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் கூகுள் சிறப்பு டூடுலை அர்ப்பணித்தது.

சிறிய கிராமத்தில் பிறந்து நாட்டின் சாதனை பெண்களில் ஒருவராக திகழ்ந்த இவரின் சிறப்பை போற்றும் வகையில் கூகுள் நிறுவனம் அவரது பிறந்த நாளான நேற்று சிறப்பு டூடுலை வெளியிட்டது. நாட்டின் முதல் பெண் விஞ்ஞானிகளில் ஒருவரான அன்னா மணி, இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD) துணை இயக்குநர் ஜெனரலாகவும் பணியாற்றி இருக்கிறார். வானிலையை துல்லியமாக கணித்து முன்கூட்டியே அறிவிக்கும் சேவையில் இவரது பங்களிப்பு மகத்தானது. இவரது பல ஆராய்ச்சிகள் துல்லியமான வானிலை முன்னறிவிப்புகளை வழங்குவதில் இந்தியா முன்னேறுவதை சாத்தியமாக்கியது.

சிறந்த வானிலை ஆய்வாளராக திகழ்ந்ததால் இவருக்கு 'இந்தியாவின் வானிலைப் பெண்மணி' (Weather Woman of India) என்ற பெயரும் உண்டு. இந்திய வானிலை ஆய்வுத் துறையின் துணை இயக்குநர் ஜெனரலாக இருந்துள்ளதோடு மட்டுமின்றி ஐக்கிய நாடுகளின் உலக வானிலை அமைப்பில் பல முக்கிய பதவிகளையும் வகித்து நாட்டிற்கு பெருமை சேர்த்து உள்ளார். கடந்த 1918-ல் ஆகஸ்ட் 23-ஆம் தேதி கேரளாவின் பீர்மேடு என்னும் கிராமத்தில் வசித்த ஒரு சிரிய கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தார். ஒரு சிவில் இன்ஜினியரான தனது தந்தைக்கு 7-வது குழந்தையாக பிறந்தார். வைக்கம் சத்தியாகிரகத்தின் போது காந்தியினால் ஈர்க்கப்பட்டு காதி ஆடைகளை மட்டுமே அணிவதை வழக்கமாக்கி கொண்டார் அன்னா மணி.

மேலும் சிறு வயது முதலே வாசிப்பு பழக்கத்தின் மீது தீரா ஆர்வம் கொண்டிருந்தார். இவர் டான்ஸை விரும்பினாலும் படிப்பா, நடனமா என்று வந்த போது இயற்பியல் படிப்பை தேர்வு செய்தார். ஏனென்றால் physics பாடங்கள் மீது பேரார்வம் கொண்டிருந்தார். எனவே சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இயற்பியல் மற்றும் வேதியியலில் B.Sc Honors டிகிரி பெற்றார். 1940-ல், பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் ஆராய்ச்சிக்கான உதவித்தொகையைப் பெற்றார்.இங்கே அவர் நோபல் பரிசு பெற்ற சர் சி.வி. ராமனின் வழிகாட்டுதலின் கீழ் ஸ்பெக்ட்ரோஸ்கோபியை படித்தார். 1945-ல், அவர் இயற்பியலில் பட்டபடிப்பைத் தொடர லண்டன் இம்பீரியல் கல்லூரிக்கு சென்றார். ஆனால் அங்கு சென்ற பிறகு வானிலை மீதான ஆர்வத்தால் meteorological instruments-களில் நிபுணத்துவம் பெற்றார்.

Also Read : கைக்குழந்தையுடன் உணவு டெலிவரி செய்யும் தந்தை.. இணையத்தை வென்ற வீடியோ!

1948-ல் லண்டனில் இருந்து திரும்பிய பிறகு, அன்னா மணி புனேயில் உள்ள இந்திய வானிலை ஆய்வு துறையில் (India Meteorological Department) சேர்ந்தார். அங்கு அவர் வானிலை கருவிகளை ஏற்பாடு செய்யும் பொறுப்பில் வகித்தார். இங்கு அவர் வானிலை ஆய்வு கருவிகள் பற்றிய பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார். இந்தியாவில் வானிலை முன்னறிவிப்பிற்கான உள்நாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் அவர் சிறப்பு ஆர்வம் காட்டினார். நாட்டின் சொந்த வானிலை கருவிகளை வடிவமைத்து தயாரிக்க உதவினார். ஆண்கள் ஆதிக்கம் செலுத்திய இந்த துறையில் அன்னா மணி மிகவும் சிறந்து விளங்கினார்.1953 ஆம் ஆண்டு பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வானிலை ஆய்வுக் கருவிகளை ஏற்பாடு செய்வதற்கு மணி பொறுப்பேற்றார், அவர் 121 ஆண்களைக் கொண்ட ஒரு டீமிற்கு தலைவரானார் மற்றும் ஓசோனை அளவிடுவதற்கான கருவியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார். பல கட்டங்களுக்கு பின் இந்திய வானிலை ஆய்வுத் துறையின் துணை இயக்குநர் ஜெனரலாக ஆனார். இவரது தலைமையின் கீழ், 100-க்கும் மேற்பட்ட வானிலை கருவி வடிவமைப்புகள் எளிமைப்படுத்தப்பட்டு உற்பத்திக்கு தரப்படுத்தப்பட்டன.

Also Read : சினிமா பட பாணியில் 8 மாசமாக இயங்கிய போலி காவல்நிலையம்.. மர்ம நபர்கள் சிக்கியது எப்படி.?

1987-ஆம் ஆண்டில் இவர் அறிவியலுக்கான அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்காக INSA கே.ஆர். ராமநாதன் பதக்கத்தை வென்றார். 1950-கள் முழுவதும் சூரிய கதிர்வீச்சு கண்காணிப்பு நிலையங்களின் நெட்வொர்க்கை நிறுவுவதில் கவனம் செலுத்தினார். இவர் ஓய்வு பெற்ற பிறகு, பெங்களூரில் உள்ள ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறங்காவலராக நியமிக்கப்பட்டார். சூரிய மற்றும் காற்றாலை ஆற்றல் சாதனங்களைத் தயாரிக்கும் நிறுவனத்தையும் அவர் நிறுவினார். இவர் கடந்த 2001-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16-ஆம் தேதி தனது 82-வது வயதில் இந்த மண்ணை விட்டு மறைந்தார். நாட்டின் வானவியல் ஆராய்ச்சி துறைக்கும் பெருமை சேர்த்த இவரது அயராத முயற்சியை கவுரவப்படுத்தும் வகையில் கூகுள் இவருக்கு 104-வது பிறந்தநாள் டூடுலை வெளியிட்டு சிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Selvi M
First published:

Tags: Google Doodle, Technology

அடுத்த செய்தி